பராசரி நிபந்தனை தசைகள்
சில தசைகள் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என பராசர ரிஷி வலியுறுத்துகிறார். இவைகளை நிபந்தனைகள் தசை என கூறலாம். அதற்கான நிபந்தனைகளை காணலாம்.
1. அஷ்டோத்தரி தசை
நிபந்தனை:
ராகு லக்ன கேந்திரத்தில் இல்லாமல் இருப்பது அல்லது லக்னாதிபதிக்கு திரிகோணத்தில் ராகு இல்லாமல் இருப்பது
2. ஷோடஷோத்தரி தசை
நிபந்தனை:
கிருஷ்ண பட்சம பகலில் பிறக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சம இரலில் பிறக்க வேண்டும்.
இதனையும் நிபந்தனையாக எடுத்துகொள்ளலாம்
கிருஷ்ண பட்சத்தில் பிறந்து இலக்கிணம் சந்திர ஹோரையில் இருக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சத்தில் பிறந்து இலக்கிணம சூரிய ஹோரையில் இருக்க வேண்டும்.
3. துவாதசோத்தரி தசை
நிபந்தனை:
நவாம்ச இலக்கிணம் ரிஷபம், துலாம் (சுக்கிரன் ஆட்சி வீடு) ஆக இருக்க வேண்டும்.
4. பஞ்சோத்தரி தசை
நிபந்தனை:
ராசி மற்றும் துவாதசாம்ச இலக்கணம் கடகமாக இருக்க வேண்டும்.
5. சதாப்திகா தசை
நிபந்தனை:
இலக்கணம் வர்கோத்தமம் அடைந்து இருக்க வேண்டும். அதாவது ராசி மற்றும் நவாம்சத்தில் ஒரே ராசியில் இருக்கவேண்டும்.
6. சதுரஷ்டி ஷமா தசை
நிபந்தனை:
10ம் அதிபதி 10ம் வீட்டில் இருக்க வேண்டும்.
7. துவிசப்ததி ஷமா தசை
நிபந்தனை:
லகனாதிபதி லகனம் அல்லது ஏழாம் இடத்தில் இருக்கவேண்டும்
8. ஷஷ்டியாயனி தசை
நிபந்தனை:
சூரியன் லக்கனத்தில் இருக்க வேண்டும்.
9. ஷட்திரியம்ஸ சமா தசை
நிபந்தனை:
பகலில் பிறந்த ஜாதகருக்கு இலக்கணம் சூரிய ஹோரையில் இருக்க வேண்டும் அல்லது இரவில் பிறந்த ஜாதகருக்கு இலக்கணம் சந்திரனுடைய ஹோரையில் இருக்க வேண்டும்.

Leave A Comment

two × three =

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)

Recommended Posts

பன்னிரண்டாமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma

பன்னிரண்டாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் உடல் நலக்குறைவும் கபம் சம்பந்தமான ரோகங்களும் கல்வியும் செல்வமும் இல்லாத தரித்திர வாழ்க்கையும் உண்டாகும் ஆண்மைக்குறைவு, தாம்பத்திய சுகம் இலலாமையும் உண்டாகும் தன்னம்பிக்கை இன்மையும், சுயமுயற்சி இன்மையும் வாழ்க்கையில் விரக்தியும் உண்டாகும். பன்னிரெண்டாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தரித்திர வாழ்க்கையும், தன்னுடைய வீடு மனைவி எல்லாவற்றையும் பிரிந்து சுற்றி அலையும் வாழ்க்கையும் விஷ்ணு […]

Read More

பதினொன்றாமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma

பதினொன்றாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் தன் பெயர் புகழ் முதலானவற்றைக் கொண்டே சம்பாத்தியங்கள் உண்டாவதும் மிகவும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கையும் நல்ல குணமும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பரந்த நோக்கமும் நாவன்மையும் எழுத்து பேச்சுத் திறமைகளால் பொருள் லாபங்களும் உண்டாகும். பதினொன்றாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பந்தயசூதாட்ட வியாபாரங்களில் லாபங்களும் புதையல் கிடைத்தது போல் சொத்துக்கள் வந்து சேர்வதும் […]

Read More