ஜயதுர்காவின் கருணையினாலே!!!
சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹத்தில் தான் ஜாதகருக்கு அகம்பாவம், திமிரு, அகந்தை இருக்கும். ஜாதகரை கோபப்படுத்த அந்த பாவ காரஹத்தை தாழ்த்தி பேசினாலோ அல்லது குறை கூறினாலோ போதும் ஜாதகர் உடனடியாக கோபப்படுவார்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனிச்சிறப்பு உண்டு. சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹத்தில் தான் ஜாதகர் தனக்கென ஒரு ஸ்டைலை கடைப்பிடிப்பார்.
சூரியன் இருக்கும் பாவத்தில் தான் ஜாதகர் வாழ்நாள் முழுக்க திருப்தியை தேடி கொண்டிருப்பார். இந்த பாவத்தில் திருப்தி, பூர்த்தி மனப்பான்மை ஜாதகருக்கு கிடைப்பது என்பது எட்டாக்கனியாகும். இருப்பினும் இந்த பாவ காரஹத்தில் உள்ள ஏதேனும் ஒன்றை அடைய குறிக்கோள் வைத்து செயல்படுவார் அல்லது வேறு விதமாக சொல்லவேண்டுமெனில் பொதுவாக ஜாதகருக்கு குறிக்கோள் என்று ஒன்று இருக்குமானால் அது இந்த பாவம் தொடர்பாகதான் இருக்கும்.
நம்பிக்கை என்பது இயல்பானது. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பொருளின் மீது நம்பிக்கை உண்டு. பொதுவாக சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹத்தில் ஜாதகருக்கு இயல்பான நம்பிக்கை இருக்கும். இந்த பாவ காரஹத்தை பற்றி யாராவது உயர்வாக (பொய்யாக) பேசினால் கூட அதனை கேட்டு சீக்கிரமாக ஏமாந்து போவார். தான் நம்பியவற்றை எல்லோரிடத்திலும் வலியுறுத்தி கூறி அதனை பிறரிடத்தில் திணிக்க முயல்வர்.
சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹம் தொடர்பாக ஜாதகருக்கு இயல்பான ஞானம் இருக்கும். உண்மையில் அது அவருக்கே தெரியாமல் வெளிப்படுத்துவார். சுற்றியிருப்பவருக்கு அது ஆச்சரியம் கொடுக்கும்.
சூரியன் எந்த பாவகத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹத்தில் ஜாதகர் மிக்க பெருந்தன்மையுடன் செயல்படுவார். சரியாக கூறவேண்டுமானால் தன்னுடைய நலத்தினை கருதி பொதுநலத்துடன் இருப்பதாக காட்டிக்கொள்வார்.
எல்லோருக்கும் எதையாவது புதுபுதுசாக செய்து எல்லோரையும் அசத்தவேண்டும் என்ற எண்ணம் இருக்கும். சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹத்தில் தான் ஜாதகர் தன்னுடைய அசத்தல் செயல்பாட்டை வெளிப்படுத்த துடிப்பார்.
சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவகம் குறிப்பிடும் உறவுகளின் மீது மரியாதையாக இருப்பார். ஜாதகர் விசுவாசத்துடன் ஒருவர் மீது இருக்கிறார் என்றால் அது சூரியன் இருக்கும் பாவ காரஹம் குறிக்கும் மனிதர்களிடம் மட்டுமே. அவர்களிடமிருந்து கெளரவத்தையும் எதிர்பார்ப்பர்.
சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ காரஹ தொடர்பானவற்றை செயல்படுத்துவதில், நிர்வகிப்பதில், நடைமுறைபடுத்துவதில் ஜாதகருக்கு ஆதரவு உண்டு. அப்படி செய்தால் ஜாதகர் அவற்றில் முதன்மையானவராகவும், தலைவனாகவும் இருப்பார்.
சூரியன் எந்த பாவத்தில் இருக்கிறதோ அந்த பாவ சம்பந்தமான காரஹ விஷயங்களில் ஜாதகர் யாருடைய தலையீடும் இல்லாமல் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் முடிவெடுக்கும் எண்ணம் உடையவர்.
Leave a reply