ஜ்யதுர்கா வந்தனம்..
அடியேன் பெரிதும் மதிக்கும் ஒரு பிரபல ஜோதிஷர் ஒரு கேள்வியினை கேட்டு அதற்கான காரணத்தினை வினவினார். அக்கேள்வியானது…
“பிருஹத் ஜாதகத்தில் ஒரு சந்தேகம்
—————————————————–
ஜென்ம லக்கினத்தையோ,ஜென்ம ராசியையோ குரு பார்க்கவில்லைவில்லையெனில் ஜாதகரின் தாய் மாற்றானுக்கு பிள்ளை பெற்றுள்ளாள் என்று பிருகத் ஜாதகம் என்னும் மூல நூல் கூறுகிறது”
இது சரியா? என்பதே அவருடைய கேள்வியாகும்.
அதற்கு அடியேனின் பதிலானது இப்பாடலின் பொருள் தவறாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளதே என்பதாகும்..
பிருஹத் ஜாதகத்தின் அமைந்துள்ள 5வது அத்தியாயத்தில் 6வது பாடலே தாங்கள் கூறுவது..அப்பாடலானது…
पञ्चमोऽध्याय
जन्मविधि
न लग्नम् इन्दुं च गुरुर्निरीक्षते न वा शशाङ्कं रविणा समागतम् ।
स पापकोऽर्केणयुतोऽथ वा शशी परेण जातं प्रवदन्ति निश्चयात् ॥ ६॥
பஞ்சமோஅத்யாய என்கிற 5வது அத்தியாயத்தில்
ஜந்மவிதி என்கிற ஜன்ம லக்ஷன படலத்தில்
ந லக்நம் இந்தும் ச குருர்நிரீக்ஷதே ந வா ஶஶாங்கம் ரவிணா ஸமாகதம்
ஸ பாபகோர்கேணயுதோத வா ஶஶீ பரேண ஜாதம் ப்ரவதந்தி நிஶ்சயாத்
இந்த பாடலின் வரிக்கு வரி மொழிப்பெயர்ப்பானது கீழ்கண்டவாறு அமையும்…
பஞ்சமோऽத்யாய
ஜந்மவிதி
ந- இல்லை
லக்நம்- லக்னம்
இந்தும் – சந்திரன்
ச- மற்றும்
குருர்நிரீக்ஷதே – குரு பார்த்தால்
ந- இல்லை
வா- இருக்கிறதா?
ஶஶாங்கம்- சந்திரன்
ரவிணா- சூரியனுடன்
ஸமாகதம்- இணைந்து
ஸ பாபகோர்கேணயுதோத
(அதாவது)
பாபகோ-அர்கேன- யுதோத
பாபகோ- பாபிகளுடன்
அர்கேன- சூரியனுடன்
யுதோத- இணைந்து
வா- இருக்கிறதா?
ஶஶீ – சந்திரன்
பரேண – பிறகு
ப்ரவதந்தி நிஶ்சயாத் -,வேறு ஒருவருக்கு பிறந்தவராவார்.
இதனை மொழிபெயர்தோமானால்
குருவானது லக்னம் அல்லது சந்திரனை பார்க்காமல் இருந்து அல்லது சந்திரனுடன் இணைந்த சூரியனை (குரு) பார்க்காமல் இருந்து, சூரியன் பாபியுடன் இணைந்து சந்திரனுடன் சம்பந்தப்படுமானால் ஜாதகர் வேறொருவருக்கு பிறந்தவராவார்..
அதாவது வராஹமிஹிரர் கூற வருவது யாதெனில் சூரியன் பாபியுடன் தொடர்புகொண்டு சந்திரனுடன் இணையுமானால் ஜாதகர் வேறொருவருக்கு பிறந்தவர் ஆவார். ஆனால் அவ்வாறு இருக்க கீழ்கண்ட விதியும் அமையவேண்டும்….
1. குருவானது லக்கினம் அல்லது சந்திரனை காணாமல் இருக்க வேண்டும்..
2. குருவானது சூரியனை பார்க்காமல் இருந்து அச்சூரியன் சந்திரனுடன் இணைந்திருக்கவேண்டும்..
சுருக்கமாக கூறவேண்டுமானால் குருவானது லக்கினம், சந்திரன், சூரியன் இவற்றில் ஏதேனும் ஒன்றை பார்க்காமல் இருந்து, சூரியன் ஆனது பாபியுடன் தொடர்புபெற்று சந்திரனுடன் இணையுமானால் ஜாதகர் வேறொருவருக்கு பிறந்து இருக்கலாம்…
இந்த கிரஹங்களின் சேர்க்கையானது சாதாரணமாக ஏற்படக்கூடியது அல்ல… வருடத்திற்கு ஒருமுறை ஏற்படுவதே அரிதாகும்…
மேலும் வராஹ மிஹிரர் ப்ரவதந்தி என்ற வார்த்தையை பயன்படுத்துகிறார். அதனின் அர்த்தம் ஆனது நேரிடையாக வேறொருவருக்கு பிறந்தவர் என்று கூறமுடியாது. வேறொருவருக்கு பிறந்தவர் என்ற பொருளில் சம்ஸ்கிருதத்தில் நிறைய சொற்கள் உள்ளன. உதாரணமாக அந்யஜாத, அபிமுருஷ்டக, விஜன்மன் போன்றவைகள் ஆகும். அவ்வார்த்தைகளை அவர் பயன் படுத்தாமல் இருப்பதையும் நாம் கவணத்தில் கொள்ளவேண்டும்.
Leave a reply