பராசர மகரிஷி நாபஸ யோகத்தில் சூரியன் முதல் சனி வரையிலான 7 கிரஹங்களை கொண்டு 32 யோகங்கள் கூறியுள்ளார். இதில் ராகு, கேது விடுபட்டுள்ளது.

அதற்கு சிலர் பராசரர் காலத்தில் ராகு, கேது கண்டுபிடிக்க படவில்லை எனவெல்லாம் கூறுகின்றனர். இது தவறு. அப்படியென்றால் பராசர ஹோரையில் பல அத்தியாயத்தில் ராகு, கேதுவை பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன.

ராகு, கேது விற்கு விம்சோத்தரி தசையில் வருடம் கொடுத்த பராசர மகரிஷி ஏன் ராகு, கேது வை நாபஸ யோகத்தில் வைக்கவில்லை என்பதற்கு சரியான காரணம் நாபஸ என்ற வார்த்தைக்கு ”கண்ணால் பார்க்கக்கூடிய வான மண்டல அமைப்பு” அல்லது ”கண்களுக்கு தெரிகிற ஆகாய பொருள்” என்ற அர்த்தமாகும்.
கண்களால் பார்க்கும்போது ராகு கேது தெரிவதில்லை. இவை சாயா கிரஹம் ஆகும். சூரியன், சந்திரன், பூமி ஒன்றுக்கொன்று நேர்க்கோட்டில் நிற்கும் நிலையிலிருந்து ராகு கேது வை கணிக்கும் முறையை பராசர மகரிஷி தன்னுடைய பராசர ஸம்ஹிதாவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கண்ணால் பார்க்கும்போது ராகு, கேது தெரியவில்லை என்பதால் தான் அதனை விடுத்துள்ளார். ஏனெனில் இது நாபஸ யோகம் அல்லது கண்களால் காணக்கூடிய வான் யோகம் என்பதால் தான் ராகு, கேதுவை விடுத்துள்ளனர் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

Related Posts

ஆறாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஆறாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: மிகுதியான சிற்றின்ப வேட்கை, செல்வந்தர், புகழ்பெற்ற குணத்துடன் இருப்பார், அரசர் அல்லது அதற்கினையானவர், படைத்தலைவராகவும் இருப்பார். ஆறாம் பாவத்தில்...
Read More

கிரஹ வேகம் ஒரு பார்வை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்ய துர்காவின் கருணையினாலே… கிரஹங்களின் வேகத்தை பொறுத்து அது சமா,சாரா,அதிசாரா, மந்தா, மந்ததாரா, விகலா போன்ற பெயர்களால் அழைக்கப்படுகிறது. கிரஹங்களின் சாதாரண வேகத்தை பொதுவாக சமா அல்லது...
Read More

யோக பங்கமா/பலமா?

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்யதுர்காவின் கருணையினாலே… நம்மிடம் ஜாதகம் பார்க்க வருபவரிடம் உங்களுக்கு இந்த யோகம் இருக்கிறது, அந்த யோகம் இருக்கிறது என ஜோதிஷர்களாகிய நாம் கூறுவதுண்டு. மனோரீதியாக பார்த்தால் இந்த...
Read More