பராசர மகரிஷி நாபஸ யோகத்தில் சூரியன் முதல் சனி வரையிலான 7 கிரஹங்களை கொண்டு 32 யோகங்கள் கூறியுள்ளார். இதில் ராகு, கேது விடுபட்டுள்ளது.
அதற்கு சிலர் பராசரர் காலத்தில் ராகு, கேது கண்டுபிடிக்க படவில்லை எனவெல்லாம் கூறுகின்றனர். இது தவறு. அப்படியென்றால் பராசர ஹோரையில் பல அத்தியாயத்தில் ராகு, கேதுவை பற்றி பல குறிப்புகள் காணப்படுகின்றன.
ராகு, கேது விற்கு விம்சோத்தரி தசையில் வருடம் கொடுத்த பராசர மகரிஷி ஏன் ராகு, கேது வை நாபஸ யோகத்தில் வைக்கவில்லை என்பதற்கு சரியான காரணம் நாபஸ என்ற வார்த்தைக்கு ”கண்ணால் பார்க்கக்கூடிய வான மண்டல அமைப்பு” அல்லது ”கண்களுக்கு தெரிகிற ஆகாய பொருள்” என்ற அர்த்தமாகும்.
கண்களால் பார்க்கும்போது ராகு கேது தெரிவதில்லை. இவை சாயா கிரஹம் ஆகும். சூரியன், சந்திரன், பூமி ஒன்றுக்கொன்று நேர்க்கோட்டில் நிற்கும் நிலையிலிருந்து ராகு கேது வை கணிக்கும் முறையை பராசர மகரிஷி தன்னுடைய பராசர ஸம்ஹிதாவில் தெளிவுபடுத்தியுள்ளார்.
கண்ணால் பார்க்கும்போது ராகு, கேது தெரியவில்லை என்பதால் தான் அதனை விடுத்துள்ளார். ஏனெனில் இது நாபஸ யோகம் அல்லது கண்களால் காணக்கூடிய வான் யோகம் என்பதால் தான் ராகு, கேதுவை விடுத்துள்ளனர் என்பதனை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
Leave a reply