Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
ஜோதிஷம் | - Part 7

Category ஜோதிஷம்

மூன்றாமாதிபன் தசை

மூன்றாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் ஆரம்பகாலத்தில் மற்றவர்களை அண்டி தொழில் செய்து அல்லது மற்றவர்களிடம் உத்தியோகம் பார்த்து ஜீவனம் செய்து பிறகு தன் சொந்த முயற்சியாலும் மனோதைரியத்தாலும் படிப்படியாக உயர்ந்து மேல் நிலைக்கு வரமுடியும் தனக்கு எப்பொழுதும் யாராவது சகாயம் செய்ய முன் வருவார்கள் மூர்க்கத்தனமான காரியங்களில் பிரவேசமும், அதனால் கஷ்டங்களும் உண்டாகும்...

Read More

இரண்டாமாதிபன் தசை

இரண்டாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் பண விஷயங்களிலேயே அதிகமான கவனமாக இருக்கவேண்டும் இல்லையென்றால் பிறர் கண்டனங்களுக்கு ஆளாக நேரிடும். குடும்பத்தை விருத்தி செய்து மேலான நிலைமைக்கு கொண்டு வருவதற்காக பலமான முயற்சிகள் எடுத்துக்கொள்வது. அதனால் நன்மைகளும் உண்டாகும். பிறர் காரியங்களை நிர்வாகம் செய்யும் பொறுப்பு அதாவது மைனர் சொத்துக்களுக்கு கார்டியன் ஆகுதல் அல்லது மற்றவர்களுடைய பண்ணைகள் எஸ்டேட்டுகள் போன்றவற்றை நிர்வாகம் செய்வது போன்ற பொறுப்புகள் உண்டாகும்...

Read More

லக்கினாதிபன் தசை

லக்கினாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் உடல் நலமும் பிரகாசமும் மகிழ்ச்சியும் உண்டாகும் மனத்திற்கு உற்காக மளிக்கத்தக்க நன்மைகளும் சுபகாரியங்களும் நடைபெறும், புகழும் பெருமையும் உண்டாகும் நினைத்த காரியங்கள் நன்மை பெறும் லக்கினாதிபனுடைய பலத்திற்குத் தகுந்தபடி செல்வமும், வசதியும் உடைய வாழ்க்கை அமையும்...

Read More

குருபெயர்ச்சி ராசி பலன்கள்-துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் மே 2013

மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள்

துலா ராசி

*தொழில்/வேலையில் இருந்த சிரமங்கள் மறையும்

*சொத்து யோகம் கைகூடும்

*உடல் நிலையில் கவனம் தேவை

*திருமணம் மற்றும் காதல் வாழ்க்கையில் விரிசல் தோன்றி மறையும்

*சுபசெலவுகள் ஏற்படும். பொருளாதார தட்டுப்பாடு குறையும்

*எதிரிகள் அதிகரிப்பர், அவமானம் ஏற்படும் கவனம் தேவை...

Read More

குருபெயர்ச்சி ராசி பலன்கள்-மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி மே 2013

மே 2013 குருபெயர்ச்சி ராசி பலன்கள்

மேஷ ராசி

*மனகுழப்பம் அதிகமாகும்

*திருமண மற்றும் காதல் வாழ்க்கையில் கசப்பான சம்பவங்கள் நடைபெறும்.

*புதிய முயற்ச்சிகள் வேண்டாம்

*தொழில்/வேலையில் மாற்றம் ஏற்படும்

*வெளிநாடு செல்ல வாய்ப்புண்டு

*உடல் நிலையில் குறிப்பாக வயிற்று கீழ் பகுதியில் மருத்துவ செலவினங்கள் ஏற்படும்...

Read More

ராசிகளின் தன்மைகள்

ராசிகளின் தன்மைகள்

ராசிகளின் தன்மைகள்

Read More

சூரியன் 4 முதல் 6 பாவம் வரை உள்ளபலன்

சூரியன் 4 முதல் 6 பாவம் வரை உள்ளபலன்
4
ஹீநாங்க:-அஹங்காரி- ஜனவிரோதி உஷ்னதேஹி- மந: பீடவான்- துவாம்த்ரிசத்வர்சே சர்வகர்மானுகுலவான்-பகுபிரதிஷ்டாஸித்தி: சத்தாபதவிஞானசௌர்யசம்பன்ன:- தனதான்யஹீன: பாவாதிபே பலயுதே- ஸ்வக்ஷேத்ரேத்ரிகோனே கேந்த்ரே லக்ஷனாபேக்ஷயா ஆந்தோலிகாப்ராப்தி: பாபயுதே பாபவீக்ஷனவசாத் துஷ்டஸ்தாநே தூர்வாஹநஸித்தி: க்ஷேத்ரஹீன: பரக்ருஹ ஏவ வாச:


உடல் உறுப்பு குறைபாடு, செருக்குள்ளவர், பொது மக்களுக்கு எதிரானவர், உஷ்ண தேகம் உடையவர், குழப்பமானவர்.32 வயதில் வெற்றியாளராக, புகழ் உள்ளவராக, கற்றவராக உயர் பதவி அடைந்து, வலிமை, மரியாதை, மதிப்பு பெற்று வாழ்வார். ஆனால் பொருளாதாரம் ஏற்றம் இருக்காது.

Read More

சூரியன் 1 முதல் 3 பாவம் வரை உள்ளபலன்

சூரியன் 1 முதல் 3 பாவம் வரை உள்ளபலன்

1
ஆரோக்யம் பவதி- பித்த பிரக்ருதி-நேத்ரேரோகி-மேதாவி-ஸதாசாரி வா-உஷ்னோதரவான் மூர்க: – புத்ரஹீன: -தீஷ்னபுத்தி:-அல்பபாஷி பிரவாஸசீல:-சுகி- ஸ்வச்சே கீர்த்திமான்- பலிநிரிக்ஷிதே வித்வான்- நீசே பிரதாபவான்-ஞானத்வேஷி- தரித்ர: அந்தக:-சுபத்ருஷ்டே ந தோஷ: -சிம்கி ஸ்வாம்ஸோ நாத:-குலிரே ஞானவான் ரோகி புதபுதாக்ஷ-மகரே ஹ்ருத்ரோகி- மீனே ஸ்திரிஜன ஸேவி-கண்யாயாம் ரவோ கண்யாப்ரஜ:- தாரஹீன: க்ருதக்ன: க்ஷேத்ரி-சுபயுக்தக: ஆரோக்யவான் பாபயுதே சத்ரு நீச க்ஷேத்ரே த்ருதீய வருஷே ஜ்வரபீட:-சுப த்ருஷ்டே ந தோஷ:                                                                                                                                                                                                                                                                                                                         

ஆரோக்கியம் உண்டு, பித்த தேகம், கண் நோய் பாதிப்பு, விவேகம், அனுபவ அறிவு உள்ளவர், நன்னடத்தை, உஷ்ண தேகி, யோசிக்காமல் செயல்படுபவர், குழந்தை பெறுவதில் தடை, புத்திசாலி, குறைவாக பேசுபவர், தன் இடத்தை விட்ட நீங்கி வெளியிடத்தில் அலையும் தனமையுள்ளவர், மகிழ்ச்சியானவர்.


மேஷரா...

Read More

விம்சோத்தரி தசா கணிதம்

ஜாதக பலன்கள் நடை பெறும் காலங்களை அறிய தசா புக்தி முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு வீட்டின் பலனை, அவ்வீட்டின் அதிபதி. அவ்வீட்டில் நின்ற கிரகங்கள். ஆவ்வீட்டைப் பார்க்கும் கிரகங்கள். அவ்வீட்டு அதிபதியுடன் சேரந்திருக்கும் கிரகங்கள் மற்றும் பார்க்கும் கிரகங்கள் என பல கிரகங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.
அவ்வாறே ஒவ்வொரு கிரகமும் தருகிற பலன் கணிக்கப்பட்டு இறுதியாக அனைத்து கிரகங்களும் அவ்வீட்டிற்குத் தரும் பலன் முடிவு செய்யப்படுகிறது. அதன்படியே அவ்வீட்டின் பலன் நடைபெறும்.
இருந்தாலும் ஒரு வீட்டின் தொடர்பு பெறும் கிரகங்கள் குறிப்பிட்ட காலத்தில் தாம் மட்டுமே வழங்க வேண்டிய சுப அசுப பலன்களை வழங்குகின்றன. அந்த குறிப்பிட்ட காலத்தையே தசை. புத்தி, அந்தரம் என்கிறோம்.
360 பாகைகள் கொண்ட ராசி மணடலம் 120 பாகைகள் கொண்ட 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி மேஷத்திலும், இரண்டாம்பகுதி சிம்மத்திலும், 3ம் பகுதி தனுசிலும் தொடங்கும். ஒவ்வொரு பகுதியில் உள்ள 120 பாகையே 13.20 பாகை கொண்ட 9 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. எனவே 3 பகுதிகளிலும் 27 பிரிவுகள் இருக்கும். இவையே நக்ஷத்திரங்கள் எனப்படும். ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் குறிப்பிட்ட கிரகமே அதிபதியாக வரும். உதாரணமாக அஸ்வினிக்கு கேது, பரனிக்கு சுக்கிரன் என வரிசைகிரமமாக அதிபதிகள் அமைவர். இந்த அதிபதிகளையே தசைநாதன் என்று கூறுகிறோம்.

Read More

விம்சோத்தரி தசை- வானியல் விளக்கம்

விம்சோத்தரி தசை- வானியல் விளக்கம்
தசைகளிலே விம்சோத்தரி தசை முறை மட்டுமே மிகுந்த பலன் அளிக்ககூடியது என பராசரரிஷி கூறுகிறார். இத்தசைக்கான வரிசைகிரமம் பல்வேறு கருத்துகளால் பலவாறாக கூறப்படுகிறது. எனினும் இத்த்சைக்கான வரிசைகிரமத்தினை வானியலோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம் சூரியக்குடும்பத்தில் சூரியனை மையமாகக் கொண்டு புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், குரு, சனி முதலிய கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியின் துணைக்கோள் சந்திரன் ஆகும். எனவே கிரக அமைப்பு கீழ்க்கண்டவாறு அமையும்.
சூரியன், புதன், சுக்கிரன், பூமி, சந்திரன், செவ்வாய், குரு, சனி

Read More