ஜயதுர்காவின் கருணையினாலே!!
சூரிய மண்டலத்திலுள்ள அனைத்து கோள்களையும் சூரியன் ஒருங்கிணைத்து ஒரு சீரான சுழற்சிக்கு வழி ஏற்படுத்துகிறது.
அதுபோலவே நாட்டை ஆள்பவர்களும் மக்களை ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் நாட்டை ஆள்கின்றனர்.
நம் இதயமானது ரத்தத்தை ஒருங்கிணைந்து ஒரே இடத்திற்கு கொண்டு வருவதால் தான் நம்முடைய உடல் சீராக இயங்கும்.
ஒரு படைப்பாளி வெவ்வேறானவற்றை ஒருங்கிணைத்து ஒரு படைப்பை கொண்டுவருகிறான்.
சூரியன் ராஜா, இதயம், படைப்பாளி போன்றவைகளுக்கும் இதனுடைய வெளிப்பாட்டிற்கும் காரஹம் ஆகிறார்.
ஒரேகுடையின் கீழ் ஆட்சி செய்யும் ராஜாவிற்கு கோபம், அகங்காரம்,மரியாதை, மதிப்பு, விசுவாசம் எதிர்பார்த்தல், அதிகாரம், தனிதன்மை, பெருந்தன்மை, குறிக்கோள், ஆளும்திறன், பிறரை அடக்குதல், கட்டுப்படுத்துதல், நிர்வகித்தல் போன்றவை இயல்பாகவே ஏற்படுகிறது.
ரத்தத்தை ஒருங்கிணைக்கும் இதயத்தால் உடல் வலிமை, தைரியம், மனிதநேயம் போன்றவையும், பல பொருட்களை ஒன்றிணைக்கும் படைப்பாளிக்கு புத்திசாலித்தனம், பொழுதுபோக்கு போன்றவையும் வெளிப்பாடாக அமைகிறது.
உலகில் அனைவருக்கும் பொதுவாகவே சூரியன் ஒளி தருகிறது. சூரியனே அனைவரையும் ஒன்றிணைக்கிறது.
Leave a reply