பராசரி நிபந்தனை தசைகள்
சில தசைகள் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என பராசர ரிஷி வலியுறுத்துகிறார். இவைகளை நிபந்தனைகள் தசை என கூறலாம். அதற்கான நிபந்தனைகளை காணலாம்.
1. அஷ்டோத்தரி தசை
நிபந்தனை:
ராகு லக்ன கேந்திரத்தில் இல்லாமல் இருப்பது அல்லது லக்னாதிபதிக்கு திரிகோணத்தில் ராகு இல்லாமல் இருப்பது
2. ஷோடஷோத்தரி தசை
நிபந்தனை:
கிருஷ்ண பட்சம பகலில் பிறக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சம இரலில் பிறக்க வேண்டும்.
இதனையும் நிபந்தனையாக எடுத்துகொள்ளலாம்
கிருஷ்ண பட்சத்தில் பிறந்து இலக்கிணம் சந்திர ஹோரையில் இருக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சத்தில் பிறந்து இலக்கிணம சூரிய ஹோரையில் இருக்க வேண்டும்.
3. துவாதசோத்தரி தசை
நிபந்தனை:
நவாம்ச இலக்கிணம் ரிஷபம், துலாம் (சுக்கிரன் ஆட்சி வீடு) ஆக இருக்க வேண்டும்.
4. பஞ்சோத்தரி தசை
நிபந்தனை:
ராசி மற்றும் துவாதசாம்ச இலக்கணம் கடகமாக இருக்க வேண்டும்.
5. சதாப்திகா தசை
நிபந்தனை:
இலக்கணம் வர்கோத்தமம் அடைந்து இருக்க வேண்டும். அதாவது ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே ராசியில் இருக்கவேண்டும்.
6. சதுரஷ்டி ஷமா தசை
நிபந்தனை:
10ம் அதிபதி 10ம் வீட்டில் இருக்க வேண்டும்.
7. துவிசப்ததி ஷமா தசை
நிபந்தனை:
லகனாதிபதி லகனம் அல்லது ஏழாம் இடத்தில் இருக்கவேண்டும்
8. ஷஷ்டியாயனி தசை
நிபந்தனை:
சூரியன் லக்கனத்தில் இருக்க வேண்டும்.
9. ஷட்திரியம்ஸ சமா தசை
நிபந்தனை:
பகலில் பிறந்த ஜாதகருக்கு இலக்கணம் சூரிய ஹோரையில் இருக்க வேண்டும் அல்லது இரவில் பிறந்த ஜாதகருக்கு இலக்கணம் சந்திரனுடைய ஹோரையில் இருக்க வேண்டும்.
Leave a reply