மந்த்ரேஸ்வரர் பலதீபிகையில்
(1) 6ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள், (2) 8ம் வீட்டில் உள்ள கிரகங்கள், (3) 12ஆம் வீட்டில் உள்ள கிரகங்கள், (4) 6ஆம் வீட்டின் அதிபதி, (5) 6ஆம் வீட்டில் இணைந்த கிரகங்கள், (6) மேற்பட்ட இணைவானது ஒரே கிரகத்திற்க்கு 2 அல்லது 3 சம்பந்தம் ஏற்பட்டால் அதனை வைத்தும் நோயை நிர்ணயம் செய்ய வேண்டும்.
லகனம், லக்ன அதிபதி, பலம் பெறுவது மிக சிறப்பு. ஆனால் 6ம் அதிபதி லக்ன அதிபதியை விட பலம் குறைவது, உடல் நலத்திற்கு நல்லது. 6ஆம் அதிபதி வலுத்து இருந்தால் நோயினால் அவதிப் பட நேரும். லக்னம் மற்றும் சந்திரனில் இருந்து எண்ண, 6ல் இருக்கும் கிரகத்தையம், 6ஆம் அதிபதியையும் 6ஆம் இடத்து இராசியையும் தொடர்பு படுத்தி நோயையும், நோயால் பாதிக்கப்படும் உடல் உறுப்பையும் அறியவேண்டும்.
ஜாதக அலங்காரத்தில்: ஆறாம் பாவத்தை
மாது கேள் வியாதி சத்துரு பீடை மற்றும்
ஆயுதங்களால் விரணம்
ஓதிய ஞாதியால் வருந்துன்பம் உயுத்தம்
மெய் வாதை பொன் தண்டம்
பேதமாங்கள்ளர் பின் மடந்தையரால்
பிறங்கு பாம்பாலும் நோயுளது
நீதி சேர் பிரதானிக்கம் சிறையினில்
செப்பு மாறாமிடம நிலைக்குரித்தே.
இதன் பொருளானது பெண்ணே கேட்பாயாக, சாதகர்க்கு உண்டாகும் நோய், பகை, நலிவுகள், மற்றும் ஆயுதங்களால் வரும் பெரும்புண், பங்காளிகளால் உண்டாகும் வழக்குத் துன்பம், கொடிய சண்டை, உடம்பில் உள்ள நலிவு நோய், பெருந்தொகை கட்ட வேண்டிய தண்டனையான வீண் செலவுகள், மாறான சிந்தனையுடைய கள்வரால் திருடு போதல், பெண் சேர்க்கையால் ஏற்படும் பொருள் நஷ்டம், விடப்பாம்பு கடிப்பதால் ஏற்படும் நோய், நீதி மன்றத் தீர்ப்பால் வரும் சிறைவாசம், ஆகிய பலன்களை ஆறாம் இடத்தின் நிலைமையினை ஆராய்ந்து சொல்லுவார். எட்டாம் பாவத்தை கொண்டு
புலவுறும் படையால் வாதை சேர்யுத்தம்
பொருப்பின் மேலேறி வீழ்தல்
நிலைபெறும் வியாதி விக்கினம் கிலேசம்
நிறைபல துன்பமோ டிரணம்
செலவினால் நஷ்டா பரணம் விழுக்காடு செறிபகை மரணம் இத்தனையும்
உலகினிலுயர்ந்தோர் அட்டமபலன் கொண்டு
உரை செய்வார் உண்மை பெற்றிடவே
இதன் பொருளானது உலகில் உயர்ந்தோராகக் கருதப்பெறும் காலக்கணக்கராகிய ஜோதிடப் புலவர், சாதகனின் எட்டாமிடத்திற்கான பலன்களை அறிந்து கொண்டு, ஆயுதங்களால் துன்பம், அதனைச் சார்ந்து வரும் சண்டை, உயர்ந்த மலை மேல் ஏறி நின்று விழுந்திடும் அபாயம் அல்லது இறப்பு, நிலைத்துச் சரீரத்திலுள்ள கொடிய நோய், அங்கத்தில் ஏற்படும் குறைவு, சூழ்நிலைகளால் வரும் கவலை, இவ்வாறு நிறைந்த பலவகைத் துன்பங்களோடு,
ஆறாத பெரும் புண், மருத்துவம், சண்டை முதலான செலவுகளால் வரும் நஷ்டங்கள் சேர்ந்தாற் போல் வருதல், பாகப்பிரிவினை (ஏமாற்றம்), தீராத பகை, இறப்பு – இத்தனையும் சாதகர் உண்மை நிலைகளை அறிந்து கொள்வதற்கு விபரமாக எடுத்துச் சொல்லுவார்கள். 6, 8ஆம் பாவங்களுக்கு பல காரகத்துவம் இருந்தாலும், இங்கு நோய் சம்பந்தப்பட்ட செய்திகளை நாம் இங்கு எடுத்துக் கொள்வோம். 6ம் இடத்தால் நோயைப்பற்றி அறியலாம். 6க்கு 6ம் இடம் 11ஆம் ஸ்தானம் நோய்களின் தன்மையைக் குறிக்கின்றன.
6ல் சூரியன்:
பித்த சம்பந்தமான நோய்கள், நரம்புத் தளர்ச்சி, கண் நோய், தலைவலி, உஷ்ணத்தால் வரும் புண்கள், மயக்கம், இதய நோய்.
8ல் சூரியன்:
தலைவலி, ஒற்றைத் தலைவலி, பார்வைக் குறைவு, சிறுநீரகப் பாதிப்பு, வாதம்.
6ல் சந்திரன்:
கப சம்பந்தமான நோய்கள். உடலில் நீர் பகுதிகள் பாதிப்பு, வயிற்று கோளாறுகள், தோல் வியாதி, நுரையீரல்-சுவாசப் பிரச்சனை, புற்று நோய், மணம் சம்பந்தப்பட்ட நோய்
8ல் சந்திரன்
கபம், நீரால் கண்டம், காலரா, வாந்தி, பேதி, மனச் சஞ்சலம். .
6ல் செவ்வாய்:
பித்த சம்பந்தமான நோய்கள், இரத்தம் கெடுதல், மூத்திரைப் பையில் கல், தொண்டையில் சதை வளர்ச்சி, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, படை, தீப்பட்டக் காயங்கள், ஆறாத காயங்கள், இரத்த சோகை, தற்கொலை மனப்பான்மை, மாதவிடாய்க் கோளாறு.
8ல் செவ்வாய்
துஷ்ட ஆயுதத்தால் மரணம், மூளையில் கட்டி, திடீர் விபத்து, சயம்.
6ல் புதன்:
வாத சம்பந்தமான நோய்கள், இரவில் தூக்கமின்மை, புத்தி சுவாதீனம், நரம்புக் கோளாறு, கட்டிகள், காது, மூக்கு, தொண்டையில் பிரச்சினைகள், பக்க வாதம்.
8ல் புதன்
நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், வெண் குஷ்டம் பரவுதல், அபிசார ரோகம்.
6ல் குரு
வாத சம்பந்தமான நோய்கள், இரத்த அழுத்தம், புற்று நோய், வயிற்று உப்புசம், இரத்த சீர் கெடல், சர்க்கரை வியாதி, பரம்பரை வியாதி, நச்சுத் தன்மையால் பாதிப்பு.
8ல் குரு
ஈரல்-சிறு நீரகம் பிரச்சினைகள், அகால மரணம், மஞ்சள் காமாலை, கல்லீரல் பாதிப்பு.
6ல் சுக்கிரன்:
கபம் சம்பந்தமான நோய்கள், கர்ப்பப் பை, சிறுநீரக தொந்தரவுகள், பால்வினை நோய்கள், மதுவினால் உண்டாகின்ற நோய்கள், பிறப்பு உறுப்பில் நோய், குடல் இறக்கம்.
8ல் சுக்கரன்
கண்ணில் சதை வளர்தல், நீரிழிவு, பால்வினை நோய், மேக நோய்.
6ல் சனி:
வாதம் சம்பந்தமான நோய்கள், வயிறு மார்பு இவற்றில் வலிகள், கால் பகுதி வீக்கம், மூட்டுக்களில் வலி, முடி கொட்டுதல், நகம் பெயர்தல்.
8ல் சனி
புற்று நோய், தொழு நோய், நாட்பட்ட நோய், வாதம்.
6ல் ராகு:
ராகுவுடன் சூரியன்-சந்திரன் மற்றும் செவ்வாய் கூடி வலம் வர இதயத்தில் அறுவை சிகிச்சை பலமாக செய்ய வேண்டியது வரும். அதுவும் திருப்தி அளிக்காமல் இதயத்தில் நவீன கருவிகள் பொருத்த வேண்டியது வரும். மனோதத்துவ நிபுணரை சந்தித்தல் மேலும் தேவையற்ற மனக் குழப்பங்கள். இதனால் உடல் மெலிவும் – ஆரோக்கிய நலிவும் ஏற்படும்.
8ல் இராகு
குடல் நோய், புற்று நோய், மூலம், கால்-கை வலிப்பு, தொற்று நோய்கள், விஷ பயம்.
6ல் கேது:
கேதுவுடன் சூரியன்-சந்திரன் மற்றும் செவ்வாய்க் கூடி இருக்க புதிரான வியாதிகள் வரும். தீய ஆவிகளின் பாதிப்பு தொடரும். தவறான மருத்துவ சிகிச்சையால் பக்க விளைவுகள் உண்டாகும். மன இறுக்கம், விரக்தி, தற்கொலை எண்ணமே உண்டாகும்.
8ல் கேது:
பிறப்பு உறுப்பில் சிகிச்சை, குடற்புண், பைத்தியம்.
6 மற்றும் 8 ஆம் அதிபதி எந்த நட்சத்திரத்தில் அமர்ந்தாரோ அந்த நட்சத்திரம் ஆனது ஆதிக்கம் செலுத்துகிற அங்கத்தில் தான் நோய் உண்டாகும். லக்னத்திற்கு 6, 8ஆம் அதிபதி ஆக இருக்கும் கிரகத்தால் ஏற்படும் நோயின் தன்மைகள் கர்ம வினையால் வருபவை.
6ஆம் இடத்து அதிபதி பூர்ண வலிமை பெற்று 1, 5 அல்லது 9ல் அமரக்கூடாது. அமர்ந்தால் ஆறாம் பாவாதி எவரோ அவரின் காரக நிலையில் உள்ள நோய் உருவாகும். லக்னத்திற்கு 8ல் எக்கிரகமும் அமரக்கூடாது.
Leave a reply