ஐந்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
இன்பமற்றவர், உறவினர் மற்றும் மக்கட்பேறில்லாதவர், வனம், மலைகளில் அலைபவர், விவசாயம் செய்தல், நிலையற்ற தன்மை, திறமை குறைந்தவர், குறைந்த ஆயுள் உள்ளவர்.
ஐந்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
கூடுதலான மகப்பேறு உள்ளவர், உறவினர்கள் மற்றம் வசதியும் உள்ளவர், இன்பமனுபவித்தல், அறிவாளி, அழகுள்ளவர், கல்வி, ஆடை, உணவு வகை போன்ற அடையும் தன்மையுள்ளவர்.
ஐந்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
இன்பம், பொருள் மற்றும் மக்கட்பேறு குறைந்தவர், நிலையற்றவர், கருமி, தீயவர், எப்போதும் நீங்காத தீங்குகளை செய்பவர், தாழ்ந்த குணம் உடையவர்.
ஐந்தாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மந்திரம் மற்றும் மாயமந்திரங்களால் திறமையுள்ளவர், மிகுதியான மக்கட்பேறு, பண்டிதம், இன்பம், எப்போதும் மகிழ்ச்சி புகழ் உள்ளவர்.
ஐந்தாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:
இன்பமுள்ளவர், மக்கட்பேறு, உறவினர்கள் உள்ளவர், திறமை, அறிவு, ஆற்றல், வீரம் உள்ளவர். பயனான செயல்கள் செய்தல், எவ்விடத்திலும் மகிழ்ச்சியுடையவர்.
ஐந்தாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்
நல்லின்பமும், மக்கட்பேறும், நல்ல நண்பர்களும் இருப்பர். சிற்றின்பத்தில் திறமையானவர், பெருஞ்செல்வந்தர், நடுநிலைமை இல்லாதவர், அரசருக்கு அமைச்சராகவோ அல்லது படை தலைவராகவோ ஆகின்றவர்.
ஐந்தாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மக்கட்பேறு, உறவினர் இல்லாதவர், அறிவற்றவர், மானமின்மை (பைத்தியம்) மனநோயாளி, ஏழ்மையற்றவர், குடும்ப இன்பத்தை வெறுப்பவர், மனகலக்கம் உள்ளவர், துன்பமுள்ளவர், எந்த செயல்பாடுகளிலும் நாட்ட மற்றவர்.
ஐந்தாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:
இவர் பேச்சு மூக்கால் பேசுவது போல் ஒலிக்கும். குழந்தைகள் இல்லை. கொடூரமனம் கொண்டவர். எதிரிகளால் துன்பமடைபவர். வயிற்றிலும், மலக்குடல் பகுதியிலும் நோய் உள்ளவர்.
ஐந்தாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:
குழந்தைகள் பாதிப்பு அடையும் வயிற்றில் நோயும், பிசாசு போன்றவற்றால் துன்பமும் நேரும். வஞ்சக மனம் உடையவர்.
Leave a reply