Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
ஜோதிஷம் | - Part 8

Category ஜோதிஷம்

பராசரி நிபந்தனை தசைகள்

பராசரி நிபந்தனை தசைகள்
சில தசைகள் குறிப்பிட்ட ஜாதக அமைப்பு இருந்தால் மட்டுமே பயன்படுத்தவேண்டும் என பராசர ரிஷி வலியுறுத்துகிறார். இவைகளை நிபந்தனைகள் தசை என கூறலாம். அதற்கான நிபந்தனைகளை காணலாம்.
1. அஷ்டோத்தரி தசை
நிபந்தனை:
ராகு லக்ன கேந்திரத்தில் இல்லாமல் இருப்பது அல்லது லக்னாதிபதிக்கு திரிகோணத்தில் ராகு இல்லாமல் இருப்பது
2. ஷோடஷோத்தரி தசை
நிபந்தனை:
கிருஷ்ண பட்சம பகலில் பிறக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சம இரலில் பிறக்க வேண்டும்.
இதனையும் நிபந்தனையாக எடுத்துகொள்ளலாம்
கிருஷ்ண பட்சத்தில் பிறந்து இலக்கிணம் சந்திர ஹோரையில் இருக்க வேண்டும் அல்லது சுக்கில பட்சத்தில் பிறந்து இலக்கிணம சூரிய ஹோரையில் இருக்க வேண்டும்.

Read More

வானசாஸ்திரத்தில் நவகிரஹம்

வானசாஸ்திரத்தில் நவகிரஹம்

வானசாஸ்திரம் என்பது சூரியன், சந்திரன், கோள்கள், ராகு, கேது, விண்மீன்கள், எரிநக்ஷத்திரங்கள் போன்றவற்றின் நிலை மற்றும் சுழற்சியை  அடிப்படையாக வைத்துக் கொண்டு புயல்,கடல் சீற்றம், தட்பவெட்பநிலை, காற்றழுத்தம்,மழை,மேகம் மூட்டம் கண்டறிதல், அடைமழை ஆகிய வெறும் இயற்கை நிகழ்ச்சியை மட்டும்  கண்டறிவதாகும்.  ஜோதிஷம் என்பது மனித வாழ்வில் ஏற்படக்கூடிய இன்பம், துன்பம், செல்வச்செழிப்பு, வறுமை மற்றும் ஆயுள் ஆகிய நிகழ்வுகளை கோள்கனின் சஞ்சாரத்தை வைத்து கூறப்படுகின்றன.வானசாஸ்திரத்திற்கும் ஜோதிஷத்திற்கும் முழுவதுமாக தொடர்பு இல்லையென்றலும் சில தொடர்புகள் உள்ளன. உதாரணமாக அமாவாசை, பௌர்ணமியின் போது கடல் சீற்றம் அதிகரிப்பதை பார்க்கலாம். அது போன்று நோயாளிகளுக்கும் அந்நேரத்தில் நோயின் தன்மை அதிகரிக்கும். இதனைத்தான் முன்னோர்கள் வழக்கத்தில் “அமாவாசை கழிந்தால் உயிருக்கு வந்த கண்டம் கழிந்ததென்று” சொல்வார்கள். மேலும் மனநோயாளியானவர்களுக்கு அதன் தாக்கம் அதிகரிக்கும். இதனை அனுபவத்தில் உணர்கின்றோம்.

சூரியன்...

Read More

கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள்

கிரஹங்கள் குறிப்பிடும் நோய்கள்
அண்டத்தில் உள்ளதே பிண்டம்
பிண்டத்தில் உள்ளதே அண்டம்
அண்டமும் பிண்டமும் ஒன்றே
அறிந்துதான் பார்க்கும் போதே- என்ற சட்டமுனியின் வாக்கின்படி உடலுக்கும் உலகத்திற்கும் தொடர்புடையது. அதாவது பஞ்சபூத தத்துவத்தால் ஆனதுதான் உடல். பஞ்சபூதம் என்பது நீர், நெருப்பு, ஆகாயம், மண், காற்று என்பவைதான் அவை. இதில் ஒவ்வொரு கோள்களுக்கும் இப்பஞ்ச பூத தத்துவம் நிறைந்துள்ளது. அவ்வாறே உடலுக்கும் கோள்களுக்கும் தொடர்புள்ளதை கீழ் காண்பவை மூலம் அறியலாம்.

Read More

பாவங்கள் குறிப்பிடும் நோய்

பாவங்கள் குறிப்பிடும் உடற்பாகங்கள் மற்றும் நோய்
லக்ன பாவம்:
ஒருவரது உயரம், தோற்றம், பருமன் இவற்றைக் குறிப்பதாகும். சிறப்பாக, தலை, மூளை, ரோமம், தோலைக்குறிக்கும். நிறத்தின் தன்யைக் குறிக்கும். லக்னத்தில் இருக்கும் கிரகம், பார்க்கும் கிரகத்திற்கேற்ப அவரது நிறம் அமையும்.
ஆயுள் – நோய் எதிர்ப்புச் சக்தி – அல்லது இறுதி வரை ஏதாவது ஒரு வியாதியால் துன்பப்படும் நிலை சக்தி – நோய் தாங்கும் சக்தி உடல் உறுதி வியாதியிலிருந்து விடுபடும் நிலை – நோய் குணமாகும் நிலை.

2ம் பாவம்:...

Read More

தசா முறை அறிமுகம்.

தசா முறை அறிமுகம்.

ஜோதிடக்கலை உலகெங்கும் பரவிக் கிடக்கிறது. ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமாய் அந்த நாட்டின் கலாச்சார வளர்ச்சிக்குத் தகுந்தவாறு வளர்ச்சி கொண்டுள்ளது. ஜோதிடத்தில் ஜாதக பலன் காண்பது என்பது ஓர் சிறந்த கலை. ஜாதக பலன் காண பல நாட்டில் பல்வேறு முறையைக் கண்டறிந்து பலன் காணுகின்றனர். நமது இந்தியத் திருநாட்டில் மற்ற நாடுகளைக் காட்டிலும் ஜோதிடம் பல மடங்கு உயர்ந்து சிறந்து விளங்குகிறது. அதற்குச் சிறந்த உதாரணமாக நமது நாட்டில் காணப்படும் பராசரா முறை போன்றவை விளங்குகின்றன. எந்த நாட்டிலும் இல்லாத, எந்த ஜோதிடத்திலும் இல்லாத ஓர் சிறப்பு அம்சம் நமது ஜோதிடத்தில் காணப்படுகிறது என்றால், அது தசா புக்தி பலன் அறியும் முறை என்று கருதலாம்...

Read More

ஜோதிஷம் ஓர் அறிமுகம்:

ஜோதிஷம் ஓர் அறிமுகம்:

ஜோதிஷம் என்பது வேதத்தின் ஒரு பகுதியாகும். நாம் முற்பிறவியில் செய்த வினைகளுக்கேற்ப இப்பிறவியில் நமக்கு ஈற்படும் ஜனன சுகதுக்கத்தை அறிய ஒரு ஜாதகம் எழுத ஆரம்பிக்கும் போது

ஜெனனி ஜென்ம சௌக்கியானாம்
வர்ததினி குல ஸம்பதாம்
பதவி பூர்வ புண்ணியானாம்
லிக்கியதே ஜன்ம பத்திரிகா.

முன் வினைப் பயனில்...

Read More

ராசிகள் குறிக்கும் இருப்பிடம்

ராசிகள் குறிக்கும் இருப்பிடம்

மேஷம் : விலை மதிப்புள்ள கற்கள் இருக்கும் பகுதி,  பாழ்நிலம், புல்தரை,  செம்மணற்பகுதி, மேய்ச்ச்ல் தரை, குன்றுகள், மாட்டு தொழுவம், உழுத நிலம், குடிசைகள், திருடர்கள் மறையும் பகுதி, ஆட்கள் இல்லாத பகுதி, இராணுவ பகுதி, மருத்துவமணை, கசாப்பு கடை, போலிஸ் ஸ்டேசன், இராசயனக்கூடம், முடிவெட்டும் இடம், ரயில்வே இண்ஜின் பலுதுபார்கும் இடம், மெக்கானிக் ஷாப், கொல்லுபட்டறை, பேக்கரி அறை, இரும்பு அடிக்கும் இடம், விளையாட்டு கூடம், சமையல் அறை, கடிகார ரிப்பேர் ஸ்டோர், தொழிற்சாலை, துணி வெளுக்கும் இடம், மரம் அறுக்கும் மில்,  மூங்கில் நிறைந்த இடம், பட்டாசு மற்றும் தீப்பெட்டி தொழிற்சாலை, வாகனங்கள் ரிப்பேர் செய்யும் இடம்,...

Read More

லக்ன கணிதம் மற்றும் பிறந்த நக்ஷத்திரம்

லக்ன கணிதம்   மற்றும்   பிறந்த நக்ஷத்திரம் 

 லக்னம் என்பது குழந்தைப் பிறக்கும் நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியாகும். ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 12 லக்கினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உதயமாகின்றன. சுமாராக ஒரு லக்னம் 2 மணி நேர கால அளவு கொண்டதாகும்.  ஒரு நாளில் குழந்தை எந்த நேரத்தில் பிறக்கின்றதோ அந்த நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியே குழந்தையின் ஜென்ம லக்னமாகும்.  லக்னம் கணிக்க குழந்தை பிறந்த நாளில் உள்ள ராசி இருப்பைக் காண வேண்டும். உதயாதி ஜனன நாழிகையிலிருந்து அந்த ராசி இருப்பைக் கழிக்க வேண்டும்.  பின் அடுத்தடுத்த இராசி மானங்களைக் கழிக்க முடியாத இராசி அளவு வரும் பொழுது அந்த ராசியே குழந்தையின் பிறந்த லக்னமாகக் கொள்ள வேண்டும்...

Read More

வீடுகளின் வகைகள்

வீடுகளின் வகைகள்

ஜாதகத்தில் உள்ள 12 வீடுகளும் வாழ்வின் பல்வேறு கூறுகளை விவரிக்கின்றன. இவற்றுள் முக்கிய வீடு முதல் வீடு எனும் லக்னம் ஆகும். மற்ற 11 வீடுகளும் லக்கினத்தைப் பொருத்தே அமையும். ஜாதகத்தில் உள்ள கிரகங்கள் லகனத்திற்கு கீழ் படிபவை.

கேந்திரம்;:

1, 4, 7, 10-ம் வீடுகள் கேந்திர வீடுகள் ஆகும். இவை விஷ்ணு கேந்திரம் எனப்படும்...

Read More

பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள்

பராசரர் கூறும் பாவம் தொடர்பான விஷயங்கள்

1. தனு பாவம்:

உடல் வாகு, தோற்றம், மதிநுட்பம், மூளை, உடல் நிறம், பலம், பலவீனம், மகிழ்ச்சி, துக்கம், குணம் ஆகியன.

2. தன பாவம்:

செல்வம், தானியங்கள், உணவு, குடும்பம், இறப்பு, எதிரிகள், உலோகங்கள், ரத்தினங்கள், ஆகியன.

3. சகஜ பாவம்:

வலிமை, வேலையாட்கள், சகோதர சகோதரிகள், பயணங்கள், உபதேசம், பெற்றோரின் மரணம், முதலியன...

Read More