பராசர மகரிஷி பிருஹத் பராசர ஹோரா சாஸ்திரத்தில் ராசிப்பார்வை பற்றி விவரிக்கிறார். அதன்படி சர ராசியை தனக்கு அடுத்துள்ள ஸ்திர ராசி தவிர மற்ற அனைத்து ஸ்திர ராசியும் பார்க்கும்.
அதேபோல் ஸ்திர ராசியை தனக்கு அடுத்துள்ள சர ராசி தவிர மற்ற அனைத்து சர ராசியும் பார்க்கும்.
உபய ராசியை மற்ற உபய ராசிகள் பார்க்கும்.
பராசர மகரிஷி ராசிகள் தங்களுக்குள் பார்க்கும் என்பதற்கு “திருஷ்டி” என்ற வார்த்தையை உபயோகித்துள்ளார். இதன் அர்த்தம் பல இருந்தாலும் இங்கு “கண்ணடி படுதல்” அல்லது “கெடுதல் பார்வை” என்ற பொருள் படும்படி அமைத்துள்ளார் என நான் கருதுகிறேன்.
பொதுவாக திருஷ்டி ஒருவருக்கு ஏற்பட்டால் கண்ணடி பட்டுவிட்டது என கூறுவோம். இது கெடுதல் கொடுக்கும் என்ற எண்ணத்தில் கூறுகிறோம்.
ஏன் ராசி பார்வையை கெடுதல் பார்வை என எடுத்துக்கொள்ளவேண்டும்??
ராசி பார்வை என்பதென்ன என அறிய, நான் இதனை பாதக ஸ்தானத்தோடு ஒப்பிட நினைக்கிறேன்.
ஒவ்வொரு ராசியையும் மற்ற 3 ராசிகள் பார்க்கிறது. அதில் ஒவ்வொரு ராசியும் ஏதேனும் ஒரு விடயத்தில் பாதகஸ்தானத்திற்கு தொடர்பு கொண்டுள்ளன
அவை
1.பாதக ஸ்தான ராசி மற்றும் அதனுடைய கேந்திர ராசிகள்
2. பாதக ராசிக்கு 7 அல்லது பார்க்கும் ராசியின் பாதக ஸ்தானமாக பார்கப்படும் ராசி
3. பார்க்கும் ராசியின் அதிபதியின் இன்னொரு ராசி
4. பார்க்கப்படும் ராசியின் அதிபதியின் இன்னொரு ராசி
இவற்றில் ஏதேனும் மூன்று தான் ஒரு ராசியை பார்க்கின்றன.
Leave a reply