ஜ்ய துர்காவினை வணங்கி…
பஞ்சாங்கம்
திதேஶ்சஶ்ரியமாப்நோதி வாராதாயுஷ்யவர்தநம்।
நக்ஷத்ராத் ஹரதே பாபம் யோகாத் ரோகநிவாரமண் ।।
கரணாத் கார்யஸித்தி ஸ்யாத் பஞ்சாங்கபலமுத்தமம்।
பஞ்ச அங்கமே பஞ்சாங்கம் என அழைக்கப்படுகிறது.திதியினால்-செல்வப்பெருக்கும் வாரத்தினால்-ஆயுள்விருத்தியும் நக்ஷத்திரத்தினால்-பாவநிவர்த்தியும் யோகத்தினால்-நோய்குறைவதும் கரணத்தினால்-காரியம்கைகூடுதலும் சாத்தியம் உண்டாகும் என மேற்கண்ட பாடலில் பொருள் கூறப்பட்டுள்ளது.
அடியேன் இதனையே வேறு கண்ணோட்டத்தில் காணுகிறேன். என்னுடைய ஆராய்ச்சி பிராகாரம் எந்த ஒரு காரியத்திற்கும் பஞ்சஅங்கம் என்பது முக்கியமானது. எந்த காரியத்திற்கும் பஞ்ச அங்கத்தின் செயல்பாடானது கீழேயுள்ளவாறு அமைகிறது.
பஞ்சாங்கத்தில் உள்ள கிழமையானது ஒருகாரியத்தின் உயிர் மற்றும் சக்தியையும், பஞ்சாங்கத்தில் உள்ள திதி ஆனது ஒருகாரியத்தினை திறம்பட செய்து முடிக்க நாம் அக்காரியத்தின் மீது வைக்கும் ஆசை மற்றும் விருப்பத்தினையும், பஞ்சாங்கத்தில் உள்ள யோகம் ஆனது ஒருகாரியத்தில் நம்முடைய ஒத்துழைப்பு மற்றும் உடனுழைத்தல் போன்றவற்றினையும், பஞ்சாங்கத்தில் உள்ள கரணம் ஆனது ஒருகாரியத்தின் செயல்பாடு மற்றும் வலிமையையும், பஞ்சாங்கத்தில் உள்ள நக்ஷத்திரம் ஆனது ஒருகாரியத்தின் முடிவு மற்றும் பலனையும் குறிக்கிறது.
ஒரு நற்காரியத்தினை செய்யும் போது நாம் பஞ்ச அங்கம் பார்க்கிறோம் அல்லவா. அப்போது கிழமை, திதி நக்ஷத்திர, யோக, கரணத்தில் எது அசுபமாக இருக்கிறதோ அவற்றில் பலனில் கெடுதி உண்டாகும். உதாரணனாக நித்திய நாம யோகம் நல்ல யோகமாக அமையாவிடில் உறவினர், நன்பர், அன்பர் இவர்களின் ஒத்துழைப்பு அக்காரியத்திற்கு கிடைக்காது.இதேபோல மற்றவற்றிற்கும் பார்த்துக்கொள்ளவும்.