பாவங்கள் குறிப்பிடும் உடற்பாகங்கள் மற்றும் நோய்
லக்ன பாவம்:
ஒருவரது உயரம், தோற்றம், பருமன் இவற்றைக் குறிப்பதாகும். சிறப்பாக, தலை, மூளை, ரோமம், தோலைக்குறிக்கும். நிறத்தின் தன்யைக் குறிக்கும். லக்னத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகத்திற்கேற்ப அவரது நிறம் அமையும்.
ஆயுள் – நோய் எதிர்ப்புச் சக்தி – அல்லது இறுதி வரை ஏதாவது ஒரு வியாதியால் துன்பப்படும் நிலை சக்தி – நோய் தாங்கும் சக்தி உடல் உறுதி வியாதியிலிருந்து விடுபடும் நிலை – நோய் குணமாகும் நிலை.
2ம் பாவம்:
முகம், கண்கள், பற்கள், தொண்டை, மூக்கு, குரலின் தன்மை இவற்றைக் குறிக்கும்.
இளமைக் காலத்தில் ஏற்படும் நோய்கள். அவற்றால் ஏற்படும் பாதிப்பு
3ம் பாவம்:
காதுகள், கழுத்து, தோள்பட்டை, கைகள், மூச்சுக் குழுய், அதில் ஏற்படும் அழற்சி, குரல் வளை, குரல் வளை அழற்றி.
நோய் எதிர்ப்பு சக்தி பெறும் தகுதி – நோயைத் தாங்கும் தைரியம், உடலில் ஏற்படும் சக்தி இரத்தத்தின் தன்மை, முதலியன
4ம் பாவம்:
மார்பகம், நுரையீரல், உணவுக் குழாய்.
குடும்பத்தில் வரும் பரம்பரை நோய், உணர்ச்சி வசப்படுவதால் ஏற்படும் நோய் மன வருத்தத்தால் ஏற்படும் பாதிப்பு
5ம் பாவம்:
இருதயம், ஈரல், மண்ணீரல், கணையம், சிறுகுடல் பகுதி, பித்தப்பை.
பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் ஏற்படும் பாதிப்பு, உணர்ச்சிகளால் ஏற்படும் பாதிப்பு
6ம் பாவம்:
கிட்னி, குடல் பகுதி.
வியாதிகளைக் குறிப்பிடும் இடம். விபத்துக்களால் ஏற்படும் பாதிப்பு, அதனால் ஏற்படும் காயம், துன்பம் முதலியன
7ம் பாவம்:
கர்ப்பப் பை, கர்ப்ப பைக்குச் செல்லும் குழாய் (ஃபெலோபியன் டியூப்), கரு முட்டை மலக்குடல், அடி வயிறு.
உடல் உறவால் ஏற்படும் வியாதிகள்.
8ம் பாவம்:
வெளிப்புற ஜெனன உறுப்புக்கள், ஆசனவாய் (மலத்துவாரம்).
தீராத வியாதிகள் கண்டு பிடிக்க இயலாத வியாதிகள். அவற்றால் ஏற்படும் துன்பம், இழப்பு
9ம் பாவம்:
இடுப்பு, தொடைப்பகுதி.
இறையருளால் பெறும் உடல் நலம்.
10ம் பாவம்:
முழங்கால் மூட்டுப்பகுதி.
உடலின் சக்தி, செயல் திறன், செயலாற்றும் தகுதிக்கானச் சக்தி பெறும் நிலை
11ம் பாவம்:
கால், கண்.
வியாதிகளிலிருந்து விடுபடும் நிலை. நோய் குணமாகுமா? என்பதையும் தெரிவிக்கும் பாவம்
12ம் பாவம்:
பாதம், கண்.
மருத்துவ மனையில் இருக்கும் நிலை. குடும்பத்தை விட்டு தனித்திருக்கும் நிலை தொற்று நோய் பாதிப்பால் தனி விடுதியில், மருத்துவ மனையில் தனிப்பகுதியில் இருக்கும் நிலை.
Very nice website and information given in this are excellent.Keep giving this service because we are able to know basic idea in astrology.