இரண்டாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் பண விஷயங்களிலேயே அதிகமான கவனமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் பிறர் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தை விருத்தி செய்து மேலான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பலமான முயற்சிகள் எடுத்துக்கொள்வது. அதனால் நன்மைகளும் உண்டாகும். பிறர் காரியங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதாவது மைனர் சொத்துக்களுக்கு கார்டியன் ஆகுதல் அல்லது மற்றவர்களுடைய பண்ணைகள் எஸ்டேட்டுகள் போன்றவற்றை நிர்வாகம் செய்வது போன்ற பொறுப்புகள் உண்டாகும்...
Read Moreதசா tagged posts
லக்கினாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் உடல் நலமும் பிரகாசமும் மகிழ்ச்சியும் உண்டாகும் மனத்திற்கு உற்காக மளிக்கத்தக்க நன்மைகளும் சுபகாரியங்களும் நடைபெறும், புகழும் பெருமையும் உண்டாகும் நினைத்த காரியங்கள் நன்மை பெறும் லக்கினாதிபனுடைய பலத்திற்குத் தகுந்தபடி செல்வமும், வசதியும் உடைய வாழ்க்கை அமையும்...
Read Moreஜாதக பலன்கள் நடை பெறும் காலங்களை அறிய தசா புக்தி முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு வீட்டின் பலனை, அவ்வீட்டின் அதிபதி. அவ்வீட்டில் நின்ற கிரகங்கள். ஆவ்வீட்டைப் பார்க்கும் கிரகங்கள். அவ்வீட்டு அதிபதியுடன் சேரந்திருக்கும் கிரகங்கள் மற்றும் பார்க்கும் கிரகங்கள் என பல கிரகங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.
அவ்வாறே ஒவ்வொரு கிரகமும் தருகிற பலன் கணிக்கப்பட்டு இறுதியாக அனைத்து கிரகங்களும் அவ்வீட்டிற்குத் தரும் பலன் முடிவு செய்யப்படுகிறது. அதன்படியே அவ்வீட்டின் பலன் நடைபெறும்.
இருந்தாலும் ஒரு வீட்டின் தொடர்பு பெறும் கிரகங்கள் குறிப்பிட்ட காலத்தில் தாம் மட்டுமே வழங்க வேண்டிய சுப அசுப பலன்களை வழங்குகின்றன. அந்த குறிப்பிட்ட காலத்தையே தசை. புத்தி, அந்தரம் என்கிறோம்.
360 பாகைகள் கொண்ட ராசி மணடலம் 120 பாகைகள் கொண்ட 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி மேஷத்திலும், இரண்டாம்பகுதி சிம்மத்திலும், 3ம் பகுதி தனுசிலும் தொடங்கும். ஒவ்வொரு பகுதியில் உள்ள 120 பாகையே 13.20 பாகை கொண்ட 9 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. எனவே 3 பகுதிகளிலும் 27 பிரிவுகள் இருக்கும். இவையே நக்ஷத்திரங்கள் எனப்படும். ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் குறிப்பிட்ட கிரகமே அதிபதியாக வரும். உதாரணமாக அஸ்வினிக்கு கேது, பரனிக்கு சுக்கிரன் என வரிசைகிரமமாக அதிபதிகள் அமைவர். இந்த அதிபதிகளையே தசைநாதன் என்று கூறுகிறோம்.
விம்சோத்தரி தசை- வானியல் விளக்கம்
தசைகளிலே விம்சோத்தரி தசை முறை மட்டுமே மிகுந்த பலன் அளிக்ககூடியது என பராசரரிஷி கூறுகிறார். இத்தசைக்கான வரிசைகிரமம் பல்வேறு கருத்துகளால் பலவாறாக கூறப்படுகிறது. எனினும் இத்த்சைக்கான வரிசைகிரமத்தினை வானியலோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம் சூரியக்குடும்பத்தில் சூரியனை மையமாகக் கொண்டு புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், குரு, சனி முதலிய கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியின் துணைக்கோள் சந்திரன் ஆகும். எனவே கிரக அமைப்பு கீழ்க்கண்டவாறு அமையும்.
சூரியன், புதன், சுக்கிரன், பூமி, சந்திரன், செவ்வாய், குரு, சனி
பராசரி நிபந்தனை தசைகள்
சில தசைகள் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என பராசர ரிஷி வலியுறுத்துகிறார். இவைகளை நிபந்தனைகள் தசை என கூறலாம். அதற்கான நிபந்தனைகளை காணலாம்.
1. அஷ்டோத்தரி தசை
நிபந்தனை:
ராகு லக்ன கேந்திரத்தில் இல்லாமல் இருப்பது அல்லது லக்னாதிபதிக்கு திரிகோணத்தில் ராகு இல்லாமல் இருப்பது
2. ஷோடஷோத்தரி தசை
நிபந்தனை:
கிருஷ்ண பட்சம பகலில் பிறக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சம இரலில் பிறக்க வேண்டும்.
இதனையும் நிபந்தனையாக எடுத்துகொள்ளலாம்
கிருஷ்ண பட்சத்தில் பிறந்து இலக்கிணம் சந்திர ஹோரையில் இருக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சத்தில் பிறந்து இலக்கிணம சூரிய ஹோரையில் இருக்க வேண்டும்.
தசா முறை அறிமுகம்.
ஜோதிடக்கலை உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாய் அந்த நாட்டின் கலாச்சார வளர்ச்சிக்குத் தகுந்தவாறு வளர்ச்சி கொண்டுள்ளது. ஜோதிடத்தில் ஜாதக பலன் காண்பது என்பது ஓர் சிறந்த கலை. ஜாதக பலன் காண பல நாட்டில் பல்வேறு முறையைக் கண்டறிந்து பலன் காணுகின்றனர். நமது இந்தியத் திருநாட்டில் மற்ற நாடுகளைக் காட்டிலும் ஜோதிடம் பல மடங்கு உயர்ந்து சிறந்து விளங்குகிறது. அதற்குச் சிறந்த உதாரணமாக நமது நாட்டில் காணப்படும் பராசரா முறை போன்றவை விளங்குகின்றன. எந்த நாட்டிலும் இல்லாத, எந்த ஜோதிடத்திலும் இல்லாத ஓர் சிறப்பு அம்சம் நமது ஜோதிடத்தில் காணப்படுகிறது என்றால், அது தசா புக்தி பலன் அறியும் முறை என்று கருதலாம்...
Read More