ஒன்பதாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வம், மக்கட்பேறு, உறவினர் ஏற்படும் இறைபற்று மற்றும் பெரியோர்களை வணங்குதல், பெண்களை தூற்றுபவர், மிகுதியான தாகம் (நீர்வேட்கை) உள்ளவர்.

ஒன்பதாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இறைசெயல் மற்றம் பக்தியுடையவர், செல்வம், மக்கட்பேறு, அனைவரிடம் பணிவுடன் நடத்தல், எல்லோருக்கும் விருப்பமானவராக இருத்தல்.

ஒன்பதாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தீய செயல்களை செய்தல், எவருக்கும் விருப்பமில்லாதவர், உயிர்கொலையில் நாட்டமுள்ளவர், தர்மமின்மை, கூடுதல் பாவர், அரசால் கிடைக்காத கௌரவம் உடையவர்.

ஒன்பதாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான செல்வமும், கல்வியும், நல் ஒழுக்கமும், திறமையாக பேசுதலும், திறன் படைத்தவரும், தர்மம் அறிந்தவரும் ஆவார். நல்ல பண்பாளராகவும் இருப்பார்.

ஒன்பதாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

இறைசெயல் மற்றம் மூதாதையர்களுக்கு செய்யும் சடங்குகளில் பற்றுள்ளவர், புலவர், பெருஞ்செல்வம் உடையவர், அமைச்சர் அல்லது படைதலைவராவர், மரியாதைக்குரியவர்.

ஒன்பதாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சாமுத்திரிகா லட்சன குணமுள்ள உடலமைப்பு உள்ளவர், வரவு, செலவு, சமமாக பேணுபவர், பெண்களிடம் இன்பம், உறவினர் உள்ளவர், இறைவன், குரு, விருந்தாளிகளை வணங்குபவர், பெருந்தன்மை உடையவர்.

ஒன்பதாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தனது தர்மம், பொது தர்மம் இவை இரண்டையும் செய்யாமை, குறைந்த செல்வம் உடையவர், மக்கட்பேறும், உடன்பிறப்பும் இல்லாதவர், இன்பம் இல்லாதவர், பிறர் மனிதர்களை துன்பபடுத்தி சுகம் அனுபவிப்பவர்.

ஒன்பதாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

சாதகமாகவும், இனிமையாகவும் பேசமாட்டார். தனது இனம் அல்லது ஊருக்கு தலைமை ஏற்பார். பெயர், புகழ் அடைவார்கள். தவறான செயல்கள் புரிவார்.

ஒன்பதாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

பாவ வழியில் செல்பவர், தீய செயல் புரிபவர். தந்தை அற்றவர். அதிர்ஷ்டம் இல்லாதவர். கோபமும், வெறுப்பும் உடையவர் நல்லவர்களை அவதூறாகப் பேசுபவர்.

Related Posts

நான்காமாதிபன் தசை

Parasari Dr. B. Ayyappa Sharma
நான்காமாதிபன் லக்கினத்தில் தசை நடத்தினால் உயர்ந்த கல்வியை அடைவதும் தாயால் சுகமும் எப்பொழுதும் சொந்த வீடு வாகனம் முதலான வசதிகள் உடைய வாழ்க்கை உண்டாவது, தன்னுடைய கல்வி...
Read More

பத்தாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பாதால் ஏற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
பத்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: மிகுதியான திறமை, வீரம், செல்வம், வாகனம், உறவினர், மக்கட்பேறு உள்ளவர், தொடங்குகின்ற தொழில்களில் வல்லமையும், புகழும் பெயரும் உண்டு....
Read More

எட்டாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பதால் எற்படும் பலன்கள்

Parasari Dr. B. Ayyappa Sharma
எட்டாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்: கண்களில் பாதிப்புள்ளவர், மக்கட்பேறு, செல்வமும் இழத்தல், குறைந்த ஆயுள், நண்பர்கள் அல்லது உறவினர்கள் பிரிவு, அடிக்கடி துன்பபடுதல். எட்டாம்...
Read More