பராசரர் ஜென்ம லக்கினத்தை போன்றே பிற மூன்று லக்கினங்களும் மிகவும் முக்கியமென கூறுகிறார்.
அவை முறையே 1.பாவ லக்கினம், 2. ஹோரா லக்கினம், 3. கடிக (நாழிகை) லக்கினம் ஆகும்.
பாவ லல்கினம், ஹோராலக்கினம், கடிக லக்கினம் கணிக்கும் முறையை சுருக்கமாக தெரிந்துகொள்வோம்.
1.பாவ லக்கினம் கணிக்கும் முறை.
சூரியன் இருக்கும் ஸ்புடத்திலிருந்து சரியாக 2 மணி நேரம் மற்ற ராசிகளில் அதே ஸ்புடத்தை கடப்பது பாவ லக்கினமாகும். இது 4 நிமிடத்திற்க்கு ஒரு பாகை வீதம் கடக்கும்.
உதாரனமாக சூரியன் மேஷ ராசியில் 10 டிகிரியில் இருந்தால் சூரிய உதயத்திலிருந்து 2 மணி நேரத்தில் ரிஷப 10 டிகிரியையும், 4 மணி நேரத்தில் மிதுன 10 டிகிரியையும், 5 மணி நேரத்தில் மிதுன 25 டிகிரியையும் கொண்டிருக்கும். பிறந்த நேரத்திலிருந்து
சூரிய உதயத்தை கழித்து மீதம் வரும் நேரத்தை 2 மணிக்கு ஒரு ராசியாக கொள்வதே பாவ லக்கினமாகும்.
2.ஹோரா லக்கினம் கணிக்கும் முறை.
பிறந்த நேரத்திலிருந்து சூரிய உதயத்தினை கழிக்க வரும் நேரத்தை 2 ஆல் வகுத்து கிடைக்கும் நிமிடத்தையே பாகையாக கொண்டு சூரியன் ஸ்புடத்திலிருந்து கூட்ட வரும் ராசி ஸ்புடமே ஹோரா லக்கின ஸ்புடம் ஆகும்.
சூரிய உதயம் 6.மணி
சூரியன் மேஷம் 10 டிகிரி
பிறந்த நேரம். காலை 10 மணி
உதய நேரம் 4 மணி அல்லது 240 நிமிடம்
2 ஆல் வகுக்க 120
சூரிய பாகையுடன் கூட்ட சிம்மம் 10 டிகிரி
3.கடிகா லக்னம்
கடிகா என்ற சொல்லுக்கு நாழிகை அல்லது 24 நிமிடம் என்று பொருள்.பிற்ந்த நாழிகையினை சூரியன் நின்ற ராசியிலிருந்து எண்ணி வருவதே கடி லக்கினம் ஆகும்.
விசேஷ லக்னத்தின் பயன்பாடு.
இது வெறும் கணக்கீடா அல்லது பலன் கூற உதவுமா? அப்படியென்றால் இதனை வைத்து எவ்வாறு பலன் கூறுவது? இது நம் எல்லோர் மனதிலும் உள்ள கேள்வி.
விசேஷ லக்கினத்தை பற்றி பேசும்போது, என்னுடைய நண்பர்கள் சிலர், “ஒரு லக்கினத்தை வைத்து பலன் கூறும்போதே ஆயிரத்தெட்டு குழப்பம், இதில் இன்னொரு மூன்று லக்கினமா?” என நொந்துகொள்வதுண்டு.
நண்பர்களே! இது அவர்களுக்கு மட்டுமல்ல உங்களுக்காகவும் கூறுகிறேன் ஒரு லக்கினத்தை வைத்து பலன் பார்ப்பதை விட மூன்று லக்கினத்தை வைத்து பலன் பார்ப்பது மிக எளிது.
சற்று சிந்தித்து பாருங்கள் ஒரே ஒரு கிரஹம் மட்டும் இருந்து பலன் கூறினால் எவ்வளவு கடினமாக இருக்கும்!. ஒன்பது கிரஹம் இருப்பதினால் தான் நம்மால் சுலபமாக பலன் கூற முடிகிறது.
என்னுடைய அப்பாவின் தாத்தா திருப்பதி வேதாகம பாடசாலையில் பண்டிதராகவும், பிரின்ஸ்பாலாகவும் இருந்து ஓய்வு பெற்றவர். 85 வயதை கடந்து இன்னும் இருக்கிறார். அவரிடம் பேசிகொண்டு இருக்கும் போது கும்பாபிஷேகத்திற்கு நேத்ரம், ஜீவன் சரியாக இருந்தால் மட்டும் போதாது ஸ்திர லக்னத்தில் கடிகா லக்னம் சரியாக இருக்கவேண்டும் என தெரிவித்தார். மேலும் இது அந்நாளில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தது எனவும் தெரிவித்தார்.
பொதுவாக முகூர்த்தம் ஒன்றரை மணி நேரம் இருந்தாலும் கடிகா லக்கினத்தை கொண்டு தாலி கட்டும் நேரத்தையும், குடமுழுக்கு செய்யும் நேரத்தையும் சரியாக குறித்தெனர்.
பிறந்த ஜாதகத்தில் ஜன்ம லக்னம், பாவ லக்னம், ஹோரா லக்னம், கடிக லக்னம் இவற்றின் ராசி அதிபதிகள் ஒன்றுக்கொன்று நன்பர்களாக இருந்தாலே அந்த ஜாதகத்தை வலிமையாக கருதலாம்.
மேலும் ஜன்ம லக்னெத்திற்கு திரிகோணத்தில் அல்லது கேந்திரத்தில் மற்ற லக்கினங்கள் அமைந்தாலும் லக்கின வலிமையை எடுத்துக்காட்டும்.
ஜன்ம லக்கினத்தின் 5 மற்றும் 9ம் இடத்து அதிபதிகளே மற்ற மூன்று லக்கினத்தின் அதிபதிகளாக இருந்தால் ஜாதகர் அதிர்ஷ்டக்காரர்.
இதனைப்போலவே ஜன்ம லக்கினத்தின் 2 ம் வீட்டு அதிபதி, 3ம் வீட்டு அதிபதி மற்ற 3 லக்கினத்தின் 2ம் வீடு, 3ம் வீடு அதிபதிகளுடன் ஒன்றுக்கொன்று நட்பாக இருந்தால் அந்த பாவம் ஜாதகருக்கு யோகம், அதிர்ஷ்டம் தரும்.
இவ்வாறு கூறிகொண்டே போனால் பல பக்கங்கள் ஆகுமென்பதால் இதனுடைய விரிவாக்கத்தை பின்னர் தருகிறேன்.
Leave a reply