ஏழாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் இளமையில் பெண்களை சுற்றி அலையும் நடத்தையும் எப்பொழுது காமசிந்தனையாய் இருக்கும். மனைவிக்கு அடங்கிய கணவனாக இருப்பதும் அந்நிய பெண்களின் மேல் நாட்டமும் வெளியூர் சஞ்சாரமும் கூட்டு வியாபாரங்களில் இலாபங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பெண்களால் சம்பாத்தியமும் அவர்களாலேயே செலவுகளும் வழக்குகளால் பொருள் நஷ்டமும் அவமானங்கள் அபாயங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் குழந்தைகள் கர்ப்பத்திலேயே இறந்து பிறக்கும் மனைவியால் சுகம் உண்டாகாது சுமாரான இலாபங்களும் வெளியூர் சஞ்சாரமும் பிராயணங்களின் மூலம் நடக்கும் தொழில்களின் விருத்தியும் உண்டாகும்.
ஏழமாதிபன் நான்காமிடத்திலிருந்து தசை நடத்தினால் அதிகமான காம வேட்கையும் எப்பொழுதும் பெண்களே கதி என்று கிடப்பதும் தன் மனைவிக்கு கெட்டப்பெயர் உண்டாவதும் புதுக்காரியங்களில் ஈடுபாடும் அரசியல் வெற்றிகளும் உண்டாகும்.
ஏழாமதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் நல்ல நடத்தையும் குணங்களும் உண்டாவதும் நற்குணமும் நன்னடத்தையும் உடைய மனைவி வாய்க்கப் பெறுவதும் மேலான நடத்தையும் சகல சம்பத்துக்களும் நிரம்பிய வாழ்க்கை உண்டாவதும் கூடும்.
ஏழாமதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தன் மனைவி தன்னைக்காட்டிலும் அதிகமான காமியாக இருத்தலும், அவளால் பொருள் செலவும் நோய்களும் உண்டாவதும் சுகம் இல்லாமையும் உண்டாகும்.
ஏழாமதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை நடத்தினால் மனைவியால் புகழும் பேறும் அடைவதும், மனைவிக்கு அடங்கி கணவனாக இருப்பதும், தனக்கென்று எதுவும் இல்லாத அற்பஜீவனமும் உண்டாகும்.
ஏழாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் நோயாளியான மனைவியை அடைந்து அவளுடைய பணத்திற்காக அல்லது வேறு காரணத்தால் அடிமையைப்போல் இருக்க நேர்வதும் தன் சொத்துக்களை அன்னியரிடம் இழந்து விட நேர்வதும் பிரயாணத்தில் கஷ்டங்களும் உண்டாகும்.
ஏழாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அன்னிய ஜாதி மதங்களைச் சேர்ந்த பெண்களின் மேல் மோகமும் பெண்களால் பாக்கியம் உண்டாவதும் அவர்களாலேயே வாழ்க்கை நடைபெறுவதும் உண்டாகும். நீண்ட காலத்திற்கு நன்மை அளிக்கத்தக்க பெரும் காரியங்களிலேயே ஈடுபாடும் ஏற்படும்.
ஏழாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் வெளியூர் வாசம் அன்னியதேசச் சஞ்சாரம் முதலியன உண்டாகும். வெளியூர்களில் தொழில் உண்டாகும் மனைவி கெட்ட நடத்தை உடையவளாக கெட்ட பெயர் ஏற்படும்.
ஏழாமாதிபன் பதினொன்றாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் பெண்களால் அல்லது பெண்கள் விரும்பத்தக்கப்பொருட்களைத் தொழில் அல்லது வியாபாரங்களில் லாபங்களும் அதிகமான காமவேட்கையும் உண்டாகும்.
ஏழாமாதிபன் பன்னிரெண்டாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் சுய முயற்சியின்றி அந்நியர் சொற்கேட்டு நடப்பதும் தரித்திரமும் கஷ்டங்களும் மனைவிக்கு நோய் ஏற்பட்டு அவளால் பொருட் செலவுகளும் காமவேட்கைக் காரணமாக தன நஷ்டங்களும் உண்டாகும்.
Leave a reply