சூரியன் :
ஆத்மா, பலம், கண்டிப்பு. கோட்டை, நல்ல சக்தி, சூடு, ஒளி, தீ, சிவ வழிபாடு, தைரியம், முட்செடி, மரம். ஆரசாங்க ஆதரவு மற்றும் வெறுப்பு, வயோதிகம், கால்நடைகள், துஷ்ட தனம், நிலம், தந்தை, ருசி, தன்னை உணர்தல், மேல்நோக்குப் பார்வை, பயந்தாங்கொள்ளிக்குப் பிறந்தவன், பித்ரு லோகம், சதுரம், எலும்பு, பராக்கிரமம், புல், வயிறு, விடா முயற்சி, காடு, ஒரு அயனம், கண், மலைகளில் சஞ்சாரம், நாற்கால் மிருகம், அரசன், பயணம், நிர்வகித்தல், கடித்தல். பொசுக்குதல், வட்ட வடிவம், கண் நோய், தேகம். தச்சு வேலைக்கு உதவும் மரம், தூய உள்ளம், நாட்டின் அதிபதி. நோயிலிருந்து விடுதலை, ஆபரணம், தலை நோய், முத்து, வாகன அதிபதி, சித்திரக் குள்ளன், கிழக்கு திசையின் அதிபதி, தாமிரம், ரத்தம், ராஜ்ஜியம், சிகப்புத் துணி, கல். பொது சேவை, நதிக்கரை. பவழம், நடுப்பகலில் பலம், கிழக்குத் திசை, வாய், தீராத கோபம், எதிரியைப் பிடித்தல், நல்ல தரம், குங்குமம், விரோதம், பருமனான கயிறு.
சந்திரன் :
மதி, மலர். வாசனை திரவியம், கோட்டைக்குள் செல்லுதல், நோய், பிராமணன், சோம்பேறித் தனம், கை. கால் வலிப்பு, கபம், மண்ணீரல் வீக்கம், மெய் மறந்த நிலை, இதயம். மங்கை, நல்லது அல்லது கெட்டது. புளிப்பு, இனிப்பு, நீர்ப் பொருள், வெள்ளி, கட்டிக் கரும்பு, கபவாத ஜுரம், பயணம், கிணறு, குளம், தாயார், நடு நிலைமை, உச்சி வேளை, முத்து, ஷய ரோகம், வெண்மை, அரைக்கச்சு, வெண்கலம், உப்பு, குள்ளம், மணம், திறமை, குளம்-குட்டை, வைரம். ஷரத்ருது, இரண்டு நாழிகைப் பொழுது, முக வசீகரம், வெள்ளை நிறம், வயிறு. கௌரி வழிபாடு, தேன். அனுகூலம், நகைச்சுவை, போஷாக்கு. கோதுமை, ஆனந்தம், ஒளி, வதனம், துரித சிந்தனை, தயிர் மீது விருப்பம், ஆண்டி, கீர்த்தி, அழகு, இரவில் பலம், மேற்கு நோக்கிய முகம், கற்றவர், உப்பு நீர், வேலைப் பெறுதல், மேற்கில் பிரியம், நடு உலகம், நவ ரத்தினங்கள், நடுத்தர வயது, உயிர், உண்ணுதல், வெளிநாடு செல்லுதல். தோள் பட்டை, நோய், அரசு விருதுகள், நற்பழங்கள். தூய ரத்தம், ஜீவ சக்தி, மீன் மற்றும் நீர் வாழ்வன, சர்பம், பட்டாடைகள், இளங்குருத்து. மொட்டு, பளபளப்பு, சுத்தப் படிகம், மெல்லிய ஆடை.
செவ்வாய் :
வீரம், பூமி, பலம், ஆயுதம் தரித்தல், அரசப் பதவி, ஆண்மை இழப்பு, கள்வன், யுத்தம், பகை, பகைவன், பெருந்தன்மை, செந்நிறப் பிரியன், தோட்டக்காவலாளி, தாரை முழக்கம், பாசம், நாற்கால் பிராணி, அரசன், அறிவிலி, கோபம், அயல் தேசப் பிரயாணம். திட உள்ளம், ஆதரவாளன், தீ, வாக்குவாதம், பித்த நிர், உஷ்ணம், காயம், ராஜ சேவை, பகல், வானம். பார்வை நோய், புகழ், ஈயம், கத்தி, ஈட்டி, மந்திரி, கை-கால் முறிதல், நகைகள், முருகக் கடவுள், இளமை, காரம், தர்பார் மண்டபம், மட்பாண்டங்கள், தடைகள், மாமிசம் உண்பவன், பிறரை பரிகாசித்தல், சத்ரு நாசம், பின்னிரவில் பலம், கசப்பு. தீர யோசிக்கும் குணம், பலம் உள்ளவன், சுபாவம், பிரம்மா, கோடாரி, வன அலுவலர், கிராமத் தலைவன், ராஜப் பார்வை, மூத்திரக் கடுப்பு. சதுரம், தட்டான், மோசக்காரன், தீப்பிடித்த இடம், நல்ல போஜனம், மெலிந்த தேகம், வில்வித்தை, ரத்தம் தாமிரம், அழகிய துணி, தெற்குத் திசை, தென் திசையில் பிரியம், கோபம், அவதூறு, வீடு, சேனாதிபதி. ஜடாகினி எனும் ஆயுதம், சாம வேதம், சகோதரன், மண் வெட்டி, கொடிய மிருகங்களைப் பராமரித்தல், சுதந்திரம், பிடிவாதம், காலி மனை, நீதிபதி, சர்பம், உலகம். பேச்சு, சலன புத்தி, வாகனமேறுதல், உதிரம் சிந்துதல் மற்றும் உறைதல்.
புதன் :
கல்வி, குதிரை, கருவூலம், கணிதம், பேச்சு, பாண்டித்தியம். புpராமணன், காலாட்படை. ஏழுத்து. புத்தாடை, அரண்மனைப் போன்ற வீடு. புச்சை நிறம். சிற்ப வேலை, ஜோதிடம். புனித யாத்திரை, விவேகமான சொற்பொழிவு, கோயில், வாணிகம், சிறந்த ஆபரணம். மிருதுவான வார்ததைகள். வேதாந்த தத்துவம், தாய்வழி பாட்டனார், கெட்ட கனவு, உச்சரிப்பு, வடக்கு நோக்கிய முகம், தோள், ஈரம், வெண்கலம், துறவறம், பருவ காலம், அழகான மாளிகை, மருத்துவர், கழுத்து, உடற்பயிற்சி, குழந்தை, வளைந்த பார்வை, வைகுண்டம், பணிவு, தந்தை வழி உறவு, பயம், நாட்டியம், பக்தி, நகைச்சுவை உணர்வு. காலையில் பலம் உள்ளவன், ஹேமந்த ருது, சொறி, எதற்கும் கலங்காத நிலை, நாபி. குடும்பச் செழிப்பு, கதம்பப் பொருட்கள், தெலுங்கு மொழிப் புலமை, விஷ்ணு வழிபாடு, பறவை, மறு பிறவி, அதர்வண வேதம். புனிதக் காரியங்கள், கோபுரம், சூத்திரர், மொழிப்பற்று, திசைகள், பெண் விந்து, சுபம், அனுகூலம், கிராம நடமாட்டம், நடு நிலைமைக் குணம், வடமேற்கு திசையில் நாட்டம், புராண இதிகாசங்களில் புலமை, இலக்கணப் புலமை, நவக்கிரகங்களின் தரம் அறியும் விதத்திலுள்ள நிபுணத்துவம், கற்றவர், தாய்வழி மாமன், புனிதப் பிரார்த்தனை, மந்திரத் தாயத்து,. தீர்காயுள்.
குரு :
பிராமணர், ஆசான். கடமை, ரதம், பசு, காலாட்படை, சேமிப்பு, மீமாம்சம், பணப்பொக்கிஷம். குதிரை, தயிர், பருத்த தேகம், பராக்கிரமம், புகழ், வேதாந்தம், ஜோதிடம், மகன், பேரன், நீர்க்கோவை, நோய், செல்வம், தத்துவம், முப்பாட்டனார், மாளிகை, ரத்தினம், மூத்த சகோதரம், தாத்தா, இந்திரன். குளிர்காலம், பூமாலை, நகை வியாபாரி, உடல்நலம், அழகான மாளிகை, தொடை, ராஜ மரியாதை, கடவுள், பாவ மன்னிப்பு, கொடுத்தல், மதக் கடமை, பரோப காரம், நடு நிலைமை, வடக்கு நோக்கிய முகம், வட்டம். மஞ்சள் நிறம், கிராம சஞ்சாரம், வடக்குத் திசை, உயிர்த் தோழன், ஊஞ்சலாட்டம், வாக்கு வன்மை. கொழுப்பு, பழைய ஆடைகள். புதிய வீடு. மகிழ்ச்சி, பெரியோர், மந்திரம், ஆடைகள், புனித நீர், கால் மூட்டு, சொர்க சஞ்சாரம், முழு சந்தோஷம், அறிஞர், கல்வியில் தேர்ச்சி, இலக்கியம், கோபுரம், ரசிகரை மகிழ்வித்தல், சிங்காரதனம், பிரம்ம உற்பத்தி, எல்லா காலங்களிலும் பலம், மாதம், பண்ட பாத்திரங்கள், வைடூரியம், கனி ரசம், தாராள குணம். மகிழ்ச்சி, துன்பம், நீளம், சாந்த குணம், பிறர் கருத்துக்களை அறிதல், தங்கம், ஆபரணத்தால் அலங்கரிக்கப் படுதல், திட்டமிடுதல், காற்று, கபம், புஷ்ப நாகம், வேத நூல், நுண்ணறிதல், கல், சிவ வழிபாடு, மத கடமைகளில் ஈடுபாடு, அலங்கார வாகணத்தில் பயணம் செய்தல்.
சுக்கிரன் :
வெண்குடை, ஆடை, திருமணம், வருமானம், இருகால் ஜீவன், பெண், பிராமணர், சுப காரியங்கள், வெண்மை, மனைவி, உடலுரவு, இன்பம், குள்ளம், புளிப்பு, புஷ்பம். கட்டளை இடுதல், புகழ், இளமை வேகம், வாகனம், வெள்ளி, தென் கிழக்கு மூலை, உவர்ப்பான பொருள், கடைக்கண் பார்வை, உராய்தல், ஒரு பட்சம், உணர்ச்சித் தன்மை, பலம், முத்து, யஜூர் வேதம், வைசியன், அழகு, விற்றல் வாங்கல், காதல் வசப்படல், நீர் சம்மந்தமான இடம், யானை, குதிரை, பல வர்ணம். கவிதை, நடனம், மத்திம வயது, பாடல். கேளிக்கை, மனைவி ஊட்டும் இன்பம், ரத்தினங்கள், விகடப்பிரியம், நீச்சல் வீரன், வேலையாள், அதிர்ஷ்டம், அழகான இளைஞன், ராஜ்யம், வாசனைத் திரவியங்கள், பூ மாலை, வீணை, புல்லாங்குழல், கோயில் நடை, அஷ்ட செல்வங்கள், அழகான அவயங்கள், மிதமான ஆகாரம், வசந்த காலம், ஆபரணம், பெண்களை ஆதரித்தல், கண், உண்மை பேசுதல், கலை ஞானம், விந்து, நீர் விளையாட்டு. நற்குணம், தலைமை வகித்தல். சாதுர்யப் பேச்சு, இசைக் கருவி, மேடை அலங்காரம். காம விளையாட்டு. தேகம் கெடுதல், உயரந்த மரியாதை, வெண்ணிற ஆடைகளில் விருப்பம், பரதக் கலை. அரசு முத்திரை. பிரபுத்துவம், பார்வதி-லஷ்மி வழிபாடு. பெருந்தன்மை, உடல் இளைத்தல், தாயாருக்கு உரிய பணிகளைச் செய்தல், இலக்கிய ரசனை, கவித்திறமை, கருமையான கேசம், மர்மஸ்தானம், மூத்திரம், பிற்பகல், உடலுறவு தொடர்பான அறிவு மற்றும் ரகசியங்கள்.
சனி :
சோம்பேறித்தனம், முட்டுக்கட்டைகள், குதிரை, யானை, தோல், லாபம், சட்டம், துன்பம், நோய், தவறான அபிப்ராயம், துக்கம், மரணம், பெண்களின் மூலமான மகிழ்ச்சி, பெண் வேலையாட்கள், கழுதை, தனது குலத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவன், அருவருப்பான உடல் உறுப்புகள், வனாந்திரம். கொடை, பிரபு, ஆயுளின் ஒரு பகுதி, கட்டியம் கூறுபவன், தாழ்ந்த குலத்தில் பிறத்தல், பறவைகள். மூன்று வேள்வித்தீ, அடிமை ஊதியம், நேர்மையற்ற நடத்தை, ஆண்மை இல்லாமை, பொய் பேசுதல், அதிகமாக பேசுதல், காற்று. முதியோர். தசைப்பிடிப்பு, சூரியன் அஸ்தமனத்தில் பலம், சிசிர ருது, அதிகக் கோபம், உழைப்பு, கெட்ட நடத்தை உள்ள பெண்ணுக்கு பிறத்தல். அழுக்கு ஆடை, அழுக்கு வீடு, குண்டர்கள், கெட்ட சகவாசம், கருப்பு நிறம், துன்மார்கம், கொடூர குணம். சாம்பல், கருப்பு நிற தானியங்கள், ரத்தினங்கள், இரும்பு, பெருந்தன்மை, ஓராண்டு, சூத்திரர். வைசியர், தந்தையின் பிரதிநிதியாக இருத்தல், மற்ற வகுப்பு வேலைகளைத் தெரிந்துக் கொள்ளதல், நொண்டி, முடம், கடுகடுப்பானவன், கம்பளி, மேற்கு நோக்கிய பார்வை, ஆயுளை கூட்டுவதற்கான பலகாரங்கள், என்றும் இளமையாக இருத்தல், கீழ் நோக்கிய பார்வை, விவசாயத்தால் ஜீவனம், ஆயுதக் கிடங்கு, தாயாதிகள், வெளியுறவு, வட கிழக்கு திசையில் பிரியம், நாகலோகம், வீழ்ச்சி, சண்டை, அலைந்து திரிதல், ஈட்டி, ஈயம், பலத்தை தவறாகப் பயன்படுத்தும் முரடன், தேய்ந்துப் போன பொருள், எண்ணை, பலகை, பிராமணன், தாமச கணம், மலைகளிலும் காடுகளிலும் அலைந்து திரிதல், இரக்க மற்றவன், பயத்தை தரக்கூடிய நீண்ட நாள் துன்பம், வேட்டைக்காரன், அருவருப்பான தலைமுடி, முழு அரசாட்சி, அபாய எச்சரிக்கை, வெள்ளாடு. எருமை, காம இச்சை, ஏளனமாகப் பேசுதல், எமனை வழிபடுதல். திருட்டு, கொடிய செயல்களில் நாட்டம் உள்ளவன்.
ராகு :
குடை, பேரரசு, கூட்டம், தற்கவாதம். நாத்திகன், புண்படுத்தும் பேச்சு, தாழ்ந்த குலத்தைச் சேர்ந்தவன், துர்குணப் பெண், அலங்கார ரதம், சூதாட்டம், அந்தியில் பலம், துர்குணப் பெண்ணுடன் கூட்டு சதி ஆலோசனை, அயல் நாட்டு பிரயாணம். புனிதமின்மை, எலும்பு, மண்ணீரல் வீக்கம், கபடம், கீழ் நோக்கிய பார்வை, மன கலக்கம், மரகதம், தென் நோக்கிய முகம், ஜாதியை விட்டு தள்ளி வைத்தல், கீழ் ஜாதிச் சேரக்கை, மோசமான வீக்கம், பெரிய காடு, கரடு முரடான இடத்தில் நடமாடுதல், மலை, வலி, வெளியிடத்தில் தங்குதல், தென் மேற்கு திசையில் நாட்டம், காற்று, கபம், வறுத்தம், சர்பம், இரவு, மாருதம், குரூரமான ஜந்து, நீளமான மற்றும் ஊர்ந்து;ச் செல்லும் பூச்சி மற்றும் ஜந்துக்கள், கனவு தொல்லை, சர்பலோகம், தாய், தகப்பன் அல்லது தாய் வழிப்பாட்டனார், தாங்கமுடியாத வலி, ஜலதோஷம், சுவாசம், மாபெரும் வீரம், காடு, துர்கை வழிபாடு செய்தல், துர் நடத்தை, நாற்கால் பிராணிகள், உருத மொழி மற்றும் எழுத்தாற்றல், கொடூரமான பேச்சு.
கேது :
விநாயகர் வழிபாடு மற்றும் பல கடவுள்களின் வழிபாடு, மருத்துவர், நாய், சேவல். கழுகு, மோட்சம், சகல செல்வங்கள், ஷயரோகம், வலி, ஜுரம், கங்கா ஸ்நானம், பாவ மன்னிப்பு, காற்று, வேட்டைக்காரன், நட்பு, நல்ல அதிரஷ்டம் தேடி வருதல், கல், காயம், மாந்த்ரீகம், சூனியக் கலைக் கற்றல், உறுதியில்லாமை, பிரம்ம ஞானம், வயிறு, கண் வலி, மூடத்தனம், முற்செடி, மான், அறிவு, மௌன வழிபாடு, தத்துவம், சகல வசதிகள், அதிர்ஷ்டம், எதிரத் தொல்லை, மித உணவு, சமூக விதிகளை மீறுதல், தந்தை வழி பாட்டனார், பசி, அதிக வயிற்று வலி, உடல் கட்டி, கொம்புள்ள பிராணிகள், சிவத்தொண்டர். கைது செய்தல் அல்லது கைதாகுதல், தாழ்ந்த குலத்தவரின் நட்பு.
Leave a reply