ஜ்யதுர்காவினை வணங்கி,
கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார்.
இதன் பொருள். உட்ச கிரஹம் முழு பலனையும், மூலத்திரிகோண கிரஹம் முக்கால் பலத்தினையும், ஆட்சி கிரஹம் பாதிபலத்தினையும், நட்பு கிரஹம் கால் பலத்தினையும், சமம் கிரஹம் எட்டில் ஒரு பங்கு பலத்தினையும், நீட்ச/பகை கிரஹம் நிஷ் பலத்தையும் தரும் என்பதாம். தீய பலன்களுக்கு இவற்றினை எதிர்மறையாக கொள்ளவேண்டும்.
பலமான கிரஹங்கள் நன்மையினை முழுமையாக தரும். தீமையை குறைவாக தரும் என்பதே இதன் சுருக்கமான பொருளாகும்.
பலமான கிரஹங்கள் நல்ல பலனை இதன்படி தரும
்
உட்சம் -100%
மூலத்திரிகோணம்- 75%
ஆட்சி-50%
நட்பு -25%
சமம்-12%
நீசம்/ பகை- 0%
உதாரணமாக ஆட்சி பெற்ற கிரஹம் 50% நன்மையை தருவார். அதாவது முழுக்க முழுக்க நன்மையை மட்டுமே செய்யமாட்டார். 50% நன்மையை எதிர்பார்க்கலாம். அதேபோல நட்பு பெற்ற கிரஹம் 25% நன்மையை தருவார்.
இதனைப்போலவே
பலமான கிரஹங்கள் தீய பலனை இதன்படி தரும்
உட்சம் -0%
மூலத்திரிகோணம்- 12%
ஆட்சி-25%
நட்பு -50%
சமம்-75%
நீசம்/ பகை- 100%
ஆட்சி கிரஹம் 25% தீமையை தருவார் என்பதனை கவணிக்கவேண்டும். மேலும் கிரஹங்கள் பகை பெற்றாலும் நீசம் பெற்றாலும் அதற்கு ஒரே மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளதையும் கருத்தில் கொள்ள வேண்டும்.
இங்கு பராசர மகரிஷி குறிப்பிட்டது போல பலனை ஊகிக்கவேண்டுமானால் அதனின் பலத்தினை முதலில் அறிய வேண்டும்.
உட்சம் என்றால் என்ன? மூலத்திரிகோணம் என்றால் என்ன? இதற்கெல்லாம் அளவீடு இருக்கிறதா எனக்கேட்டால் ஆம் இருக்கிறது என்பதே பதிலாகும்.
நிறைய நூல்களில் மேஷம் 10 பாகை சூரியனின் உட்ச பாகை என கூறப்பட்டுள்ளது. அப்படியெனில் 0 முதல் பத்து பாகை வரை உட்ச பாகையா? அல்லது 10 வதுபாகை மட்டும் உட்ச பாகையா? 10 பாகைக்கு பிறகு மேஷ ராசியில் சூரியனின் கதி என்ன? அதனால் நம் கதி என்ன? என்பனவற்றினை அறிவது அவசியமாகிறது.
பராசர ஹோரையின் கருத்துப்படி உட்ச பாகை என கூறுவது அந்த ராசியின் 0 பாகை முதல் அந்த உட்ச பாகை வரை உள்ள பாகை அத்தனையும் உட்ச பாகை ஆகும். உதாரணமாக சூரியன் மேஷராசியின் ஆரம்பமான 0 பாகை முதல் 10 பாகை வரை உட்ச பாகை ஆகும். இதில் எங்கு சூரியன் இருந்தாலும் உட்சமாகத்தான் கொள்ள வேண்டும்.
சரி அடுத்ததாக அனைத்து கிரஹத்திற்கும் உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி பாகையினை ஒவ்வொரு ராசியாக பார்ப்பது சுலபமாக இருக்கும் என நினைக்கிறேன்.
மேஷ சூரியன்
0 முதல் பத்து பாகை வரை உட்சம்
அதாவது அஸ்வினி முதல் மூனு பாதம் மட்டும்.பிறகு
11 முதல் 30 பாகை வரை நட்பு
மேஷ செவ்வாய்-
0 முதல் 12 பாகை வரை மூலத்திகோணம் அதாவது சற்று ஏறக்குறைய அஸ்வினி நக்ஷத்திரம் மட்டும். பிறகு
13 முதல் 30 பாகை வரை ஆட்சி
ரிஷப சந்திரன்
0 முதல் மூன்று பாகை வரை உட்சம்
அதாவது கிருத்திகை 2ம் பாதம் மட்டும்.பிறகு
4 முதல் 30 பாகை வரை மூலத்திரிகோணம்
ரிஷப சுக்கிரன்
ராசி முழுவதும் ஆட்சி
ரிஷப கேது
ராசி முழுவதும் உட்சம்
மிதுன புதன்
ராசி முழுவதும் ஆட்சி
மிதுன ராகு
ராசி முழுவதும் மூலத்திரிகோணம்
கடக குரு
0 முதல் 5 பாகை வரை உட்சம்
அதாவது புனர்பூசம் 4, பூசம் 1ல் சிறிய பகுதி.
பிறகு
6 முதல் 30 பாகை வரை நட்பு
கடக சந்திரன் –
ராசி முழுவதும் ஆட்சி
சிம்ம சூரியன்
0 முதல் 20 பாகை வரை மூலத்திரிகோணம்
அதாவது மகம் முழுவதும், பூரம் 1,2ம் பாதம் மட்டும்.பிறகு
21 முதல் 30 பாகை வரை ஆட்சி.
கன்னி புதன்
0 முதல் 15 பாகை வரை உட்சம்
அதாவது உத்திரம்,2,3,4ம் பாதம், ஹஸ்தம் 1ம் பாதம், ஹஸ்தம் 2ல் சிறிய பகுதி வரை மட்டும்.பிறகு
16 முதல் 20 பாகை வரை மூலத்திரிகோணம். அதாவது ஹஸ்தம் 2,3ம் பாதம் வரை பிறகு
21 முதல் 30 பாகை வரை ஆட்சி அதாவது ஹஸ்தம் 4 மற்றும் சித்திரை 1,2ம் பாதம் வரை
துலா சனி
0 முதல் 20 பாகை வரை உட்சம்
அதாவது சித்திரை3,4ம் பாதம் மற்றும் சுவாதி முழுவதும் பிறகு
21 முதல் 30 பாகை வரை நட்பு
துலா சுக்கிரன்
0 முதல் 15 பாகை வரை மூலத்திரிகோணம்
அதாவது சித்திரை 3,4ம் பாதம், சுவாதி 1,2 பாதம் வரை பிறகு
16 முதல் 30 பாகை வரை ஆட்சி
விருச்சிக செவ்வாய்
ராசி முழுவதும் ஆட்சி
விருச்சிக ராகு
ராசி முழுவதும் உட்சம்
தனுசு குரு
0 முதல் 10 பாகை வரை மூலத்திரிகோணம்
அதாவது மூலம் 1,2 3ம் பாதம் வரை பிறகு
11 முதல் 30 பாகை வரை ஆட்சி
தனுசு கேது
ராசி முழுவதும் மூலத்திரிகோணம்
மகர செவ்வாய்
0 முதல் 28 பாகை வரை உட்சம்
அதாவது உத்திராடம் 2,3,4, திருவோணம் முழுவதும், அவிட்டம் 1ம் பாதம் மட்டும். பிறகு சமம் ஆகிவிடும்.
மகர சனி
ராசி முழுவதும் ஆட்சி
கும்ப சனி
0 முதல் 20 பாகை வரை மூலத்திரிகோணம்
அதாவது அவிட்டம் 3,4ம் பாதம் சதயம் முழுவதும் பிறகு
21 முதல் 30 பாகை வரை ஆட்சி
கும்ப ராகு
ராசி முழுவதும் ஆட்சி
மீன சுக்கிரன்
0 முதல் 27 பாகை வரை உட்சம்
அதாவது ரேவதி 4ம் பாதம் தவிர அனைத்தும் பிறகு 28 முதல் 30 வரை சமம் ஆகிவிடும்
மீன குரு
ராசி முழுவதும் ஆட்சி
உட்சத்திற்கு கொடுக்கப்பட்ட பாகையை போலவே அதற்கு 7வது ராசியில் நீட்சத்தின் பாகை அளவு இருக்கும். நீட்ச பாகை முடிந்த பிறகு
சூரியன் பகை
சந்திரன் சமம்
செவ்வாய் நட்பு
புதன் சமம்
குரு சமம்
சுக்கிரன் நட்பு
சனி பகை
போன்ற கதிகளை அடையும்.
இவற்றினை அறிய மூலத்திரிகோண ராசியிலிருந்து எண்ணி வரும் ராசியானது 5,9,4,8,12,2 வது ராசியாக இருந்தால் நட்பு மற்றவை பகை, உட்ச ராசி நட்பு, ஒன்று பகை மற்றொன்று நட்பாக வந்தால் சமம் போன்ற அடிப்படை விதிகளையே பயன்படுத்திதிருக்கிறேன்.
கிரஹங்கள் ராசியில் அடையும் கதியை பொறுத்து நாம் நன்மை/ தீமையின் அளவீட்டை காண வேண்டும் என்பதுதான் என்னுடைய அவா ஆகும்.
Leave a reply