பராசரி நிபந்தனை தசைகள்
சில தசைகள் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என பராசர ரிஷி வலியுறுத்துகிறார். இவைகளை நிபந்தனைகள் தசை என கூறலாம். அதற்கான நிபந்தனைகளை காணலாம்.
1. அஷ்டோத்தரி தசை
நிபந்தனை:
ராகு லக்ன கேந்திரத்தில் இல்லாமல் இருப்பது அல்லது லக்னாதிபதிக்கு திரிகோணத்தில் ராகு இல்லாமல் இருப்பது
2. ஷோடஷோத்தரி தசை
நிபந்தனை:
கிருஷ்ண பட்சம பகலில் பிறக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சம இரலில் பிறக்க வேண்டும்.
இதனையும் நிபந்தனையாக எடுத்துகொள்ளலாம்
கிருஷ்ண பட்சத்தில் பிறந்து இலக்கிணம் சந்திர ஹோரையில் இருக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சத்தில் பிறந்து இலக்கிணம சூரிய ஹோரையில் இருக்க வேண்டும்.
3. துவாதசோத்தரி தசை
நிபந்தனை:
நவாம்ச இலக்கிணம் ரிஷபம், துலாம் (சுக்கிரன் ஆட்சி வீடு) ஆக இருக்க வேண்டும்.
4. பஞ்சோத்தரி தசை
நிபந்தனை:
ராசி மற்றும் துவாதசாம்ச இலக்கணம் கடகமாக இருக்க வேண்டும்.
5. சதாப்திகா தசை
நிபந்தனை:
இலக்கணம் வர்கோத்தமம் அடைந்து இருக்க வேண்டும். அதாவது ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே ராசியில் இருக்கவேண்டும்.
6. சதுரஷ்டி ஷமா தசை
நிபந்தனை:
10ம் அதிபதி 10ம் வீட்டில் இருக்க வேண்டும்.
7. துவிசப்ததி ஷமா தசை
நிபந்தனை:
லகனாதிபதி லகனம் அல்லது ஏழாம் இடத்தில் இருக்கவேண்டும்
8. ஷஷ்டியாயனி தசை
நிபந்தனை:
சூரியன் லக்கனத்தில் இருக்க வேண்டும்.
9. ஷட்திரியம்ஸ சமா தசை
நிபந்தனை:
பகலில் பிறந்த ஜாதகருக்கு இலக்கணம் சூரிய ஹோரையில் இருக்க வேண்டும் அல்லது இரவில் பிறந்த ஜாதகருக்கு இலக்கணம் சந்திரனுடைய ஹோரையில் இருக்க வேண்டும்.

Related Posts

அஷ்டமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma
அஷ்டமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் மனைவி உயிருடன் இருக்கும் காலத்திலேயோ அல்லது அவளுக்கு மரணம் எற்படுவதாலோ இரண்டாவது விவாகம் ஒன்று நடைபெறலாம். அந்நியரால் பொருள் நஷ்டங்கள் உண்டாகும்....
Read More

தசா முறை அறிமுகம்.

Parasari Dr. B. Ayyappa Sharma
தசா முறை அறிமுகம். ஜோதிடக்கலை உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாய் அந்த நாட்டின் கலாச்சார வளர்ச்சிக்குத் தகுந்தவாறு வளர்ச்சி கொண்டுள்ளது. ஜோதிடத்தில் ஜாதக...
Read More

ஒன்பதாமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma
ஒன்பதாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் தன் முயற்சியின்றியே பாக்கியங்கள் உண்டாதலும் பொருள் லாபங்கள் சொத்துக்கள் விருத்தி குடும்பசுகம் அதிகரிப்பதும், எண்ணிய காரியங்களில் விருப்பமும் தர்ம சிந்தை...
Read More