ஜ்ய துர்காவின் பாதம் பணிந்து…
யோகம் – ஆகாச தத்துவம் – குரு – ஒத்துழைத்தல் & உடனுழைத்தல்
யோகம் என்றால் சேர்த்தல், இணைத்தல் என்றும், திதி என்றால் பிரித்தல், கழித்தல் என்றும் பொருள் கொள்ளலாம்.
சந்திரனின் பாகையிடமிருந்து சூரியனின் பாகையை கூட்டினால் யோகம் ஆகும்.
சந்திரனின் பாகையிலிருந்து சூரியனின் பாகையினை கழித்தால் அது திதி ஆகும்.
சந்திர சூரிய பாகையினை கூட்டி யோகமானதால் இதற்கு தேவ குருவான பிருஹஸ்பதியே அதிபதியாவார்.
சந்திர சூரிய பாகையினை கழித்து திதி வந்ததால் இதற்கு அசுர குருவான சுக்கிராச்சாரியரே அதிபதியாவார்..
சரி யோகத்திற்கு அதிபதியான குரு ஆகாச தத்துவம் உடையது. எனவே பஞ்சாங்கத்தில் ஒன்றாகிய யோகம் ஆகாசமாக கொள்ளவேண்டும்.
மேலும் இதில் ஒரு சுவாரசியமான தகவலும் உள்ளது. என்னவெனில் யோகத்தின் நாதனை கணக்கிட அனைவரும் பூசம் நக்ஷத்திரத்திலிருந்தே ஆரம்பமாக கொண்டு யோகி நாதனை அறிவர்.
யோகம் ஆகாச தத்துவமாகி குருவினை குறிப்பிடுகிறது.. பூச நக்ஷத்திரம் தான் குரு பகவான் உட்சம் அடையக்கூடிய நக்ஷத்திரம் ஆகும். கடக ராசியின் 5 பாகையில் பூச நக்ஷத்திரத்தில் தோராயமாக 2வது பாகையில் குரு அதி உட்சம் அடைகிறார்.
மேலும் 27 நக்ஷத்திரத்திற்கும் ஒவ்வொரு அதிபதி உண்டு. அதில் பூசம் நக்ஷத்திரத்தின் அதிபதி பிருஹஸ்பதியே ஆவார்.
அதனாலயே முதல் யோகமான விஷ்கும்பம் முதல் 27 யோகத்திற்கும் அதனதன் நாதன் ஆனது பூசம் நக்ஷத்திரத்தினை முதலாவதாக கொண்டு கண்டுபிடிக்கப்படுகிறது உதாரணமாக விஷகும்பம் யோகத்திலிருந்து 6 வது யோகம் அதிகண்டம் ஆகும்..இதன் அதிபதியினை அறிய பூசம் நக்ஷத்திலிருந்து 6 வது நக்ஷத்திரத்தினை எண்ணினால் கிடைக்கும் ஹஸ்த நக்ஷத்திர அதிபதியான சந்திரனே அதிகண்டத்தின் அதிபதி ஆவார்… இதனைப்போல ஒரு யோகத்தின் அதிபதியை அறிய விஷகும்பத்தில் இருந்து எண்ணி வரும் தொகையை பூசம் நக்ஷத்திரத்தில் இருந்து எண்ணி வரும் நக்ஷத்திர அதிபதியே யோக அதிபதி அதாவது யோகி கிரஹம் ஆவார்….
27 யோகத்திற்கும் பெயர் விளக்கமும், அதற்குண்டான யோகி கிரஹம் எது எனவும் அடுத்த பதிவில் காண்போம்.

Related Posts

மூலிகை மருந்து செய்ய உகந்த நேரம்

Parasari Dr. B. Ayyappa Sharma
மாதம்: சித்திரை, வைகாசி மிகவும் உகந்ததது. அடுத்தபடியாக ஆனி, ஆடி மாதங்களில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற மாதங்களில் மருந்துகள் செய்தால் தீமை பயக்கும். கிழமை:...
Read More

ஆறாமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஆறாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் எப்பொழுதும் நோயளியாக அல்லது கடனாளியாக இருப்பதும் விபத்துக்குள்ளாக நேர்தலும் வழக்கு வியாஜ்ஜியங்களில் மனோ துக்கம் அடைதலும் மரணத்திற்குச் சமமானகண்டங்களும் ஏற்படும்....
Read More

ஒன்பதாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: செல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர்....
Read More