பதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெரும் பொருள் ஈட்டுதல், வலிமை, பிறரை மதியாமை, அடிமை பணி, நன்றியுடையவர், அடிமைகளை வெறுப்பவர், விருப்பமில்லாமை கொடுத்த பணிகளை செய்து முடித்தல்.

பதினோராம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம், மிகுதியான மக்கட் செல்வம், தீர்க்க ஆயுள், தனக்கு நன்மை தரும் பணியாட்கள், கபடமற்ற மனதை உடையவர், வீரம், புகழ் உடையவர்.

பதினோராம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெருஞ்செல்வம், லாபம் உடையவர், நண்பர்கள் மற்றும் இனபம் உள்ளவர், வீரம், மக்கட்பேறு, தைரியம் போன்ற இவைகள் எப்போதும் உடையவர், துக்கமில்லாதவர்.

பதினோராம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வந்தர், தனக்கு கீழ்படிந்துள்ள பணியாட்களை உடையவர், அறிவுடையவர், மிகுதியான இன்ப போகமுடையவர், முழு ஆயுள், புகழ் பெற்றவர்.

பதினோராம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பற்பல பொருட்கள் (செல்வங்கள்) வரவிற்கு காரணமானவர், வாகனங்கள், பணியாட்கள், வெகுமானங்கள் உடையவர், மிகுதியான கல்வி, மக்கட்பேறு குறைந்தவர், சிறந்த பண்பாளர்.

பதினோராம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அழகுள்ள மனைவி, பணியாட்கள், கூடுதல் பொருட்கள் வரவு மற்றம் அனைத்து வசதிகளையும் இன்பங்களையும் அனுபவித்தல்.

பதினோராம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

முழு ஆயுள் உள்ளவர், கலக்கம், குழப்பம் இல்லாதவர், சுபவைபவங்களுடன் இருப்பவர், வீரம், சிறந்த தொழில் செய்தல் நோயின்மை, செல்வம், மக்கள் உடையவர்.

பதினோராம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அதிக குழந்தைகள் இராது. நல்ல வளமான வாழ்க்கை உடையவர். நீண்ட ஆயுளும், காதில் நோயும் உள்ளவர்.

பதினோராம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம் சேர்ப்பவர், நற்குணங்கள் பல உடையவர். நன்றாக வாழ்வை அனுபவிப்பவர். தனக்கு தேவையான அனைத்தும் பெறுபவர்.

Related Posts

ஆறாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஆறாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: மிகுதியான சிற்றின்ப வேட்கை, செல்வந்தர், புகழ்பெற்ற குணத்துடன் இருப்பார், அரசர் அல்லது அதற்கினையானவர், படைத்தலைவராகவும் இருப்பார். ஆறாம் பாவத்தில்...
Read More

பராசரரின் நாபஸ யோகம்.

Parasari Dr. B. Ayyappa Sharma
பராசர மகரிஷி நாபஸ யோகத்தில் சூரியன் முதல் சனி வரையிலான 7 கிரஹங்களை கொண்டு 32 யோகங்கள் கூறியுள்ளார். இதில் ராகு, கேது விடுபட்டுள்ளது. அதற்கு சிலர்...
Read More

சூரியன் பாவத்தில் இருக்கும் பலன் பொதுவானது.

Parasari Dr. B. Ayyappa Sharma
  ஜயதுர்காவின் கருணையினாலே!!! சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹத்தில் தான் ஜாதகருக்கு அகம்பாவம், திமிரு, அகந்தை இருக்கும். ஜாதகரை கோபப்படுத்த அந்த பாவ...
Read More