இரண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான ஆட்கள், கால் நடைகள் உண்டு, முகத்தில் நோய், திருப்தியற்ற நிலமை, அரசர் மற்றும் தீயவர்களால் தொல்லையும் பொருள் இழப்பும் ஏற்படும்.

இரண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இயல்பான இன்பமும், உறவினர், செல்வமும் உள்ளவர், பொருளற்ற வார்த்தைகளை பயன்படுத்துதல், ஆட்சி, உச்சம், பௌர்ணமி சந்திரனாயின் மிகுதியான செல்வம், வாக்கு வாதத்தில் திறமையாக இருத்தல்.

இரண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம் அற்றவர், நன்மைகள் குறைவு, சுவையில்லாத உணவில் திருப்தியுடையவர், அழகற்ற வார்த்தை மற்றும் முகமுடையவர், தீய மக்களை ஆதரிப்பவர், கல்வி அறிவு குறைந்தவர்.

இரண்டாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தன்னுடைய அறிவால் தேடிய ஈட்டிய பெருஞ்செல்வம் உடையவர், உணவு மற்றும் அடிப்படை இன்பத்தில் நாட்டமுடையவர், நல்ல வார்த்தையும், செய்கையும், அறிவும், அடக்கமும், பண்பு உடையவர்.

இரண்டாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வந்தர், சுவை அறிந்து உணவு உண்ணுபவர்கள், வாக்கு திறமை உள்ளவர், கட்டுடல், நல்வாக்கு, மிகுதியான அழகுள்ள முகம் பொருந்திய உடலுடையவர், தானம் செய்தல், ஒளி பொருந்தியவர்.

இரண்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான பண்பாளர், அன்னதானம் செய்து சிறப்புடையவர், மேன்மையான செயல்கள், நல்ல வார்த்தைகளை அறிந்து கொண்டு பண்புடன் பழகுபவர், கூடுதல் பணமுள்ள தன்மை, நல்ல புலவராகவும் இருப்பார். கவர்ச்சிகரமான வார்த்தைகளால் அனைவரையும் கவருபவர்.

இரண்டாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:
ஒழுங்கற்ற முகம், செல்வங்களை அனுபவித்தல், மக்களைவிட்டு பிரிதல், கூடாத செயல்களை செய்தல், குடும்பத்தை வெறுத்து பிரிந்தவர், வாகனங்களும், சுகங்களும், மக்களும் உள்ளவர், தகாத வார்த்தை பேச கூடியவர், கீழ்தரமான எண்ணம் கொண்டவர்.

இரண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இவரின் பேச்சு போலித்தனமாகவும் உண்மையற்றும் இருக்கும். முகம் அல்லது வாயில் நோய் இருக்கும். அரசரால் வருமானம் உடையவர். மகிழ்ச்சியும், ரோஷமும் உடையவர். இளகிய மனம் உடையவர்.

இரண்டாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

கல்வியோ, செல்வமோ இல்லாதவர், தீய வார்த்தை உடையவர், வக்கிரமான பார்வை பெற்றவர். பிறர் வீட்டில் உண்பவர்.

Related Posts

சூரியன்- ஆத்ம பரிபூரணமும், குறிக்கோளும்.

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜயதுர்காவின் கருணையினாலே!! ஒவ்வொருவரும் தனக்கென்று ஒரு நிலையை அடைய ஆசைப்படுகின்றனர். அது அடைந்துவிட்டால் அவர்கள் பரிபூரணம் அடைந்ததாக கருதுகின்றனர் அல்லது முழு நிறைவு அடைகின்றனர். முழு நிறைவு...
Read More

ஐந்தாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஐந்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: இன்பமற்றவர், உறவினர் மற்றும் மக்கட்பேறில்லாதவர், வனம், மலைகளில் அலைபவர், விவசாயம் செய்தல், நிலையற்ற தன்மை, திறமை குறைந்தவர், குறைந்த...
Read More

கிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்ய துர்காவின் கருணையினாலே ஜோதிஷத்தில் கிரஹங்களின் வயதினை பற்றி கூறியதெல்லாம் தொகுத்து ஒரு பதிவினை வெளியிட விரும்பி இதனை தர விரும்புகிறேன். கிரஹங்களுக்கும் மனிதனுடைய வயதிற்கும் ஏதேனும்...
Read More