மூன்றாம் பாவத்தில் சூரியன் இருந்தால் எற்படும் பலன்கள்:
வலிமையானவர், உடன் பிறந்தவர்களுக்கு தீங்கு செய்தல், நற்குணங்களுள்ளவர், பண்டிதர், தீய மக்களை அடக்குவார்.
மூன்றாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் எற்படும் பலன்கள்:
மகிழ்ச்சி, வீரம், கல்வி, ஆசை, உணவு பொருட்கள் முதலியவற்றை தேடும் பழக்கமுள்ளவர், சந்திரன் பௌர்ணமியால் இருப்பின் மேற்சொன்னவைகள் முற்றிலும் நடைபெறும். தேய்பிறையினால் பலன்கள் சற்றே குறைவாகதான் இருக்கும்.
மூன்றாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் எற்படும் பலன்கள்:
வீரம், பிற மனிதர்களால் பகைக்கபடாதவர், உடன்பிறப்புகளை இழப்பவர், எப்போதும் மகிழ்ச்சி உடையவர், பற்பல குணங்களுக்கு இருப்பிடமாக திகழ்பவர், புகழ் பெற்றவர்.
மூன்றாம் பாவத்தில் புதன் இருந்தால் எற்படும் பலன்கள்:
துன்பம் அடைதல், ஏழ்மை, திறமை, உடன்பிறப்பு, பற்பலகபடம், (தந்திரம்) பொய்கள், சபலமானவர், எதற்கும் அஞ்சுபவராக இருப்பார்.
மூன்றாம் பாவத்தில் குரு இருந்தால் எற்படும் பலன்கள்:
எல்லா செயல்களிலும் தோல்வி, கருமி, உடன் பிறந்தவர்கள் மூலம்தான் வெற்றி காண்பவர், குளிர்ச்சியால் ஏற்படும் நோய், பெண்களிடம் அச்சம் கொள்ளாதவர், பாவ தொழில் செய்தல், இவரது செயலை மற்றவர்கள் புறக்கனித்தல்.
மூன்றாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் எற்படும் பலன்கள்:
இன்பமும், செல்வமும் உள்ளவர், பெண்களிடம் அஞ்சுபவர், கருமி, மகிழ்ச்சியற்றவர் அதிர்ஷடம், வீடு மற்றும் அதற்குரிய பொருட்கள் உடையவர்.
மூன்றாம் பாவத்தில் சனி இருந்தால் எற்படும் பலன்கள்:
தூய்மை அற்றவர், குலத்திற்கு பொருந்தாத செயல்களை செய்தல், சோம்பல் உள்ளவர்கள் மற்றும் பொறுப்பற்ற நபர்களுடன் சேர்ந்திருத்தல், வீரன், தானம் செய்பவர், எதிரிகளை (சகோதரர்கள்) விரட்டி அடிப்பர்.
மூன்றாம் பாவத்தில் ராகு இருந்தால் எற்படும் பலன்கள்:
தன்மானம் உடையவர். சகோதரரிடம் பகை உள்ளவர், நீண்ட ஆயுள், செல்வம், உறுதியான மனம் உடையவர்.
மூன்றாம் பாவத்தில் கேது இருந்தால் எற்படும் பலன்கள்:
நீண்ட ஆயுள், மனைவி, மக்கள், செல்வம், நல்ல உணவு, வலிமை யாவும் உண்டு. இவர் தனது சகோதரர்களில் ஒருவரை இழக்க நேரிடும்.
Leave a reply