நான்காம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர் அற்றவர், வாகன சுகம் இல்லாதவர், மனதில் துன்பம், தந்தை, செல்வம் மற்றும் வீட்டிற்கு தீங்கு செய்பவர், தீய குணமான தலைவன் (அ) அரசனை வணங்குதல்.

நான்காம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடுகள், அதற்குண்டான பொருட்கள் மற்றும் வாகனங்கள் உள்ளவர், தானம், தர்மம் செய்தல், பெண்களின் விருப்பத்தை நிறைவேற்றுதல், மிகுதியான இன்பமும், துன்பமும் இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடு, செல்வம், வாகனம், மற்றும் வீட்டில் பயன்படுத்தும் பொருட்கள் இல்லாதவர், மிகுதியான துன்பமுள்ளவர், குடும்பத்தை விடுத்து பிறர் வீட்டில் வசிப்பவர்.

நான்காம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பண்டிதர், பெருஞ்செல்வம், வாகனம், பற்பல பொருட்களும், உறவினர்களும் உள்ளவர், சோதிட அனுபவம் உள்ளவர், ஒவ்வொரு நாளும் படிப்படியாக முன்னேறி கொண்டே இருப்பர்.

நான்காம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர்கள், வீடு மற்றும் அதற்கேற்ற பொருட்கள், வாகனங்கள், இன்பம், அறிவு, அனுபவ இன்பம், செல்வம், தலைவராகுதல் போன்ற பலன்களும், பகைவர்களை வெற்றி கொள்ளும் தன்மையும் ஏற்படும்.

நான்காம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நல்ல நண்பர்கள், உறவினர்கள், வாகனம், புகழ், செல்வம், அதிர்ஷடமுள்ளவர், ஏழ்மை இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

உறவினர் இல்லாதவர், வீடு, வாகனம், செல்வம், திறமை, இன்பம் ஆகிய இவை இல்லாதவர், மனதில் துக்கம் உடையவர், இளமையில் நோயினால் பாதிப்பு உள்வர், நகங்களையும், உடலில் மயிர்களையும் வளர்ப்பவர், சுகமற்றவர்.

நான்காம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவற்றவர், துக்கம் உடையவர், குறைவான ஆயுள் கொண்டவர், மகிழ்ச்சி இல்லாதவர்.

நான்காம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்
:
நிலம், வாகனம், தாய், மகிழ்ச்சி எல்லாம் பாதிப்படையும். தன்னிடம் விட்டு நீங்கி, வெளி இடத்தில் பிறர் தயவில் வாழ்பவர்.

Related Posts

உட்ச, மூலத்திரிகோண, ஆட்சி நீட்ச பாகைகள்

Parasari Dr. B. Ayyappa Sharma
ஜ்யதுர்காவினை வணங்கி, கிரஹங்களின் பலத்தினை பொறுத்து அதன் நன்மை/ தீமையின் நாம் அறிந்துகொள்கிறோம். பராசர மகரிஷி ஒரு பாடலில் பின் வருமாறு கூறுகிறார். இதன் பொருள். உட்ச...
Read More

இரண்டாம் பாவத்தில் கிரகங்கள் இருந்தால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
இரண்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: மிகுதியான ஆட்கள், கால் நடைகள் உண்டு, முகத்தில் நோய், திருப்தியற்ற நிலமை, அரசர் மற்றும் தீயவர்களால் தொல்லையும் பொருள்...
Read More

உத்ரகாலாமிருதம் எனும் ஜோதிஷ நூல் கூறும் கிரஹ காரகங்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
சூரியன் : ஆத்மா, பலம், கண்டிப்பு. கோட்டை, நல்ல சக்தி, சூடு, ஒளி, தீ, சிவ வழிபாடு, தைரியம், முட்செடி, மரம். ஆரசாங்க ஆதரவு மற்றும் வெறுப்பு,...
Read More