உத்ரகாலாமிருதம் கூறும் பாவகாரகங்கள்
லக்னம் முதல் 12 பாவங்களிலிருந்து தெரிந்துக் கொள்ளும் விபரங்களை உத்திரகாலாமிர்தத்தில் காளிதாசர் கூறியுள்ளார். மேலும் பிருகு முனிவர், ஜெய்மினி, பராசரர் போன்றவர்களும் பாவங்களைப் பற்றியும் அவற்றிலிருந்து நாம் அறிந்துக் கொள்ளும் விஷயங்கள் பற்றியும் கூறியுள்ளனர். இங்கு உத்ரகாலாமிருதத்தில் கூறும் பாவகாரகங்களை பார்ப்போம். இராசிச் சக்கரத்தில் 12 வீடுகள் அல்லது பாவங்கள் உள்ளது. முதல் பாவத்தை லக்னம் என்று சொல்கிறோம்.
லக்ன பாவம் :
தேகம், அவயவம், மகிழ்ச்சி, துக்கம் முதிர் வயது, அறிவு, பிறந்த இடம், புகழ், கனவு, பலம். கௌரவம், ராஜதந்திரம், ஆயுள், அமைதி, வயது, கேசம், தோற்றம், கர்வம், ஜீவனம், பிறருக்கா சூதாடுதல், கலங்கம், சூட்டுத் தழும்பு, கவுரவ பட்டங்கள், தோள். தூக்கம், அறிவுத்திறமை, தேர்ச்சி, மற்றவர் பணத்தைக் கையாடல் செய்தல், பிறரை அவமதிக்கும் குணம், நோயிலிருந்து விடுதலை, திருப்தியில்லாமை, இயற்கைச் சுபாவம், மற்றவர்க்கு உழைத்தல், கால் நடைகளை வளர்க்கும் திறமை, ஒழுக்கம் தவறுதல், தனது குலத்தில் அவமானம் அல்லது கௌரவம்.
2-ம் பாவம் :
வாக்கு. செல்வம், ஐதீக நம்பிக்கை, பரோபகாரம், விரல் நகங்கள், சுகம் அனுபவித்தல், நேர்மை, கபடம், நாக்கு, கண்கள், அணிகலன்கள், வைரம், தாமிரம், ரத்தினம். முத்து, உறுதி, வாசைன திரவியம், குடும்ப உறவு, வர்த்தகம், மிருதுவான பேச்சு, பெருந்தன்மை, செல்வம் சேர்க்கும் முயற்சி, நட்பு, நண்பன், விவேகம், கருமித்தனம், பேச்சாற்றல், வித்தை, பாண்டித்தியம், தங்கம், வெள்ளி, நவதானியங்கள், அடக்கம், மூக்கு, திட புத்தி, தன்னைச்சார்ந்தவரை ஆதரித்தல், போக்குவரத்து விதிகள், திறமை;, மாரகம்.
3-ம் பாவம் :
தைரியம், சகோதரர்கள், யுத்தம், காதுகள், கால்கள், சாலையோர இடம், மனக்குழப்பம், தகுதி, கடவுள், துக்கம், கனவு, ராணுவம், வீர-தீரம், உறவினர், நண்பர்கள், அலைச்சல், தொண்டை, சுகாதாரமான உணவு உண்ணுதல், சொத்து பிரிவினை, ஆபரணங்கள், நல்ல பண்புகள், படிக்கும் ஆர்வம், பொழுது போக்கு, உடல் பலம், லாபம், உடல்வளர்ச்சி, உயர் பரம்பரை, வேலையாட்கள், ஆள்காட்டி விரலுக்கும் பெருவிரலுக்கும் இடையே உள்ள தூரம், பெண் வேலையாட்கள். சிறு வாகனம், சிறு பிரயாணம், திரிந்து செய்யும் வியாபாரம், மதகடமைகள்.
4-ம் பாவம் :
கல்வி, ராஜ்ஜியம், வீடு, பயணம், வாகனம், படகு, எண்ணைக் குளியல், தாயார், உறவினர், நண்பர்கள், குலம், ஆடை, கிணறு, தண்ணீர், பால், வாசனை திரவியம், மகிழ்ச்சியான வாழ்வு, நற்பெயர், வைதீக சாஸ்த்திரம், நம்பிக்கை, பொய்யான குற்றச் சாட்டு, கூடாரம், வெற்றி, சலிப்பான வேலை, நிலம், தோட்டம், குளம் வெட்டுதல், பொதுநலச் சேவை, தாய்வழி உறவு, தூய அறிவு, தந்தையின் ஆயுள், சேமிப்பு, மாளிகை, கலை, வீட்டை இழத்தல், தந்தையின் சொத்து, தேவதைகளுக்கு உணவளித்தல், களவு போன பொருட்களைக் கண்டறிதல், எறும்பு புற்று, வேத நூல் அறிவு, எருமைகள், பசுக்கள், குதிரைகள், யானை, தானிய சேமிப்பு, வயல்.
5-ம் பாவம் :
சாஸ்த்திர விருத்தி, தந்தையால் செய்யப்படும் புண்ணிய காரியங்கள், அரசன், மந்திரி, நல்ல நீதிகள், இயந்திரங்கள் கையாளும் திறமை, மனம், கற்பனை, கற்பம், முன்னெச்சரிக்கை, நீதிக்கதைகள், குடை, சுபச் செய்திகள், ஆடைகள், சுதந்திரமானப் போக்கு, மூதாதையர் சொத்து, முன்னறியும் திறன், மனைவி வழி சொத்து, பரத்தையர் உறவு, ஆழ்ந்த மற்றும் நட்பமான அறிவு, உறுதியான உள்ளம், ரகசியம் காத்தல், நல்ல ஒழுக்கம், நல்ல பண்பகளும் பழக்க வழக்கங்களும், செய்திச் சேகரித்தல், ஆரோக்கியம், நட்பு, இலக்கியப் படைப்பு, வியாபார ஈடுபாடு, மந்திர பிரார்த்தனை, குபேரனைப் போன்ற செல்வம், அன்னதானம், பாவ- புண்ணியம் பார்த்தல், வேத கீர்த்தனை, சூட்சும புத்தி, ஆழ்ந்த சிந்தனை, சம்பாதிக்கும் வழிகள் அறிதல், வாத்தியங்களின் இசை, பூரண திருப்தி, ஆழ்ந்த படிப்பு, பாரம்பரிய பதவி, குழந்தைகள், பந்தயம், விளையாட்டுகள், பொழுது போக்குகள்.
6-ம் பாவம் :
நோய், இடையூறுகள், சண்டைகள், தாய் வழி மாமன், கபம், உடல் வீக்கம், கொடுஞ்செயல்கள், பைத்தியம், உடல் கட்டிகள். விரோதம், கருமித்தனம், மர்ம உறுப்பில் காயம், சாதம், களைப்பு, கடன், பழிச்சொல், எதிரிகளிடம் தோல்வி அல்லது வெற்றி, ஷயரோகம், சூடு, காயம், மனக்கவலை, கடும் வேதனை, பலருடன் பகைக் கொள்ளல், இடைவிடாத கண் நோய், தொந்தரவு, பிச்சை பெறுதல், அகால போஜனம். தவறி விழுதல், தாயாதிகள் வழி துன்பங்களும் தொல்லைகளும், மன பயம், உழைப்பு, விஷம், கடும் வயிற்று வலி, கீழ் வாதம், கால் விலங்கு, சுய கௌரவம் கெடுதல் அல்லது காப்பாற்றுதல், சிறு நீர்க் கோளாறுகள், சீதபேதி, அறுசுவைகள், ஆபத்து, சிறைச்சாலை, பிறரிடம் கருத்து வேறுபாடு, கடன் படுதல் அல்லது கடனைத் திருப்பித் தருதல்.
7-ம் பாவம் :
திருமணம், கற்புக் கெடுதல், காதல் வெற்றி அல்லது தோல்வி, துர்குணப் பெண்ணின் சேர்க்கை, குறுக்கு வழியில் செயல்படுதல், நல்ல வாசைனை திரவியம், இசை, மலர்கள், காரமான உணவு, நல்ல பானங்களை உட்கொள்ளதல், தாம்பூலம் தரித்தல், பயணத் தடங்கல், ஞாபக மறதி, தயிர், ஆடம்பரமான ஆடைகள், விந்து, கணவனின் கற்பு, மறுமணம், ஆண்-பெண் மர்ம உறுப்பு, சிறுநீர், குதம், வர்த்தகம், இனிப்பு பானம், தேன், நெய், அன்பளிப்பு, அதிகார துஷ்பிரயோகம், சத்ரு நாசம், சேமிப்பு, வாக்கு வாதம், உடலுறவு, தத்தெடுத்தல், வெளியிடத்தில் வசித்தல், மனைவி, களவு, உடலுறவு ரகசியங்களை அறிதல், விவாகரத்து, குடும்ப சண்டை.
8-ம் பாவம் :
ஆயுள், மகிழ்ச்சி, தோல்வி, நஷ்ட ஈடு, வாடிய முகம், உறவினர் மரணத்தால் துக்கம், ஏவல், பில்லி மற்றும் சூனியக் கலைகளில் ஆர்வம், உணவுக்காக சண்டைப் போடுதல், சிறு நீர் நோய், கண்டம், சகோதரரின் எதிரி, மனைவியை அவமதித்தல், குடும்ப பண நஷ்டம், கடன் கொடுத்தல் அல்லது வாங்குதல், எதிரியின் கோட்டை, துன்பம், சோம்பேரித்தனம், வீண் பொழுதுப் போக்கு, அரச தண்டனை, பயம், நீடித்த சொத்து, கடவுளை வணங்க முன் நிற்பவர், பாவம், கொலை-குத்து-வெட்டு, அளவில்லாத துன்பம், திகில் மற்றும் மர்மக் கதைகள், தொடர்ச்சியான துரதிர்ஷ்ட நிகழ்வுகள், கொடிய செயல்களில் ஈடுபாடு, சண்டை மற்றும் கடுமையான மனத்துயரம்.
9-ம் பாவம் :
தானம், புண்ணியம், புண்ணிய தீர்த்தமாடுதல், மதச் சடங்குகள், மத தண்டனை, பெரியோர் வணக்கம், மருந்துகள், ஒழுக்கம், நேர்மை, நன்மக்கள் சேர்க்கை, கடவுள் வழிபாடு, அயராத படிப்பு, புத்தி கூர்மை, வாகனம், தன சம்பத்து கொள்கை, கௌரவம். நீதிக் கதைகள், பயணம், தானம் கொடுத்தல், மகிழ்ச்சி, தந்தை வழிச் சொத்து, மகன், மகள், ஜஸ்வர்யம், குதிரைகள், யானைகள், முடிசூட்டும் மண்டபம், மத காணிக்கை, பணப் புழக்கம், பிரம்ம ஞானம், கொடைத் தன்மை, யாத்திரை.
10-ம் பாவம் :
வர்த்தகம், ராஜ வெகுமானம், குதிரை ஏற்றம், விளையாட்டுப் போட்டிகள், அரசு உத்தியோகம், பொதுத் தொண்டு, விவசாயம். வைத்தியம், புகழ், பண சேமிப்பு, தியானம், தியாகம், தலைமைத் தாங்குதல், மூத்தோர்கள், தாயத்து, மந்திரம், புண்ணியம், மருந்து. தொடை, கடவுள், மந்திர சித்தி, முன்னேற்றம், தத்துக் குழந்தை, எஜமான், சாலை, கௌரவம். இளவரசர், புகழ், போதனை, முடிவெடுத்தல், தலைமை அதிகாரம், பணிவு, வியாபாரம்.
11-ம் பாவம் :
சகலவித லாபம், கெட்ட ஆசை, ஊழியர், மூத்த உடன்பிறப்பு, தெய்வ வழிபாடு, புனித யாத்திரை, படிப்பு, பணசேர்க்கை மற்றும் சேமிப்பு, அதிபுத்திசாலித்தனம், மூதாதையர் சொத்து, கால் மூட்டு, தலைமை அதிகாரப் பீடம், ஆபரணம், முத்துக்கள் மீது விருப்பம், எஜமானர் சொத்து, வட்டி, நஷ்டம், விவேகம், மந்திரிப் பதவி, மைத்துனர், லாபம், அதிர்ஷ்டம் தேடி வருதல், ஆசை நிறைவேறுதல், இலகுவான வரவு,
12-ம் பாவம் :
மன வேதனை, பாதங்கள், எதிரி பயம், சிறை தண்டனை, வலி நிவாரணம், கடனைச் செலுத்துதல், யானை, குதிரை, மூதாதையர் செல்வம், எதிரி, மோட்சம், இடது கண், பொது மக்கள் விரோதம். அங்கம் அறுபடுதல், தீரச் செயல், திருமணத்தால் உண்டாகும் நஷ்டம், தூக்கம் குறைதல், வாக்கத் தவறதல், வேலை நீக்கம், மனப் போராட்டம், துரதிர்ஷ்டம், தீங்கு செய்தல். பிறருக்குத் துன்பம் தருதல், வாக்குவாதம், தகராறு, கோபம், உடல் காயங்கள், மரணம், இடமாற்றம், அனைத்து விதமான செலவுகள்.
Leave a reply