இரண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மிகுதியான ஆட்கள், கால் நடைகள் உண்டு, முகத்தில் நோய், திருப்தியற்ற நிலமை, அரசர் மற்றும் தீயவர்களால் தொல்லையும் பொருள் இழப்பும் ஏற்படும்.
இரண்டாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
இயல்பான இன்பமும், உறவினர், செல்வமும் உள்ளவர், பொருளற்ற வார்த்தைகளை பயன்படுத்துதல், ஆட்சி, உச்சம், பௌர்ணமி சந்திரனாயின் மிகுதியான செல்வம், வாக்கு வாதத்தில் திறமையாக இருத்தல்.
இரண்டாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
செல்வம் அற்றவர், நன்மைகள் குறைவு, சுவையில்லாத உணவில் திருப்தியுடையவர், அழகற்ற வார்த்தை மற்றும் முகமுடையவர், தீய மக்களை ஆதரிப்பவர், கல்வி அறிவு குறைந்தவர்.
இரண்டாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
தன்னுடைய அறிவால் தேடிய ஈட்டிய பெருஞ்செல்வம் உடையவர், உணவு மற்றும் அடிப்படை இன்பத்தில் நாட்டமுடையவர், நல்ல வார்த்தையும், செய்கையும், அறிவும், அடக்கமும், பண்பு உடையவர்.
இரண்டாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:
செல்வந்தர், சுவை அறிந்து உணவு உண்ணுபவர்கள், வாக்கு திறமை உள்ளவர், கட்டுடல், நல்வாக்கு, மிகுதியான அழகுள்ள முகம் பொருந்திய உடலுடையவர், தானம் செய்தல், ஒளி பொருந்தியவர்.
இரண்டாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:
மிகுதியான பண்பாளர், அன்னதானம் செய்து சிறப்புடையவர், மேன்மையான செயல்கள், நல்ல வார்த்தைகளை அறிந்து கொண்டு பண்புடன் பழகுபவர், கூடுதல் பணமுள்ள தன்மை, நல்ல புலவராகவும் இருப்பார். கவர்ச்சிகரமான வார்த்தைகளால் அனைவரையும் கவருபவர்.
இரண்டாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:
ஒழுங்கற்ற முகம், செல்வங்களை அனுபவித்தல், மக்களைவிட்டு பிரிதல், கூடாத செயல்களை செய்தல், குடும்பத்தை வெறுத்து பிரிந்தவர், வாகனங்களும், சுகங்களும், மக்களும் உள்ளவர், தகாத வார்த்தை பேச கூடியவர், கீழ்தரமான எண்ணம் கொண்டவர்.
இரண்டாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:
இவரின் பேச்சு போலித்தனமாகவும் உண்மையற்றும் இருக்கும். முகம் அல்லது வாயில் நோய் இருக்கும். அரசரால் வருமானம் உடையவர். மகிழ்ச்சியும், ரோஷமும் உடையவர். இளகிய மனம் உடையவர்.
இரண்டாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:
கல்வியோ, செல்வமோ இல்லாதவர், தீய வார்த்தை உடையவர், வக்கிரமான பார்வை பெற்றவர். பிறர் வீட்டில் உண்பவர்.
Leave a reply