ஜயதுர்காவின் கருணையினாலே!!!
கிழக்கத்திய வானத்தில் எது உதயமாகிறதோ அதுவே லக்னம். லக்கினத்திலிருந்து பார்க்கும் போது 4ம் பாவம் வடக்கு திசையில் பாதாளத்திலும், 7ம் பாவம் மேற்கில் சமஅளவிலும், 10ம் பாவம் தெற்கில் உச்சியிலும் அமைவதை காணமுடிகிறது.அதாவது
1ம் பாவம்—கிழக்கு
2ம் பாவம்—தெற்கு
3ம் பாவம்—மேற்கு
4ம் பாவம்—வடக்கு
5ம் பாவம்—கிழக்கு
6ம் பாவம்—தெற்கு
7ம் பாவம்—மேற்கு
8ம் பாவம்—வடக்கு
9ம் பாவம்—கிழக்கு
10ம் பாவம்—தெற்கு
11ம் பாவம்—மேற்கு
12ம் பாவம்—வடக்கு
4ம் பாவம் பாதளமாக இருப்பதால் 2,3ம் பாவங்கள் சமஅளவிலிருந்து பாதாளத்தை நோக்கியும், 5,6ம் பாவங்கள் பாதாளத்திலிருந்து சமஅளவினை நோக்கியும் செல்கிறது.
அதேபோல் 10ம் பாவம் உச்சியாக இருப்பதால் 8,9ம் பாவங்கள் சமஅளவிலிருந்து உச்சியை நோக்கியும், 11,12 ம் பாவங்கள் உச்சியிலிருந்து சமஅளவினை நோக்கியும் செல்கிறது.
(கீழே படம் பார்க்கவும்)
1ம் பாவத்திலிருந்து 6ம் பாவம் வரை பார்வைக்கு புலப்படாமலும், 7ம் பாவம் முதல் 12ம் பாவம் வரை நன்கு தெரியுமாறு உள்ளது.
ஒரு ஜாதகத்தில் சூரியன் முதல் கேது வரையிலான 9 கிரஹங்கள் சமஅளவு, பாதாளம், உச்சி பகுதிகளில் நிற்பதை பொறுத்து பலன் ஏற்படுகிறது. இதனை அறிய
9 கிரஹங்களில் 1 முதல் 6ம் பாவம் வரை எத்தனை கிரஹம் உள்ளது என எண்ண வேண்டும்.
9 கிரஹங்களில் 7 முதல்12ம் பாவம் வரை எத்தனை கிரஹம் உள்ளது என எண்ண வேண்டும்.
இவ்விரண்டில் எதில் அதிக கிரஹம் இருக்கிறதோ அதனை பொறுத்து பலன் அமையும்.
9 கிரஹங்களில் 1 முதல் 6ம் பாவம் வரை அதாவது 1,2,3,4,5,6ம் பாவங்களில் சேர்த்து அதிகமான கிரஹம் இருந்தால் ஜாதகருடைய வாழ்க்கையில் ஜாதகரின் சொந்த கருத்துக்கள், எண்ணங்களே அவருடைய வாழ்க்கையில் பிரதானமாக இருக்கும்.இவரை அகமுக நோக்காளர் என கூறலாம்.
9 கிரஹங்களில் 7 முதல் 12ம் வரை அதாவது 7,8,9,10,11,12ம் பாவங்களில் சேர்த்து அதிகமான கிரஹம் இருந்தால் ஜாதகருடைய வாழ்க்கையில் பிறருடைய கருத்துக்கள், எண்ணங்களே ஜாதகருடைய வாழ்க்கையில் பிரதானமாக இருக்கும். பிற நபர்கள் அவர்களுடைய வாழ்க்கையில் முக்கிய பங்கு வகிப்பர்.இவரை வெளியுலக ஈடுபாட்டாளர் என அழைக்கலாம்.
இருபக்கமும் சமமாக கிரஹம் இருந்தால் பலனும் கலந்தே இருக்கும்.
அதனைப்போலவே
9 கிரஹங்களில் 4 முதல் 9ம் பாவம் வரை எத்தனை கிரஹம் உள்ளது என எண்ண வேண்டும்.
9 கிரஹங்களில் 10 முதல் 3ம் பாவம் வரை எத்தனை கிரஹம் உள்ளது என எண்ண வேண்டும்.
இவ்விரண்டில் எதில் அதிக கிரஹம் இருக்கிறதோ அதனை பொறுத்து பலன் அமையும்.
9 கிரஹங்களில் 10 முதல் 3ம் பாவம் வரை அதாவது 10,11,12,1,2,3 ம் பாவங்களில் சேர்த்து அதிகமான கிரஹம் இருந்தால் ஜாதகரின் வாழ்க்கையில் ஜாதகருடைய முயற்சிகளே பெரிய அளவில் மாற்றம் தரும். நம் விதி நம் கையில் என நம்புபவர்கள் ஆவர்.
9 கிரஹங்களில் 4 முதல் 9ம் பாவம் வரை அதாவது 4,5,6,7,8,9ம் பாவங்களில் சேர்த்து அதிகமான கிரஹம் இருந்தால் ஜாதகரின் வாழ்க்கையில் பிறருடைய செயல்கள், முயற்சிகள் பெரிய அளவில் மாற்றம் தரும். நம் விதி பிறர் கையில் என நம்புபவர்கள் ஆவர்.
இருபக்கமும் சமமாக கிரஹம் இருந்தால் பலனும் கலந்தே இருக்கும்.
1ம் பாவம் தன் தொடர்புடையது
7ம் பாவம் பிறர் தொடர்புடையது
4ம் பாவம் அகம் தொடர்புடையது
10ம் பாவம் புறம் தொடர்புடையது
1,2,3ம் பாவம்— தொடக்கம், தன்னுடைய நிலை
4,5,6ம் பாவம்—வளர்ச்சி, தன்னுடைய வெளிப்பாடு
7,8,9ம் பாவம்—சாதனை, சமுதாய நிலை
10,11,12ம் பாவம்—நிறைவு, சமுதாய வெளிப்பாடு
Leave a reply