வீடுகளின் வகைகள்

ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளும் வாழ்வின் பல்வேறு கூறுகளை விவரிக்கின்றன. இவற்றுள் முக்கிய வீடு முதல் வீடு எனும் லக்னம் ஆகும். மற்ற 11 வீடுகளும் லக்கினத்தைப் பொருத்தே அமையும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் லகனத்திற்கு கீழ் படிபவை.

கேந்திரம்;:

1, 4, 7, 10-ம் வீடுகள் கேந்திர வீடுகள் ஆகும். இவை விஷ்ணு கேந்திரம் எனப்படும்.

1-ம் வீடு ஜாதகரைக் குறிக்கிறது.

4-ம் வீடு தாய், வீடு, வாகனம்,

7-ம் வீடு மனைவி, பங்குதாரர்

10-ம் வீடு தொழிலைக் குறிக்கிறது.

எனவே 4 வீடுகளுமே வாழ்க்கையின் முக்கிய கூறுகளை சொல்கின்றன. கேந்திரத்தில் உள்ள கிரகங்களும் அதன் அதிபதிகளும் நன்மையைச் செய்வர் எனபது உறுதி. தேக சுகவிஷயங்களை குறிப்பவை கேந்திரங்கள் ஆகும். சுபர்கள்(குரு, சுக்கிரன், புதன் மற்றும் வளர்பிறை சந்திரன்)  1.4.7 அல்லது 10-ம் வீட்டிற்கு அதிபதியாதல் கேந்திராதிபத்திய தோஷம் ஆகும்.

திரிகோணம்:

1, 5. 9, திரிகோண வீடுகள். மிகவும் சுபமான வீடுகள், மனோ ரீதியான செயல்பாடுகளை விளக்கும். இவை லஷ்மி ஸ்தானங்கள் என அழைப்பர். திரிகோணாதிபதிகள் சுபத்தையே தருவர். கேந்திரம் மற்றும் கோணத்தில் உள்ள கிரகங்கள் ஜாதகரின் உடல் நலம், அந்தஸ்து, தனம், முன்னேற்றம், நடத்தை, ஆகிய முக்கிய குணங்களை முடிவு செய்ய வல்லவை.

பணபரம் :

2,5,8,11-ம் வீடுகள் பணம் வருவதைச் சொல்லும்.

2-ம் வீடு தனஸ்தானம்

5-ம் வீடு பூர்வ புண்ணியஸ்தானம்

8-ம் வீடு ரந்த்ர ஸ்தானம்

11-ம் வீடு லாப ஸ்தானம் ஆகும்.

ஆபோக்லீயம் :

3, 6, 9, 12-ம் வீடுகள் ஆபோக்லீயம் வீடுகள் ஆகும். நிலையற்றவை எனப் பொருள்படும். 3, 6, 12-ல் உள்ள சுப கிரகங்கள் நன்மை செய்ய மாட்டார்கள். ஆனால் பாவங்கள் நன்மையைச் செய்யும்.

உபஜெய வீடுகள்:

3 6 10 11-ம் வீடுகள் உப ஜய வீடுகள் ஆகும். வெற்றிக்கு உறு துணையாக உள்ள வீடுகள் ஆகும்.

3-ம் இடம்- வீரம், வெற்றியைக் குறிக்கும்.

6-ம் இடம்- எதிரிகள், வழக்கு, கடன்.

10-ம் இடம்- தொழில்

11-ம் இடம்- லாபஸ்தானம் ஆகும்.

ஆகவே இவ்வீடுகள் வெற்றிக்கு துணை செய்யும் வீடுகள் ஆகின்றன.

ஆயுள் ஸ்தானம் மற்றும் மாரக ஸ்தானம்:

3 8-ம் வீடுகள் ஆயுளைக் குறிப்பவை.

2 7-ம் வீடுகள் மரணத்தைக் குறிக்கும். ஆயுள் ஸதானங்களாகிய 3 8-ம் வீடுகளுக்கு 12-ல் உள்ளன. எனவே மாரகம் செய்கின்றன.

மறைவு ஸ்தானங்கள்:

6 8 12-ம் வீடுகள் தீய வீடுகள் என சொல்லப் படுகின்றன. கடன், நோய், இழப்பு, துக்கம் போன்றவற்றைச் சொல்வது துர் ஸ்தானங்கள் என்றும் சொல்வதுண்டு.

திரிகோண ராசிகள்   :    1, 5 , 9 –ம் வீடுகள்

கேந்திர ராசிகள்      :    1, 4 , 7 . 10 –ம் வீடுகள்

உப ஜெய ராசிகள்    :    3, 6 , 11 –ம் வீடுகள்

துர்ஸ்தான வீடுகள்   :     6, 8 , 12 –ம் வீடுகள்

அறம்- தர்ம வீடுகள்      :       1, 5 , 9

பொருள்-அர்த்த வீடுகள்   :       2, 6, 10

இன்பம்-காம வீடுகள்      :       3, 7, 11

வீடு-மோட்ச வீடுகள்   :       4, 8, 12

1 முதல் 6 வரை உள்ள வீடுகளை கண்ணுக்கத் தெரியாத பகுதி என்றும் 7 முதல் 12 வரை உள்ள வீடுகள் கண்ணிற்குத் தெரியும் பகுதி எனவும் சொல்வர். இதே போல் 10-ம் வீடு முதல் 3ம் வீடு வரை உள்ள பகுதியை கிழக்குப்பகுதி எனவும், 4 முதல் 9 வரை உள்ளதை மேற்குப் பகுதி எனவும் சொல்வர்.

Leave A Comment

thirteen − six =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

கிரஹம், ராசி பாவம் குறிப்பிடும் வயதுகள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்ய துர்காவின் கருணையினாலே ஜோதிஷத்தில் கிரஹங்களின் வயதினை பற்றி கூறியதெல்லாம் தொகுத்து ஒரு பதிவினை வெளியிட விரும்பி இதனை தர விரும்புகிறேன். கிரஹங்களுக்கும் மனிதனுடைய வயதிற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கிறதா என ஆராய்வது ஜோதிஷத்திற்கு மிகவும் தேவையாய் இருக்கிறது கிரஹன்களுக்குண்டான வயதினை பற்றி ஒரு நூலில் பாலோ தராஜ குமாரகஸ்த்ரிம் ஸத்குரு: ஷோடஸவத்ஸர: ஸித: பங்சாஸதர்கோ விதுரப்தஸப்ததி: ஸதாப்தஸங்க்யா […]

Read More

பதா ராசி – பாவ வலிமை

Parasari Dr. B. Ayyappa Sharma

  ஜயதுர்காவின் கருணையினாலே!!! கிரஹங்கள் உட்சம், ஆட்சி பெற்றாலும் நன்மை தராதது ஏன்?? ஒவ்வொரு பாவத்திற்கும் நன்மை மற்றும் தீமையான பலன்கள் கூறப்பட்டுள்ளது.செவ்வாய், புதன், குரு, சுக்கிரன், சனி போன்ற கிரஹங்கள் இரு பாவத்திற்கு ஆதிபத்தியம் பெறுகிறது. அவை லக்கினத்திற்கு முழு சுபராக அல்லது பாவராக இருந்தும் ஒரு பாவத்திற்கு நன்மையும் ஒரு பாவத்திற்கு தீமையும் கொடுப்பது ஏன்?? […]

Read More