Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
ஏழாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் ஏற்படும் பலன்கள் |

ஏழாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் ஏற்படும் பலன்கள்

ஏழாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மகாலட்சுமி அருளில்லாதவர், எப்பணியிலும் முதலில் தோல்வி, நோயாளி, தூய்மையற்ற உடலமைப்பு உள்ளவர், அரசர் (அ) அரசாங்கத்தால் சிறையில் அடைக்கப்படுதல், தண்டனை அனுபவித்தல், துன்பம் உள்ளவர், நாடோடி வாழ்க்கை, பெண்களை தூற்றுபவர்.

ஏழாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அழகு, இன்பம், கட்டுடல், அதிக இன்பம் விருப்பமுள்ளவர், தேய்பிறை சந்திரனால் ஏழ்மை உள்ளவர், சிற்றின்பத்தால் பெருந்துன்பம் அனுபவித்தல்.

ஏழாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மனைவி (அ) கணவன் பிரிவு, இறப்பு, மனைவியினால் துன்பம் அனுபவித்தல், நோயாளி, அலைபவர், பற்பல துன்பமுடையவர், பாவி, லட்சுமி அருளில்லாதவர், மெலிந்த உடல் அமைப்பு உடையவர்.

ஏழாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவு, ஆற்றல், அழகு உள்ளவர், அலங்காரம் உள்ளவர், நடுத்தர குடும்பத்தில் பிறந்த மனைவியுள்ளவர், மேலும் கலகத்தில் நாட்டமும், மிகுதியான பணம் செல்வமும் உடைய மனைவி அமைவாள்.

ஏழாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அதிர்ஷ்டமும், அழகும் உடைய மனைவி, தந்தையை விட மேன்மையான குணம் உள்ளவர், நன்றாக உறையாடுபவர், கவிஞர், முக்கியமானவர், புலவர், மிகுதியான புகழ் உடையவர்.

ஏழாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மேன்மையான அழகுள்ள மனைவி அமைவாள், மனைவியின் இன்பத்தை அனுபவித்தல், கூடுதல் அழகுள்ளவர், கலகமின்மை, உயர்ந்த அந்தஸ்து உடையவர், பெருஞ்செல்வம் உடையவர், பணக்காரர்.

ஏழாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சிறிது கூட இன்பமற்றவர், நோயுடையவர், மனைவியை பிரிபவர், மற்றும் இழப்பவர், செல்வமின்மை, கெடுதியான அலங்காரம், பாபர், இழிவான செயல்களை செய்பவர், பாப தொழில் புரிபவர்.

ஏழாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெண்களால் தனது செல்வத்தையும், வலிமையையும் இழப்பார். உற்றார் உறவினரைப் பிரிவார். அற்பமான புத்தியும், தனது எண்ணத்தின்படி வாழ்பவர், வேறுயாரும் உதவ மாட்டார்கள்.

ஏழாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அவமரியாதை உண்டு, இழிந்த பெண்கள் சேர்க்கை ஏற்படும். மனைவியை இழப்பர், வயிற்றில் நோய் உண்டு. வீரியம் குறைவானவர்.

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)