Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
நட்சத்திரங்கள் குறிப்பிடும் உடலின் பாகங்கள், பாஷாணங்கள், மூலிகைகள், வடிவங்கள் |

நட்சத்திரங்கள் குறிப்பிடும் உடலின் பாகங்கள், பாஷாணங்கள், மூலிகைகள், வடிவங்கள்

நக்ஷத்திரம் உடல் பாகம் பாஷாணம் வடிவம்
அசுவினி புறங்கால் ஆட்டுப்பு குதிரை முகம்
பரணி உள்ளங்கால்கள் மாட்டுப்பு அடுப்பு(முக்கோண வடிவம்)
கார்த்திகை தலை குதிரையுப்பு -கற்றை
ரோகினி நெற்றி கழுதைப்பு -ஊற்றால்
மிருகசீரிஷம் புருவம் தாளகம் தேங்காய்க் கண்
திருவாதிரை கண் வீரம் இராசமணி
புனர்பூசம் மூக்கு கௌரி -கடைவீதி
பூசம் முகம் வெள்ளை -புடலம்பூ – அம்பு
ஆயில்யம் காது லிங்கம் -அம்மி
மகம் உதடு சிங்கி -நுகத்தடி – ஊஞ்சல்
பூரம் வலது கை இரசகற்பூரம் -கட்டில் கால்
உத்திரம் இடது கை புனுகு -யானைத் தந்தம்
ஹஸ்தம் கை விரல் கெந்தி -கைத்தலம் – உள்ளங்கை
சித்திரை கழுத்து காந்தம் -புலிக்கண்
சுவாதி மார்பு வெள்ளெருக்கு -தீபம்
விசாகம் மூளை சிப்பிநீர் -சுளகு
அனுஷம் வயிறு அமுரியுப்பு -முடப்பனை
கேட்டை உடலின் வலது பாகம் வெடியுப்பு -ஈட்டி – குண்டலம்
மூலம் உடலின் இடது பாகம் உவருப்பு -பொற்காளம்
பூராடம் முதுகு சுண்ணாம்பு -கட்டில் கால்
உத்திராடம் இடை சீனம் -கட்டில் கால்
திருவோணம் ஜனன உறுப்பு வெண்காரம் முழக்கோல்
அவிட்டம் ஆசன வாய் நவச்சாரம் -தவிட்டுக் கூட்டம்
சதயம் வலது தொடை துருசு -பூங்கொத்து
பூரட்டாதி இடது தொடை காதுகுரும்பி -கட்டில் கால்
உத்திரட்டாதி முழங்கால் சவுக்காரம் கட்டில் கால்
ரேவதி கணுக்கால், பாதம். சிப்பிநீர் ஓடம்
நட்சத்திரங்களும் மூலிகைகளும்

அஸ்வினி- மூலிகை எட்டி
மருத்துவகுணம் நாகமுட்டி விடமுட்டி என்று இரண்டு வகையால் எட்டிகளை ஆயுர்வேதம் இனங்காட்டுகிறது. நாகமுட்டி பாம்பின் நஞ்சைப்போக்கும் ஆற்றல் மிக்கது. வாதம், செரியாமை காலரா ஆண்மைக் குறைவு வயிற்றுவலி நடுக்கம் போன்றவைக்கு மருந்தாகும்,
பரணி – மூலிகை நெல்லி
மருத்துவகுணம் தொற்று நோய்களை எதிர்க்கின்ற ஆற்றலும் குடலில் சுரக்கின்ற அமிலங்களில் தீய விளைவுகளைக் கட்டுப்படுத்துகின்ற தன்மையும் நெல்லிக்காய் சாறுக்குள்ளது. ஒரு நாளைக்கு பெரியவர்களுக்குச் சுமார் 75 மில்லிகிராம் வரையும், சிறுவர்களுக்கு 30 லிருந்து 50 மில்லி கிராம் வரையும் விட்டமின் “சி” உயிர்ச்சத்து தேவைப்படுகிறது. இந்த அளவை தினமும் இரண்டு நெல்லிக்காய்களை நாம் உண்பதன் மூலம் பெற முடியும்.

கார்த்திகை மூலிகை அத்தி
மருத்துவகுணம் அத்திப்பட்டைக்கு ஒடிந்த எலும்புகளை ஒன்று சேர்க்கும் தன்மை உண்டு. பெண்களின் பிறப்புறுப்புகளில் தோன்றுகின்ற நோய்களை அத்திக்கொழுந்து குணப்படுத்தும். அத்தி மரப்பாலை மூன்று நாள் தர வாய் இரணம், வாய்ப்புண் குணமாகும்.
ரோகினி மூலிகை நாவல்
மருத்துவகுணம் கிருமிகளை கட்டுப்படுத்தும் திறன் உடையது நாவல். நாவல் கொழுந்துடன் ஏலம் சேர்த்து அரைத்து ஆட்டுப்பாலில் கலந்து கொடுக்கச் செரியாக் கழிச்சல், சீதக் கழிச்சல் தீரும். நாவல்பட்டையுடன் கடுக்காய்த்தோல் சேர்த்துச் சூரணம் செய்து தரமேகம்,நீரிழிவு குணமாகும்.

மிருகசீரிடம் மூலிகை கருங்காலி
மருத்துவகுணம் கருங்காலி பட்டையின் குடிநீர் நீரிழிவை போக்கும் இரத்தத்தைச் சுத்தி செய்யும் தன்மை உடையது.குன்மம், மேகம், பெருவயிறு, நீரிழிவு என்னும் பெரும் நோயை குணப்படுத்தும் தன்மை உடையது.

திருவாதிரை மூலிகை செஞ்சந்தனம்
மருத்துவ குணம் முகப்பரு, கட்டி, கொப்பளம்,, உஷ்ணத்தை போக்கும்.

புனர்பூசம் மூலிகை மூங்கில்
மருத்துவகுணம் மூங்கில் இலைச்சாறுடன் காடியுடன் கூட்டிப் பூச இடுப்பு வலி பிடிப்புத் தீரும். மூங்கில் அரிசி நீரிழிவு நோயாளிகளுக்கு மிகச் சிறந்த உணவு.

பூசம் மூலிகை அரசு
மருத்துவகுணம் அரச மர இலை கொழுந்தை அரைத்து மோரில் கலக்கித் தர சீதபேதி தீரும். அரசம் விதை சிற்றரத்தை சூரணம் தேனில் குழைத்து தர நெஞ்சுவலி, இருமல், தொண்டைக்கட்டு தீரும்.

ஆயில்யம் மூலிகை புன்னை
மருத்துவகுணம் எண்ணெயை தடவினால் சொறி, சிரங்கு போன்ற தோல் வியாதிகள் குணம் அடையும். வெறிநாய்க் கடி நஞ்சிற்கு புன்னை வேரைப் புளித்தகாடியில் அரைத்து தர வேண்டும்.

மகம் மூலிகை ஆலம்
மருத்துவகுணம் தீராத மேக நோயையும், எரிச்சலையும், நீரிழிவையும், வாயில் வருகின்ற சிறு கொப்பளங்களையும் புண், கிரந்தியையும் போக்கும் தன்மையுடையது.ஆண்மையை பெருக்கும் தன்மையுடையது.

பூரம் மூலிகை பலாசு
மருத்துவகுணம் வயிற்றிலுள்ள பூச்சிகளை வெளிப்படுத்தும், கழிச்சலையும், வாத நோய்களையும் கட்டுப்படுத்தும். இதன் பிசின் ஆண்மைக்கும் அறிவுக்கும் நரம்புகளின் வலுவிற்கும் காரணம் ஆகும். இதை வயிற்றுப்புழு படர் தாமரை கரப்பான் வயிற்று இரைச்சல் உடல் வலியை போக்கும்.

உத்திரம் மூலிகை அலரி
மருத்துவகுணம் குட்டம், கிரந்தி, காதுப்புண், காதுவலி தீரும். காதில் தங்கிய பூச்சிகள் வெளிப்படும். தலைவலி, தாலைபாரம் போன்றவைக்கும் இவை பயன்படும்.

அஸ்தம் மூலிகை வேலம்
மருத்துவகுணம் பற்களிலுண்டான பலவகைப்பட்ட நோய்களை போக்கி அவைகளை கல்லுக்கு ஒப்பாய் அசையாமல் ஈருகளுக்கு பலப்படுத்தும் குணமுடையவை. மற்றும் பித்த மயக்கம், வாதசுரம், இடுப்பு வாதம், சர்வாங்க வாதம் நீங்கும்.

சித்திரை மூலிகை வில்வம்
மருத்துவகுணம் மும்மூர்த்திகளுக்கு இணையாக பேசப்படும் இவ்வில்வத்தை கண்ணெரிச்சல், தலைவலி, உடல் அழகு, மூளையைப் பற்றிய நோய் நீங்குவதுடன் உடலுக்கு வன்மையும் அழகும் உண்டாக்கும். மேலும், இது ஒரு நல்ல மலமிளக்கியாகவும் செயல்படுகிறது.

சுவாதி மூலிகை மருதம்
மருத்துவகுணம் தீராத வயிற்றுவலி,காது சம்பந்தப்பட்ட நோய், வறட்சூலை, நஞ்சு போக்கி, சுரம், நீரிழிவு, குட்டம், பிரமேகம் மற்றும் இதயத்திற்கு வலுதருவதற்கும் இது பயன்படுகிறது. மூல, பௌத்திர நோய்களின் வலியை குறைப்பதுடன் அதனை அறவே நீக்கவும் பயன்படுகிறது.

விசாகம் மூலிகை விளா
மருத்துவகுணம் தன்னிலை மறந்து புலம்பச் செய்கின்ற பித்தம், சுவாசகாசம், சுவையின்மை, தாகம், ஈளை, இருமல், வெப்பத்தால் உண்டாகும் நீர் வேட்கையை குணப்படுத்தக் கூடியது. விளாவாதம் மற்றும் ஆண்மை குறைவிற்கும் இது பயன்படுகிறது.

அனுசம் மூலிகை மகிழம்
மருத்துவகுணம் உடற்சோர்வு, தலைவலி, தலைபாரம், நீரேற்றம், பல்ஈறுகட்டி, பல்வலி, ஆறாத ரணங்கள் ஆறவும், கர்ப்பப்பை பலப்படுதலுக்கும், புணர்ச்சியில் இச்சை இல்லாதவருக்கு இச்சை ஊட்டவும் பயன்படுகிறது.

கேட்டை மூலிகை பிராய்
மருத்துவகுணம் சீதகழிச்சல், இரத்தப்போக்கு, கிராணி தீரும். பித்த வெடிப்பு, பல்ஈறு வீக்கம், ஈறில் இரத்தம் கசிதல, பல் ஆட்டம் போன்றவை நீங்கும். இது ஆண்மைப் பெருக்கியாகவும் பயன்படுகிறது.

மூலம் மூலிகை மா
மருத்துவகுணம் தேமல், குட்டம், கிரந்தி, மாலைக்கண் பாதிப்பு, வயிற்றிலுள்ள பூச்சிகளை அகற்றும், வறிற்றுப் போக்கு, சீதபேதி, முலச்சூட்டைப் போக்கவும், வாய்ப்புண், தொண்டைப்புண், வயிற்றுப்புண் நீங்கும்.

பூராடம் மூலிகை வஞ்சி
மருத்துவகுணம் நாவரட்சி, எரிச்சல், நீரிழிவு, இருமல், சோகை, காமாலை, குட்டம், பெரும்பாடு, காமாலை, மூர்ச்சை, வாந்தி தீரும். பதினெட்டு வகையான குட்ட நோயை குணப்படுத்தும் தன்மையுடையது.

உத்திராடம் மூலிகை பலா
மருத்துவகுணம் பெருத்த வயிறு வற்றவும், விரைவாதத்தை போக்கவும், செரியாமைக்கும், வாய் நாற்றத்தைப் போக்கவும், கூலை, ஆண்மை விருத்திக்கும், உடல் குளிர்ச்சியை தணிக்கவும் பயன்படுகிறது.

திருவோணம் மூலிகை எருக்கு
மருத்துவகுணம் பாம்வு விஷம் நீக்கும். வலிப்பு, கீல்வாதம், இருமல், உடலில் உண்டாகும் வீக்கமும, இரத்த பித்தமும் குணமாகும். காதில் சீழ் வடிதல், சுவாசகாசம், நீர்ப்பீனிசம், தலைபாரம் போன்றவைக்கு பயன்படுகிறது.

அவிட்டம் மூலிகை வன்னி
மருத்துவகுணம் கர்ப்பபை சமபந்தமான நோய்களைக் குணப்படுத்தும், வாதம், சன்னி, திரிதோஷக் குற்றங்களைப் போக்கும். தோல் நல்ல நிறத்தை பொலிவைத் தருவதுடன், ரோமத்தையும் நீக்கும். சொறி, சிரங்கு, தேமல் போன்றவைக்கு பயன்படுகிறது.
சதயம் மூலிகை கடம்பு
மருத்துவகுணம் வாதத்தை தணிக்கும், விந்துவை வளர்க்கும், தீரத்த இரத்த ஓட்டத்தை போக்கும். கப பித்தம், வீக்கம், நஞ்சு, ரணம் மேகநோய்கள் தீர்க்கும். குளிர் சுரம், பிடிப்பு, கண்ணோய்க்கு உகந்தது.

பூரட்டாதி மூலிகை தேவதாரு
மருத்துவகுணம் கண்டமாலை வீக்கம் தீரும், இரைப்பு, வலிப்பு, காது நோய், பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய்கள், வண்டுக் கடி, விசக்கடி, சூதக கட்டு, மூத்திர கிரிச்சாரம் போன்றவை தீரும்.

உத்திரட்டாதி மூலிகை வேம்பு
மருத்துவகுணம் தோல் நோய்களை குணப்படுத்தும், நோய் எதிர்ப்பு சக்தியை தருகிறது, குடற்புழுக்களை அகற்றுகிறது, அம்மை போன்ற நோய்களை தடுப்பதற்கும், மேலும் பரவாமல் இருப்பற்கும் பயன்படுகிறது.

ரேவதி மூலிகை இலுப்பை
மருத்துவகுணம் நீரிழிவு, ரத்தப்பித்தம், மேகவாயு, சொறி, சிரங்கு, நாக்கு வாதம், பித்தசுரம், தீச்சுரம் போன்றவைக்கு பயன்படுகிறது. நீர்வேட்கையை தணிக்கவும் பயனபடுகிறது.

மருத்துவம் செய்வதற்கென்று அக்காலத்தில் மருத்துவர்கள் ஜோதிடத்தை பயன்படுத்தி வந்தனர். அதாவது, மருந்து நல்லபடியாக செய்து முடிக்கவும், அதன் தரம் குறையாமல் இருக்கவும் காலத்தையும் நேரத்தையும் கணக்கில்வைத்துக் இருந்தனர். மேலும், இந்த மருந்துகள் இந்த காலத்தில்தான்செய்ய வேண்டும் என்றும், அதற்கு உகந்த நாள் நட்சத்திரங்களையும் தேர்ந்தெடுத்து மருந்துகள் செய்துள்ளனர். மேலும், மூலிகைகளை பறிக்கும் முன்பு நாள், நட்சத்திரம், நேரம் பார்த்து, நூலில் காப்பு கட்டி அதற்குண்டான மந்திரங்களை ஓதி சாபநிவர்த்தி செய்து பின்பே மூலிகைக்குண்டான முழு பலன்கள் கிடைக்கும் என்று வைத்திய நூல்கள் கூறுகின்றன.

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)