திருமண வாழ்க்கை
ஆனந்தமும் துக்கமும் நாம் செய்த மு வினையின் பயன். எதையும் சாதிக்க முடியும் என ஒருவன் இறுமாந்திருக்கலாம். ஆனால் எல்லாவற்றிற்கும் காலம், நேரம் என்றுண்டு. வஸந்த காலத்தில் தான் பல பூக்கள் மலர்கின்றன. சில பழ வகைகள் கிடைக்கின்றன. விதைப்பதற்கும் நேரமுண்டு. அறுவடைக்கும் காலமுண்டு. மேலும் இவ்வெல்லாவற்றிற்கும் நெறிமுறை வரையறையுண்டு. விதைப்பதெல்லாம் அறுவடைக்கு வாரா. அறுவடை செய்ததெல்லாம் முழுப்பயனையும் தராது. இங்கே தான் மனிதன் தன் முயற்சித் தோல்வியுறும் போது முயற்சிக்குத் தக்க பலனைக் காணாத போது, நினைந்து செயலாற்றியச் செயல்கள் நிறைவேறாது ஏமாற்றங்கண்ட போது, அதனால் ஏற்பட்ட மனவேதனை பல இன்னல்கள் போன்ற கசப்பான அனுபவங்களை எதிர்க் கொண்ட போது, தன் இயலாமையை உணர்ந்து தன்னிலும் வேறொன்று தன்னைவிட மேலான ஒன்று குறக்கிடுகிறது என்பதையுணர்ந்து, அதனை விதியென்றே முன்வினையென்றே உணர்கிறான். எந்தப் பொருளும் துக்கம் கலந்து தான் காணப்படுகிறது. எதுவும் இன்பம் மட்டுமே கொடுப்பதாக இல்லை. இன்பம் கொடுக்கும் போது கூடவே துன்பத்தையும் கொடுக்கிறது.
எந்த வஸ்து கிடைத்தாலும் அதில் நீடித்த இன்பம் கிடைப்பதில்லை முதலில் அந்த வஸ்துவைப் பெற்றதால் ஏற்பட்ட இன்பம் ஆனந்தம் வேறொரு வஸ்துவைப் பார்த்ததும் விலகிப் போய் விடுகிறது. இல்லாத ஒன்றிற்காக ஏங்கித் தவிக்கிறான். அதனால் அதிருப்தியே நீடிக்கிறது.
சில பழக்க வழக்கங்கள் நம்மை அடிமையாக்குகின்றன. எல்லையற்ற பொருள்கள் மீதும் பணம், புகழ், மனிதர்கள் இன்னொரன்ன பிறவற்றின் மீதும் கொண்ட ஆசையின் காரணமாக விரும்பியோ – விரும்பாமலோ மனிதன் ஒரு கட்டாயச் சுழற்சிக்கு ஆளாகிறான். அது அவன் இறக்கும் வரைத் தொடர்கிறது. அச்சுழற்சியிலிருந்து வீடுபடவும், விரும்பிய பலனையும், ஆனந்தத்தைப் பெறவும், பற்பல வழிகளில் முயன்று பல காரியங்களைச் செய்கின்றன. அதற்காகப் பல திட்டங்கள் வகுக்கின்றன. ஆனால் பலனோ வேறுவிதமாகவே உள்ளது முற்றும் துறந்த முனிவர்களும் ஆசைகளற்ற அவதூதர்களுமே இவ்வுலகில் எல்லையற்ற நீடித்த இன்பத்தைப் பெறுகின்றனர். எனவே தான் நமது முன்னோர்கள், ஒவ்வொரு மனிதனும் மகிழ்வுற வேண்டி, சமூக அடிப்படையான சில கட்டுப்பாடுகள், நெறிமுறைகள் சடங்குகள், சம்பிரதாயங்கள் முதலியன ஏற்படுத்தியுள்ளனர். அவற்றுள் தலை சிறந்ததும், உயர்ந்ததுமான ஒன்று தான் திருமணம்.
திருமணம் எனபது மனித நேயத்தையும், சமூக தர்மத்தையும், மனவள மேம்பாட்டையும், அறவழியையும், ஆன்மீகசிந்தனையையும் அடிப்படையாகக் கொண்டது. மனிதன் தனது உலகாய நன்மைகளைக் கருதியும், எதிர்கால சுபீட்சத்திற்கும், ஹோமம், யக்ஞயாகங்களைச் செய்ய வேண்டியுள்ளது. அப்புனிதக் காரியங்களை அருகிலிருந்து நடத்தி வைக்க அவனுக்கு மனைவி அவசியம் தேவைப்படுகிறது. கிருஹஸ்தாஸ்த்திர தர்மம் மற்றெல்லாவற்றிலும் சிறந்தது என்று வேதம் மூழங்குகிறது தமிழ் வேதமாககிய திருக்குறளும் இல்லறத்திற்கு மேன்மையளித்திருப்பது நாமெல்லாம் அறிவோம்.
அத்திருமணம் எட்டு வகைப்படும் என மநுஸ்மிருது கூறுகிறது. அவை
“ப்ராஹ்மோ – தைவ – ஸ்ததை வார்ஷ”
ப்ராஜாபத்ய – ஸ்ததாஸூ:
காந்தவர்வோ ராக்ஷ ஷச்சைவ
பைசாசாஷ்டம்: ஸ்ம்ருத:
ப்ராஹ்ம்யம்
படிப்பை முடித்துக் கொண்ட பிரம்மச்சாரி பையனுக்காக அவனது பெற்றோர்கள் ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணின் பெற்றோர், உற்றோர்களை யடைந்து கன்னிகாதனம் செய்துக் கொடுக்கும்படி வேண்டிக் கொள்ளுவது.
தைவம்
பெண்ணின் பெற்றோர்கள் யாகச்சாலைக்குச் சென்று, அங்கு யாகம் செய்யும் உத்தம பையனுக்கு தமது பெண்ணைக் கொடுப்பதாகும்.
ஆர்ஷம்
வரனிடமிருந்து பசுக்களை வாங்கிக் கொண்டு பதிலுக்குப் பெண்ணைக் கொடுப்பது எனப்படும்.
ப்ராஜாபத்தியம்
பிரஜைகளை கொடுத்து அந்த மணமக்கள் நீண்ட காலம் தம்பதிகளாக வாழ்ந்து அறநெறி வழுவாது சிறப்பாகவும், ஆனந்தமாகவும் வாழ வேண்டும் என வாழ்த்துவதாகும்
ஸ்ததாஸூ:
மணபெண்ணிற்று பொருத்தமில்லாத இஷ்டமில்லாத வரன் அல்லது பெண்ணின் பெற்றோர்க்கு இஷ்டமில்லாத வரன் ஆகும். பெண்ணின் பெற்றோர்களுக்கோ மற்றவர்களுக்கோ நிறைய பணம் கொடுத்து அவர்களை வசப்படுத்திக் கட்டாயமாக அப்பெண்ணை மனம் செய்து கொள்ளுவதாகும்.
காந்தர்வம்
நாமெல்லாமறிந்த காதல் திருமணம் தான்.
ராக்ஷஸம்
பெண் வீட்டுக்காரர்களைப் போரில் வெற்றி கொண்டு பெண்ணை கவர்ந்து சென்று திருமணம் முடிப்பதாகும்.
பைசாசம்
மணப்பெண்ணின் விருப்பமின்றியும், பெண்ணின் பெற்றோர்களின் சம்மதமின்றியும், அவர்களைப் பகைத்துக் கொண்டும், கட்டாயக் கல்யாணம் செய்துக் கொள்ளுவது பைசாசமாகும்.
“ப்ரதானம் ப்ராத் ரிதோ” என்று தர்ம சாஸ்த்திரம் கூறுகிறது. அதாவது பெண் வயதுக்கு வருமுன்னரே திருமணம் செய்திடல் வேண்டும். இது நடைமுறையில் சாத்தியமல்ல. “பெண்ணிற்கு திருமண வயது 21” என்று ஆட்டோவின் முதுகிலும் முழக்கமிடுகிறது இன்றையச் சட்டம். இன்று இளம் வயதில் அதாவது பதினைந்து அல்லது பதினாறு வயதற்குள் திருமணம் என்பது சட்டப்படி குற்றமாகும். எனவே இளம் வயது என்பதற்கு அல்லது திருமணகால வயது என்பதற்கு பதினாறுவயதிற்குள் என முன்பெல்லாம் பொருள் கொண்டோம். திருமணமும் செய்து வைத்தோம். தற்போது அச்சொல்லிற்கு 21 வயதிற்கு மேல் என்றே பொருள் கொள்ள வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுள்ளது
முன்பெல்லாம் இருபத்தொன்று அல்லது இருபத்திரண்டு வயது தாண்டினால் தாமத் திருமணமாகக் கருதினோம். ஆனால் இன்று இருபத்தேழு அல்லது முப்பது என்பதும் சகஜமாகி விட்டது. வாழ்கையில் பிறப்பு முதல் இறப்பு ஈறாக எல்லாமே ஒரு குறிப்பிட்ட நியதியின் படியே (முன்வினை அல்லது பூர்வ புண்ணியம்) நடக்கிறது . ஒருவன் அல்லது ஒருத்தி தன் வாழ்வில் அடையும் இன்பம், துன்பம், பதவி குலம், பொருட்செல்வம், மக்கட்செல்வம், புகழ் இதழ் ஆகிய யாவும் முன்வினையின் பயன்களாகும். இதனை தெளிவாகக் காட்டுவதே ஜாதகமாகும். எனவே திருமணம் வாழ்க்கையில் முக்கியமானது வாழ்க்கையில் மணமகள், மணமகன் எதிர் கொள்ளப்போகும் இன்பம் அல்லது துன்பத்திற்கு திருமண நாள் வழிகோளுகிறது. எனவே அத்திருமண நாளை நன்கு பல விதத்திலும் ஆராய்ந்து மணம் செய்வித்திடல் வேண்டும். இன்றைய வேகமான சுழற்சிக்கும், இயந்திர வாழ்க்கைக்கும் அடிமைப்பட்டுப் போன பெற்றோர்கள், மண நாள் விஷயத்தில் சற்றே அசிரத்தை மேற்கொள்ளுவதாகக் காணப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட மாதத்திலோ அல்லது விடுமுறை நாளாக அமையும் நாளிலோ திருமணம் செய்ய முடிவெடுக்கின்றனர். திருமண மாளிகையைப் பொருத்தும் நாள் தள்ளிப்போடுவது அல்லது கிடைத்த ஏதோ ஒரு சுமாரான நாளில் மணம் செய்ய வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாகின்றனர். மேலும் உறவினர்களுக்காகவும் அவர்களுக்கு சௌகர்யப்படாது, இவர்கள் வெளி நாட்டிலிருந்து மறுபடியும் வரமுடியாது என்று பல காரணங்களுக்காகவும், திருமணங்கள் அவசரமாகவும் நடத்தப்படுகின்றன. சில தேவைகளுக்கும், அவசரத்திற்கும், சௌகர்யத்திற்கும் ஏற்றவாறு சரியாக ஜாதகம், பொருத்தம் முதலியன பார்க்காமல் கூட அல்லது ஜோதிடரை நல்ல முறையில் ஆராய்ந்து பார்க்க அவகாசம் கொடுக்காமலும் சப்தம சுத்தியும், பஞ்சகமும் பார்க்காமலும் திருமண நாள் நிச்சயிக்கப்படுகிற கட்டாயக்கால கட்டத்தில் உள்ளனர்.
ஆனால் முகூர்த்த லக்னத்தில் சூரியனோ செவ்வாயோ இருந்தால் அப்பெண் கெடுதி பெறுவாள் என்பதை மறந்து விடுகிறார்கள். விவாக லக்னத்திலுள்ள ராகு பிறக்கும் குழந்தைகளை அழிக்கும். சனி இருந்தால் வறுமையில் வாட வேண்டிவரும். சந்திரன் இருந்தால் ஆயுள் குறையும். ஆனால் குரு, புதன், சுக்ரன் அப்பெண்ணை கற்புடையவளாகவும். செல்வச் சிறப்புடனும் வாழ வைப்பார்கள்.
Leave a reply