பன்னிரண்டாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் உடல் நலக்குறைவும் கபம் சம்பந்தமான ரோகங்களும் கல்வியும் செல்வமும் இல்லாத தரித்திர வாழ்க்கையும் உண்டாகும் ஆண்மைக்குறைவு, தாம்பத்திய சுகம் இலலாமையும் உண்டாகும் தன்னம்பிக்கை இன்மையும், சுயமுயற்சி இன்மையும் வாழ்க்கையில் விரக்தியும் உண்டாகும். பன்னிரெண்டாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தரித்திர வாழ்க்கையும், தன்னுடைய வீடு மனைவி எல்லாவற்றையும் பிரிந்து சுற்றி அலையும் வாழ்க்கையும் விஷ்ணு […]
பதினொன்றாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் தன் பெயர் புகழ் முதலானவற்றைக் கொண்டே சம்பாத்தியங்கள் உண்டாவதும் மிகவும் உயர்ந்த உன்னதமான வாழ்க்கையும் நல்ல குணமும் எல்லோரையும் சமமாக பாவிக்கும் பரந்த நோக்கமும் நாவன்மையும் எழுத்து பேச்சுத் திறமைகளால் பொருள் லாபங்களும் உண்டாகும். பதினொன்றாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பந்தயசூதாட்ட வியாபாரங்களில் லாபங்களும் புதையல் கிடைத்தது போல் சொத்துக்கள் வந்து சேர்வதும் […]
பத்தாமதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் கவித்துவ சக்தியும் தான் இருந்த இடத்திலிருந்தே தொழிலும் புகழும் அடையும் படியான யோகமும் மேலும் மேலும் செல்வமும் புகழும் விருத்தியாவதும் உண்டாகும். பத்தாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் எழுத்தாளர் அல்லது பிரசங்கியாக புகழும் பொருளும் அடைதலும் தொழில் விருத்தியும் குடும்ப சுகங்களும் உண்டாகும். பத்தாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தொழில் விருத்திக் குறைவும் […]
ஒன்பதாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் தன் முயற்சியின்றியே பாக்கியங்கள் உண்டாதலும் பொருள் லாபங்கள் சொத்துக்கள் விருத்தி குடும்பசுகம் அதிகரிப்பதும், எண்ணிய காரியங்களில் விருப்பமும் தர்ம சிந்தை மேலான எண்ணங்கள் புகழ் முதலியன விருத்தியாவதும் ஆக மிகவும் மேன்மையான பலன்கள் நடைபெறும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். ஆலயம் கட்டுதல், குளம் வெட்டுதல் போன்ற அறப்பணிகளில் ஈடுபாடு உண்டாகும். ஒன்பதாமாதிபன் […]
அஷ்டமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் மனைவி உயிருடன் இருக்கும் காலத்திலேயோ அல்லது அவளுக்கு மரணம் எற்படுவதாலோ இரண்டாவது விவாகம் ஒன்று நடைபெறலாம். அந்நியரால் பொருள் நஷ்டங்கள் உண்டாகும். எப்பொழுதும் பொருட் செலவுகளும் தனவிரயங்களும் ஏற்படும். தரித்திர வாழ்க்கையும் அற்ப ஜீவனமும் உண்டாகும். அஷ்டமாதிபன் இரண்டாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் பொருள் நஷ்டங்களும் அந்நியரை நம்பிப் பிழைக்கும் படியான நிலைமையும் […]
ஏழாமாதிபன் லக்கினத்திலிருந்து தசை நடத்தினால் இளமையில் பெண்களை சுற்றி அலையும் நடத்தையும் எப்பொழுது காமசிந்தனையாய் இருக்கும். மனைவிக்கு அடங்கிய கணவனாக இருப்பதும் அந்நிய பெண்களின் மேல் நாட்டமும் வெளியூர் சஞ்சாரமும் கூட்டு வியாபாரங்களில் இலாபங்களும் உண்டாகும். ஏழாமாதிபன் இரண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பெண்களால் சம்பாத்தியமும் அவர்களாலேயே செலவுகளும் வழக்குகளால் பொருள் நஷ்டமும் அவமானங்கள் அபாயங்களும் உண்டாகும். ஏழாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து […]
ஆறாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் எப்பொழுதும் நோயளியாக அல்லது கடனாளியாக இருப்பதும் விபத்துக்குள்ளாக நேர்தலும் வழக்கு வியாஜ்ஜியங்களில் மனோ துக்கம் அடைதலும் மரணத்திற்குச் சமமானகண்டங்களும் ஏற்படும். ஆறாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் நிலையான தனமில்லாது அவதிபடுதல் தன் சொத்துக்கள் அன்னியரால் கவரப்படல் வாக்கினால் விரோதங்கள் ஏற்படுதல் குடும்ப சுகமின்மை முதலான தீயபலன்கள் நடைபெறும் பகைவர் […]
ஐந்தாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் தன் சொந்த முயற்சியாலும் தாயாதிகள் ஆதரவாலும் முன்னுக்கு வருவான் இரகசியங்களை அறியக்கூடிய சாமர்த்தியமும் திறமையும் உண்டாவதால் சோதிடம் மாந்திரீகம் போன்றவற்றில் திறமையும் புகழும் ஏற்படும். சூரியன் அல்லது புதனாக இருந்தால் துப்பறியும் வேலை பூமிக்கு அடியில் புதைந்துள்ள பொருள்களை கண்டு பிடித்தல் போன்ற திறமைகளும் உண்டாகும். செல்வமும் புகழும் ஏற்பட்டு மேலான […]
நான்காமாதிபன் லக்கினத்தில் தசை நடத்தினால் உயர்ந்த கல்வியை அடைவதும் தாயால் சுகமும் எப்பொழுதும் சொந்த வீடு வாகனம் முதலான வசதிகள் உடைய வாழ்க்கை உண்டாவது, தன்னுடைய கல்வி செல்வம் முதலானவற்றை விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அடக்கமாகப் போகும் சுபாவமும் உண்டாகும். நான்காமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் நிலம் வீடு வாகனங்கள் முதலானவற்றிலிருந்து வருமானங்களும் தான் கற்ற வித்தையால் […]
மூன்றாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் ஆரம்பகாலத்தில் மற்றவர்களை அண்டி தொழில் செய்து அல்லது மற்றவர்களிடம் உத்தியோகம் பார்த்து ஜீவனம் செய்து பிறகு தன் சொந்த முயற்சியாலும் மனோதைரியத்தாலும் படிப்படியாக உயர்ந்து மேல் நிலைக்கு வரமுடியும் தனக்கு எப்பொழுதும் யாராவது சகாயம் செய்ய முன் வருவார்கள் மூர்க்கத்தனமான காரியங்களில் பிரவேசமும், அதனால் கஷ்டங்களும் உண்டாகும். மூன்றாமாதிபன் இரண்டாம் இடத்தில் […]