பதினோராம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெரும் பொருள் ஈட்டுதல், வலிமை, பிறரை மதியாமை, அடிமை பணி, நன்றியுடையவர், அடிமைகளை வெறுப்பவர், விருப்பமில்லாமை கொடுத்த பணிகளை செய்து முடித்தல்.

பதினோராம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம், மிகுதியான மக்கட் செல்வம், தீர்க்க ஆயுள், தனக்கு நன்மை தரும் பணியாட்கள், கபடமற்ற மனதை உடையவர், வீரம், புகழ் உடையவர்.

பதினோராம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பெருஞ்செல்வம், லாபம் உடையவர், நண்பர்கள் மற்றும் இனபம் உள்ளவர், வீரம், மக்கட்பேறு, தைரியம் போன்ற இவைகள் எப்போதும் உடையவர், துக்கமில்லாதவர்.

பதினோராம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வந்தர், தனக்கு கீழ்படிந்துள்ள பணியாட்களை உடையவர், அறிவுடையவர், மிகுதியான இன்ப போகமுடையவர், முழு ஆயுள், புகழ் பெற்றவர்.

பதினோராம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பற்பல பொருட்கள் (செல்வங்கள்) வரவிற்கு காரணமானவர், வாகனங்கள், பணியாட்கள், வெகுமானங்கள் உடையவர், மிகுதியான கல்வி, மக்கட்பேறு குறைந்தவர், சிறந்த பண்பாளர்.

பதினோராம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அழகுள்ள மனைவி, பணியாட்கள், கூடுதல் பொருட்கள் வரவு மற்றம் அனைத்து வசதிகளையும் இன்பங்களையும் அனுபவித்தல்.

பதினோராம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

முழு ஆயுள் உள்ளவர், கலக்கம், குழப்பம் இல்லாதவர், சுபவைபவங்களுடன் இருப்பவர், வீரம், சிறந்த தொழில் செய்தல் நோயின்மை, செல்வம், மக்கள் உடையவர்.

பதினோராம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அதிக குழந்தைகள் இராது. நல்ல வளமான வாழ்க்கை உடையவர். நீண்ட ஆயுளும், காதில் நோயும் உள்ளவர்.

பதினோராம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம் சேர்ப்பவர், நற்குணங்கள் பல உடையவர். நன்றாக வாழ்வை அனுபவிப்பவர். தனக்கு தேவையான அனைத்தும் பெறுபவர்.

Leave A Comment

20 + twelve =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜ்யதுர்காவினை வணங்கி, கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார். இதன் பொருள். உட்ச கிரஹம் முழு பலனையும், மூலத்திரிகோண கிரஹம் முக்கால் பலத்தினையும், ஆட்சி கிரஹம் பாதிபலத்தினையும், நட்பு கிரஹம் கால் பலத்தினையும், சமம் கிரஹம் எட்டில் ஒரு பங்கு பலத்தினையும், நீட்ச/பகை கிரஹம் […]

Read More

கிரஹங்கள் செயல்பட ஆரம்பிக்கும் வயது?

Parasari Dr. B. Ayyappa Sharma

ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும். சூரியன்–22 வயது சந்திரன்–24 வயது செவ்வாய்–28 […]

Read More