லக்ன கணிதம் மற்றும் பிறந்த நக்ஷத்திரம்
லக்னம் என்பது குழந்தைப் பிறக்கும் நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியாகும். ஒரு நாளில் அதாவது 24 மணி நேரத்தில் 12 லக்கினங்கள் ஒன்றன் பின் ஒன்றாக உதயமாகின்றன. சுமாராக ஒரு லக்னம் 2 மணி நேர கால அளவு கொண்டதாகும். ஒரு நாளில் குழந்தை எந்த நேரத்தில் பிறக்கின்றதோ அந்த நேரத்தில் கிழக்கில் உதயமாகும் ராசியே குழந்தையின் ஜென்ம லக்னமாகும். லக்னம் கணிக்க குழந்தை பிறந்த நாளில் உள்ள ராசி இருப்பைக் காண வேண்டும். உதயாதி ஜனன நாழிகையிலிருந்து அந்த ராசி இருப்பைக் கழிக்க வேண்டும். பின் அடுத்தடுத்த இராசி மானங்களைக் கழிக்க முடியாத இராசி அளவு வரும் பொழுது அந்த ராசியே குழந்தையின் பிறந்த லக்னமாகக் கொள்ள வேண்டும்.
ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் ஆகும். ஒரு குழந்தை பிறக்கும் நாளில் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டிருக்கும் நட்சத்திரம் எதுவோ அதுவே ஜென்ம நட்சத்திரம் ஆகும்.
குழந்தை பிறந்த நேரத்தில் ஜென்ம நக்ஷத்திரம் எப்போது ஆரம்பித்து எப்போது முடிகிறது என்பதைக் காணவேண்டும். நக்ஷத்திரம் ஆரம்பித்து முடியும் காலம் வரையில் உள்ளதை நக்ஷத்திர ஆதியந்தம் என்று சொல்கிறோம். குழந்தை பிறந்த நேரத்தில் நக்ஷத்திரம் எந்த பாதத்தில் அமைகிறது என்று காணவேண்டும். கணக்கிட வசதியாக ஒவ்வொரு நக்ஷத்திரமும் நான்கு பாதங்களாகப் பிரிக்கப்பட்டு ராசி மண்டலத்தில் அமைக்கப் படுகிறது. ஆதனால் எந்தப் பாதத்தில் குழந்தை பிறந்துள்ளது என்பதை அறிய முடியும்.
குழந்தை பிறந்த நேரத்தில் ஜென்ம நக்ஷத்திரம் சென்றது போக மீதி நடப்பிலுள்ள நக்ஷத்திரத்திற்கு தசா புத்திகள் கணிதம் செய்ய வேண்டும். ஒருவரின் ஆரம்ப தசா புத்திகளை கணிதம் செய்ய ஜென்ம நக்ஷத்திரமே ஆதாரம் ஆகும்.
நட்சத்திரங்கள் தசா காலங்கள்
நட்சத்திரங்கள் அதிபதி தசா காலம்
அசுவினி, மகம், மூலம். கேது 7 வருடம்
பரணி, பூரம், பூராடம். சுக்கிரன் 20 வருடம்
கிருத்திகை, உத்திரம், உத்திராடம், சூரியன் 6 வருடம்
ரோகினி, அஸ்தம், திருவோணம், சந்திரன் 10 வருடம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் செவ்வாய் 7 வருடம்
திருவாதிரை, சுவாதி, சதயம், ராகு 18 வருடம்
புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, குரு 16 வருடம்
பூசம், அனுஷம், உத்திரட்டாதி, சனி 19 வருடம்
ஆயில்யம், கேட்டை, ரேவதி புதன் 17 வருடம்
குழந்தை பிறக்கும் பொழுது அவர் ஜென்ம நக்ஷத்திரத்தில் சந்திரன் இன்னும் செல்ல வேண்டியக் காலத்தை கணித்தால் இது நாழிகை, வினாடியில் அமையும். இதனை வினாடிகளாக மாற்றிக் கொள்ளவும். அன்று சந்திரன் சென்றுக் கொண்டிருக்கும் நக்ஷத்திர அதிபதி யார் என்பதையும் அவரின் தசா வருடத்தையும் கணிக்கவும். மேலே வினாடியாக வந்தக் காலத்தை தசா வருடத்தால் பெருக்கி 3600ஆல் வகுக்க வேண்டும்.
வரும் ஈவு ஸ்ரீ திசை வருடம், மீதியை 12ஆல் பெருக்கி 6ஆல் வகுக்க வேணடும். வரும் ஈவு ஸ்ரீ திசையின் மாதம். மீதியை 30ஆல் பெருக்கி 60ஆல் வகுக்க வரும் ஈவு ஸ்ரீ நாட்களாகும்.
ஊதாரணமாக ஜாதகர் பூரம் 3ம் பாதத்தில் பிறந்ததாக கொள்வோம். அதாவது பூர நட்சத்திரத்தில் 36 நாழிகை என்று கொள்வோம். பூரம் ஆதி அந்தம் 60 நாழிகையில் 36 நாழிகை சென்றுள்ளது. மீதி 24 நாழிகை சந்திரன் கடக்க வேண்டிய தூரமாகும். ஜென்ம நட்சத்திரம் பூரம் என்பதால் இதன் அதிபதி சுக்கிரன், இவரின் தசா வருடம் 20 ஆகும். இப்போது தசாபுத்தி காண்போம்.
24 நாழிகையை வினாடியாக மாற்ற 24 * 60 ஸ்ரீ 1440
ஆதனை திசை யருடங்களால் பெருக்க 1440 * 20 = 28800
இதனை 3600 ஆல் வகுக்க 28800 /3600
= 8 வருடம்
ஜாதகரின் தசா இருப்பு சுக்கிரன் திசையில் 8 வருடம் ஆகும்.
Leave a reply