ஆறாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மிகுதியான சிற்றின்ப வேட்கை, செல்வந்தர், புகழ்பெற்ற குணத்துடன் இருப்பார், அரசர் அல்லது அதற்கினையானவர், படைத்தலைவராகவும் இருப்பார்.
ஆறாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
அதிகபடியான பகைவர்கள் உடையவர், கடினமானவர், வலிமை குன்றியிருத்தல், சிற்றின்ப வேட்கை, வயிறு நோயினால் பாதிக்கப்படுதல், தேய்பிறை சந்திரனாக இருந்தால் குறைந்த ஆயுள் உள்ளவர்.
ஆறாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
சிற்றின்ப வேட்கை, மிகுதியான வெப்ப உடல், உயரமானவர், வலிமையுள்ளவர்கள், தனது உறவினர்களை வெற்றி கொள்பவர், முக்கியமானவர்.
ஆறாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
வாதம் செய்பவர், பிரச்சனைகள் மற்றும் கலகங்களால் எப்போதும் வெற்றி காண்பவர், நோயாளி, சோம்பல் உள்ளவர், சினமின்மை, கடினமான வார்த்தைகள், பெரும்பாலும் தோல்வியையே சந்திப்பவர், வெற்றியடைய போராடுபவர்.
ஆறாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மந்திரம் மற்றும் வெகுமானங்களில் திறமையானவர், தோல்வியடைதல், பெண்களிடம் அச்சம் கொள்பவர், சோம்பல், நோய் உள்ளவர், பகைவரை வெல்லுதல், புகழுடையவர்.
ஆறாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
பெண்களுக்கு விருப்பம் இல்லாதவர், கூடுதல் பகைவர்கள் உள்ளவர், சுகவாழ்க்கை எதுவும் இல்லாதவர், துக்கம், தாழ்மையான குணம் உடையவர், எதிரிகளால் ஏமாற்றப்படுபவர்.
ஆறாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மிகுதியான சிற்றின்ப வேட்கை, கட்டுடல், வீரம் உள்ளவர், கூடுதலாக உண்ணுபவர், தீய குணம் உள்ளவர், பல அமைப்பில் பகைவர்களை அழிப்பவர், இவரது செயல்பாடுகளை கண்டு பகைவர்கள் அஞ்சுவர்.
ஆறாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:
நீண்ட ஆயுளும், செல்வமும் தரும்
ஆறாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:
பெருந்தன்மையானவர், அநேக நற்குணங்கள் உடையவர். அழியாப் புகழ் உடையவர், உறுதியும், அந்தஸ்தும் உடையவர். எதிரிகளை வீழ்த்துபவர். தனது விருப்பங்களை நிறைவேற்றுபவர்.
Leave a reply