ஜாதகரின் வாழ்க்கையில் நடக்கும் நன்மை தீமை நிகழ்வின் காலத்தினை கோட்சாரம், தசா புத்திகளை கொண்டு அறிதல் எல்லோராலும் பின்பற்றப்படுகிறது. எனினும் பழைய ஜோதிட கிரந்தங்களிலும், சில நாடி நூல்களிலும் ஜாதகரின் வயதினை பொறுத்து கிரஹங்களின் செயல்பாடு இருக்கும் என குறிப்புகள் காணப்படுகிறது. கீழே குறிப்பிட்ட வயதில் கிரஹங்களின் செயல்பாடு அதிகமாக இருக்கும்.
சூரியன்–22 வயது
சந்திரன்–24 வயது
செவ்வாய்–28 வயது
புதன்– 34 வயது
குரு– 16 வயது
சுக்கிரன்–25 வயது
சனி–36 வயது
ராகு– 42 வயது
கேது–48 வயது
இரு கிரங்கள் தொடர்பின் பலனை அறிய இருகிரக வருடத்தை கூட்டி 2 ஆல் வகுக்க கிடைக்கும் வருடத்தில் பலன் நடைபெறும். பலன் நன்மையா, தீமையா என அறிய கிரக பலம் பார்க்கவும்.
குறிப்பிட்ட வயதிலிருந்து எவ்வளவு வருடம் அந்த கிரஹம் செயல்படும் என்பதனை கிரந்தங்களில் சில இடங்களில் கிரங்களுக்கான வருடம் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை இதற்கு எடுத்துக்கொள்ளலாம்
எவ்வளவு வருடம் அந்த கிரஹத்தின் செயல்பாடு இருக்கும் என அறிய அந்த கிரஹத்தின் உட்ச, ஆட்சி, நட்பு, பகை, நீசம் வைத்து தீர்மானிக்க வேண்டும். உட்சம், ஆட்சியாக இருக்கும் போது கீழே கொடுக்கப்பட்ட வருடமும், பகை நீசமாக இருக்கும் போது அதில் பாதிவருடத்தையும் கிரஹங்கள் செயல்படும் காலமாக கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரஹத்திற்கும் எவ்வளவு வருடம் செயல்படும் என்பது ..
சூரியன்–2 வருடம்,
சந்திரன் –1 வருடம்
செவ்வாய்- 6 வருடம்
புதன் –2 வருடம்
குரு –6 வருடம்
சுக்கிரன்–3 வருடம்
சனி –6 வருடம்
ராகு– 6 வருடம்
கேது–3 வருடம் ஆகும்.
இதனை கிரஹங்கள் செயல்படும் வருடமாக எடுத்துக்கொள்ளலாம்
கர்க ஹோரா, பிருகு சூத்திரம், பிருகு நாடி போன்ற பழைய கிரந்தத்தில் இதனை வைத்தே வயதினை குறிப்பிட்டுள்ளனர். மறைந்து போன ஜோதிஷ சூட்சுமத்தில் இதுவும் ஒன்று…..
Leave a reply