ஏழாம் பாவம் சிறப்பு
ஒரு பாவத்துக்கு நாம் சில விஷயங்கள் நாம் உரியது என்று கூறுகிறோம் . களத்திரகாரகன் சுக்ரன் ஆவார். இது மாறாது, ஆனால் களத்திர ஸ்தானாதிபதி ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு (வெவ்வேறு) கிரகமாக அமையும். (உ-ம்) ரிஷப லக்னத்துக்கு களத்திர ஸ்தானாபதி செவ்வாய். அதைபோல சிம்ம லக்னத்துக்கு களத்திர ஸ்தானாதி சனிபகவான், கன்யா லக்னத்துக்கு களத்திர ஸ்தானதிபதி குரு. இப்படி ஒவ்வொரு லக்னத்துக்கும் ஒவ்வொரு களத்திரஸ்தானாதி அமைவார்.
.தம்பதிகளுக்குள் பாசம், பந்தம், அன்பு, அனுசரணை சிறப்பாக அமையும். மன மகிழ்ச்சி, நிம்மதி கிடைக்கும்.
‘எத்தனை கோடி பணமிருந்தாலும் நிம்மதி வேண்டும் வீட்டினிலே’ என்பது கண்ணதாசனின் பாட்டு. “பர்த்தாவுக்கு ஏற்ற பதிவிரதை உண்டானால் எதிர்த்தாலும் கூடி வாழலாம். சற்றேனும் ஏறுமாறாக இருப்பாளே
யானால், கூறாமல் சந்நியாசம் கொள்” என்று சம்சார சாகரத்தில் மூழ்கி மூச்சுத் திணறும் ஆண்களுக்கு அறிவுரை கூறுகிறார். ஆகவே இல்லறம் இனிமையாகவும், (அமைதியாகவும் இருந்தால் தான் நிம்மதி கிடைக்கும். அந்த நிம்மதி போய்விட்டால் அவன் மதி மாறி பித்தனாய் அலைய வேண்டி வரும். இது பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் அல்ல காதலித்துக் கைப்பிடித்தவர்களுக்கும் அமைகிறது.
இதற்கெல்லாம் காரணம் 7ம் பாவம்/வீடு தான். இந்த 7ம் பாவம் சிறப்பாக அமைந்து விட்டால் அந்த தம்பதியர் வாழ்க்கை சொர்க்கமாகும். இல்லை என்றால் நரகம் தான். துன்பம் தான். சிறப்பான 7ம் பாவத்தை அறிவது எப்படி? முன்னால் கூறியது போல் சுக்ரன், 7ம் அதிபதி, 7ம் இடம், பலம் பெற்றிருந்தால் இல்லறம் சிறப்பாக அமையும். 7-ம் அதிபதி, 7ம் இடம், பலம் பெற்றிருந்தால் இல்லறம் சிறப்பாக அமையும்.
அதாவது சுக்ரன், 7ம் பாவாதி இவர்கள் 3-6-8-12ம் இடங்களில் மறையக்கூடாது. பாபிகளோடு சேரக்கூடாது. பாபிகள் பார்க்கக் கூடாது. மேலும் பாபிகள் 7ம் இடத்தைப் பார்க்கக் கூடாது. மேலும் சுக்ரன், 7 மிடத்து அதிபதி ராசி அல்லது நவாம்சத்தில் நீச்சமடையக் கூடாது. இவையெல்லாம் ஜோதிட சாஸ்திரம் கூறும் பொதுவான விஷயங்கள்.
7ம் பாவம், சுக்ரன், 7 ம் அதிபதி நல்ல நிலையில் இருந்தாலும், கெட்ட தசைகள் நடக்கும் போதும் (பாதக தசைகள்), கணவன்-மனைவி இருவருக்கும் ஒரே தசை நடந்தாலும், கோசார ரீதியாக ராசிக்கு 4ல் சனி, 7 1/2 சனி, அஷ்டம் சனி மற்றும் ராசியில் (அ ) ராசிக்கு 7ல் ராகு கேது சர்ப்ப சஞ்சாரம் இருந்தாலும் 2ம் ராசியில் அல்லது ராசிக்கு 8ல் ராகு (அ) கேது சஞ்சாரம் இருந்தாலும் அந்தக் கால கட்டங்கள் இல்லற வாழ்க்கையை பாதிக்கும்.
அடுத்து ஜனன காலத்தில் லக்னத்துக்கு 7ல் சுக்ரன் தனித்து நின்று, பாபிகள் பார்வையோடு, சுபப்பார்வை இல்லாது இருந்தாலும் அவர்கள் இல்லறம் குழப்பம், பிரச்சனையோடு இருக்கும். ஆக 7ல் தனித்த சுக்ரன் (அ) குரு இருக்கக் கூடாது.
உச்ச சுக்ரனை பாபிகள் பார்த்தாலும், கூடினாலும், அப்படிப்பட்ட ஆண் (அ) பெண் பரந்த நோக்கம், சிற்றின்ம்பபிரியர்களாக, பலரோடு பழகும் மனப்பான்மை கொண்டவர்களாக, பலரோடு இணைய விருப்பம் உள்ளவர்களாக, சகல இன்பங்களையும் போகங்களையும் அனுபவிக்க விருப்பமுடையவர்களாக இருப்பார்கள். இந்த நிலையால் அவர்கள் வாழ்வு, கௌரவம் பாதிக்கப்படும் தொல்லைகள், தொடரும். உச்ச சுக்ர பெண்ணுக்கு நீச்ச சுக்ர ஆண் அமையும் போது, அவன் அவளுக்கு ஈடு கொடுக்க முடியாதவனாக, திருப்திப்படுத்த முடியாதவனாகி அவள் வேறுஆண்களுடன் பழக வேண்டிய நிலை உருவாகும். இத்தகைய அமைப்புள்ள ஆண் பல பெண்கள் உறவை விரும்புவான்,
லக்னத்துக்கு 7ல், சுபர் பார்வையற்ற சூரியன் நின்றால் அந்த ஜாதகன் (அ) ஜாதகிக்கு மூர்க்கத்தனம், கோபம், உஷ்ணமான பேச்சு அமையும். இல்லறமும் பாதிக்கப்படும்.
7ல் சந்திரன் பலம் பெற்று நின்றால், அழகான அன்பான மனைவி அமைவாள்.
7ல் செவ்வாய், சுபர் பார்வை (அ) சேர்க்கை இன்றி தனித்து நின்றால், அந்த 7ம் இடம் மேஷம் கடகம் விருச்சிகம் மகரமாக இருந்து செவ்வாய் தோஷம் இல்லையென்றாலும் இது நல்ல அமைப்பு ஆகாது. உடல் உறவு, ரத்த அமைப்பால் தொல்லை கணவன் அல்லது மனைவி மரணம் (அ) பிரிவு ஏற்பட்டு 2வது களத்திரம் அமையும் நிலை உண்டாகும். இந்த அமைப்பு இருந்து, கெட்ட தசைகளும் நடந்தால் மேற்கூறிய கெட்ட பலன் நிச்சயமாக நடக்கும்.
7ல் பாபிகள் சேராத, பார்க்காத புதன் இருந்தால், புத்திசாலியான, கலகலப்பான பேச்சுத்திறனும், ஹாஸ்ய ரசனையும் உள்ள பாசமான மனைவி அமைவாள்.
7ல் குரு நீச்சமடைந்து (மகரத்தில்) கடகத்தில் செவ்வாய் நீச்சம் பெற்று சமசப்தம பார்வையோடு, புத்திர ஸ்தானமும் கெட்டால் அவர்களுக்கு குழந்தை பிறப்பதில்லை தொல்லை வரும். இந்த அமைப்பு பெண்கள் ஜாதகத்தில் இருந்தால் புத்திர தோஷம் உண்டாகும்.
.
லக்னத்துக்கு 7ல் சுக்ரன் தனித்து நின்றால் களத்திரபாவ பலன் கெடும் (காரஹோபாவ நாஸ்தி) அமைதியான இல்லறம், சுமுகமான தம்பதியராய் இருக்க மாட்டார்கள்.
7ல் சனி என்ற நிலை வரும். 7ல் சனி நின்ற ஆணுக்கு பல பெண் இச்சையும், அதிக வயதுடைய பெண்களுடன் உடல் உறவும், விபரீத புணர்ச்சிப் பழக்கங்களும் உண்டாகும்.
7ல் செவ்வாய்-ராகு (அ) கேதுவோடு இருந்தால் இரு தாரம் அல்லது வேறு பெண்கள் தொடர்பும் உண்டாகும்.
லக்னத்துக்கு 7ல் கேது அமைந்த ஜாதகரின் திருமணம் தாமதப்படுகிறது. அவனுக்கு அமையும் மனைவி ஆன்மீக ஈடுபாடு கொண்டவளாய் இருப்பாள்
பரிதாபமான சில சம்பவங்களை பார்க்கையில் 7ல் கேது நின்ற ஒரு பெண்ணுக்கு, திருமண அழைப்பு இதழ் கொடுத்துக் கொண்டிருக்கும் போதே ஒரு அர்த்தமற்ற காரணத்தால் திருமணம் நின்று விட்டது.
7ல் கேதுவும், லக்னத்துக்கு 8 (அ) 12ல் சூரியன், செவ்வாய் சேர்ந்த பெண்ணுக்கு (இது ராசிக்கு 2ல் சூரியன், செவ்வாய்) திருமண அழைப்பிதழ் கொடுக்கும் போதே, நிச்சயிக்கப்பட்ட ஆண் ரயில் விபத்தில் இறந்து போனான். (விதவாயோகம்)
Leave a reply