பன்னிரண்டாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் உடல் நலக்குறைவும் கபம் சம்பந்தமான ரோகங்களும் கல்வியும் செல்வமும் இல்லாத தரித்திர வாழ்க்கையும் உண்டாகும் ஆண்மைக்குறைவு, தாம்பத்திய சுகம் இலலாமையும் உண்டாகும் தன்னம்பிக்கை இன்மையும், சுயமுயற்சி இன்மையும் வாழ்க்கையில் விரக்தியும் உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தரித்திர வாழ்க்கையும், தன்னுடைய வீடு மனைவி எல்லாவற்றையும் பிரிந்து சுற்றி அலையும் வாழ்க்கையும் விஷ்ணு பக்தியும் தயாள சிந்தையும் உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் கோழைத்தனமும் எதிலும் அக்கறையற்ற தன்மையும் சகோதரர் இல்லாமையும் தனக்கு உதவி இல்லாமையும் தானே தனியாக வயிறு வளர்த்துக்கொண்டு போகும் அவல நிலைமையும் உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை நடத்தினால் தாய்க்கு கண்டமும் தரித்திர வாழ்க்கையும் வீடு வாசல் சொத்து சுகங்களை இழந்து விடும்படியான நிலைமையும் கஷ்டங்களும் துக்கங்களும் உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தாம்பத்திய வாழ்க்கையில் அக்கறை இல்லாமையும் புத்திர நஷ்டங்களும் புத்திர பாக்கியக் குறைவும் கல்வி இன்மையும் கெட்ட வழிகளில் செல்லும் மனப்போக்கும் தன்புத்திக்குறைவால் தன்னிடம் இருந்த சொத்துக்களையும் இழந்து விடுதலும் மந்த புத்தியின் காரணமாக தன்னுடைய சுகபாக்கியங்கள் எல்லாவற்றையும் இழந்து அலையும்படியான வாழ்க்கையும் உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அன்னிய ஸ்திரீகளைச் சுற்றி அலைவதும் பாவசிந்தையும் புத்திர சோகங்களும் அன்னியரின் சொத்துக்களைத்தான் அடைதலும் உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை நடத்தினால் மனைவியை இழந்து விடுதலும் அல்லது மனைவியிடம் விருப்பமின்மையும் உடல் நலக்குறைவும் சக்தி இன்மையும் பொருள் நஷ்டங்களும் உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் எட்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் கெட்ட நடத்தையும் பெண்களால் பொருள் விரயமும் பாவகாரியங்களில் மனம் பிரவேசித்து அலைதலும் நரகத்தை அடையும் படியான பாவங்களைச் செய்தலும் உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தந்தைக்கு மரணம், தந்தை வழி சொத்துக்களை இழத்தல், பெரிய காரியங்களில் ஆர்வமும் முயற்சியும் இல்லாமை கிடைத்தது போதும் என்ற அக்கறை இல்லாமல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகும் தன்மை, முதலானவை உண்டாகும்.

பன்னிரெண்டாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அன்னியர் காரியங்களைச் செய்வதன் மூலம் லாபம் உண்டாகும். புத்திரபாக்கியம் இராது. தனக்கென்று தொழில், புகழ் சொத்துக்கள் முதலாவை இல்லாமல் இன்னொருவர் ஆதரவில் வாழ்க்கை நடத்தும் படியாக நேரிடும்.

பன்னிரெண்டாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தாம்பத்திய சுகம் இல்லாமலும் புத்திரபாக்கியம் இல்லாமலும் வாழ்க்கை நடத்த நேரிடும் சொத்து சுகம் இருந்த போதிலும் அனுபவிக்க வாய்ப்பு ஏற்படாது.

பன்னிரெண்டாமாதிபன் பன்னிரெண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் அன்னியருடைய சொத்துக்கள் மனைவியரை அடைவதும் பாவச் செயல்களில் நாட்டமும் அவற்றில் வெற்றியும் உண்டாகும் தன் பிள்ளைகளால் துக்கமும், பொருள் நாசமும் உண்டாகும் மனைவி மக்களுடன் விரோதமும் குடும்பத்தை விட்டு பிரிந்து அன்னிய ஸ்திரீயிடம் போய் சேர்ந்து விடும்படியான நிலைமையும் ஏற்படும்.

Leave A Comment

14 − 6 =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

மூலிகை மருந்து செய்ய உகந்த நேரம்

Parasari Dr. B. Ayyappa Sharma

மாதம்: சித்திரை, வைகாசி மிகவும் உகந்ததது. அடுத்தபடியாக ஆனி, ஆடி மாதங்களில் சுமாரான பலன்களைத் தரக் கூடியது. மற்ற மாதங்களில் மருந்துகள் செய்தால் தீமை பயக்கும். கிழமை: ஞாயிறு, திங்கள் மிகவும் நன்மைப் பயக்கும், அடுத்ததாக செவ்வாய்,வியாழன், வெள்ளி நாட்கள் சுமாரான பலன்களை தரும். புதன் மற்றும் சனி தீமை தரக்கூடியது ஆகும். நக்ஷத்திரம்: அசுவினி,கேட்டை,ஆயில்யம்,பூரட்டாதி மிகவும் உகந்ததது […]

Read More

ஒன்பதாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: செல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர். ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: இறைசெயல் மற்றம் பக்தியுடையவர், செல்வம், மக்கட்பேறு, அனைவரிடம் பணிவுடன் நடத்தல், எல்லோருக்கும் விருப்பமானவராக இருத்தல். ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் […]

Read More