Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
பதினோராம் பாவத்தில் கிரகங்க இருப்பதால் ஏற்படும் பலன்கள் |

பதினோராம் பாவத்தில் கிரகங்க இருப்பதால் ஏற்படும் பலன்கள்

பதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெரும் பொருள் ஈட்டுதல், வலிமை, பிறரை மதியாமை, அடிமை பணி, நன்றியுடையவர், அடிமைகளை வெறுப்பவர், விருப்பமில்லாமை கொடுத்த பணிகளை செய்து முடித்தல்.

பதினோராம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம், மிகுதியான மக்கட் செல்வம், தீர்க்க ஆயுள், தனக்கு நன்மை தரும் பணியாட்கள், கபடமற்ற மனதை உடையவர், வீரம், புகழ் உடையவர்.

பதினோராம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெருஞ்செல்வம், லாபம் உடையவர், நண்பர்கள் மற்றும் இனபம் உள்ளவர், வீரம், மக்கட்பேறு, தைரியம் போன்ற இவைகள் எப்போதும் உடையவர், துக்கமில்லாதவர்.

பதினோராம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வந்தர், தனக்கு கீழ்படிந்துள்ள பணியாட்களை உடையவர், அறிவுடையவர், மிகுதியான இன்ப போகமுடையவர், முழு ஆயுள், புகழ் பெற்றவர்.

பதினோராம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பற்பல பொருட்கள் (செல்வங்கள்) வரவிற்கு காரணமானவர், வாகனங்கள், பணியாட்கள், வெகுமானங்கள் உடையவர், மிகுதியான கல்வி, மக்கட்பேறு குறைந்தவர், சிறந்த பண்பாளர்.

பதினோராம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அழகுள்ள மனைவி, பணியாட்கள், கூடுதல் பொருட்கள் வரவு மற்றம் அனைத்து வசதிகளையும் இன்பங்களையும் அனுபவித்தல்.

பதினோராம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

முழு ஆயுள் உள்ளவர், கலக்கம், குழப்பம் இல்லாதவர், சுபவைபவங்களுடன் இருப்பவர், வீரம், சிறந்த தொழில் செய்தல் நோயின்மை, செல்வம், மக்கள் உடையவர்.

பதினோராம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அதிக குழந்தைகள் இராது. நல்ல வளமான வாழ்க்கை உடையவர். நீண்ட ஆயுளும், காதில் நோயும் உள்ளவர்.

பதினோராம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம் சேர்ப்பவர், நற்குணங்கள் பல உடையவர். நன்றாக வாழ்வை அனுபவிப்பவர். தனக்கு தேவையான அனைத்தும் பெறுபவர்.

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)