பிரஸ்னம் என்பது ஒருவா; நம்மிடம் வந்து ஒரு கேள்வி கேட்கும் நேரத்தின் கிரஹநிலைகளை தொடர்புடைய பலவித பிரஸ்ன முறையுடன் தொடர்புபடுத்தி ஆராய்ந்து பலன் கூறுவதாகும்.
பிரஸ்னத்தில் பலவித முறைகள் உண்டு அவை
1 சோழிப் பிரஸ்னம்: சோழிகளை வைத்து பலன் கூறுவது.
2 தாம்பூலப் பிரஸ்னம் வெற்றிலைகளை வைத்து பலன் கூறுவது.
3 நாளிகேரப் பிரஸ்னம் தேங்காயை வைத்து பலன் கூறும் முறை.
4 வர்ஷ பிரஸ்னம் மழை தொடர்பானது
5 கூபப் பிரஸ்னம் கிணறு தோண்டுவது தொடர்பானது.
6 ஸ்வப்னப் பிரஸ்னம் கனவுகள் தொடர்பானது.
7 போஜனப் பிரஸ்னம் உண்ட உணவு பற்றியது
8 யுத்தப் பிரஸ்னம் போரில் வெற்றி தொடர்பானது.
9 சாந்திப் பிரஸ்னம் சமாதனம் தொடர்பானது.
10 நஷ்ட ஜாதகப் பிரஸ்னம் தொலைந்து போன ஜாதகம் அல்லது ஜாதகம் இல்லாதவர்க்கு பலன் பார்க்க தொடர்பானது.
11 நஷ்டப் பிரஸ்னம் தொலைந்து போனவை தொடர்பானது.
12 விவாஹ பிரஸ்னம் திருமனம் தொடர்பானது
13 சந்தானப் பிரஸ்னம் மகப்பேறு தொடர்பானது.
14 யாத்ராப் பிரஸ்னம் பயணங்கள் தொடர்பானது.
15 ரோகப் பிரஸ்னம் நோய்கள் தொடர்பானது.
16 ஆயுள் பிரஸ்னம் ஆயுள் தொடர்பானது.
17 மரணப் பிரஸ்னம் இறப்பு தொடர்பானது.
கேள்வி நேரத்தில் ஜோதிடா;களா சில அடிப்படை விஷயங்களை கவனிக்க வேண்டும். இவைகள் சூட்சுமமான பலனை கேள்வியாளருக்கு தர உதவும் அந்த காரணிகள்.
1 கேள்வி கேட்ட நேரத்தில் இருக்கும் கிரஹநிலை
2 ஜோதிடருடய வலது, இடது சுவாச நிலை
3 ஜோதிடருடய மன நிலை
4 கேள்வியாளா நிற்கும் இடம்
5 கேள்வியாளர் தன் உடலில் தொடும் உறுப்பு
6 ஆருட ராசி என்று சொல்லக்கூடிய பிரஸ்ன லக்னம்
7 ஆருட ராசி குறிப்பிடும் திசை
8 கேள்வியாளா சொல்லும் முதல் வார்;த்தையின் எழுத்து
9 கேள்வியாளரின் அசைவுகள்
10 கேள்வியாளரின் மனநிலை
11 கேள்வியாளா பார்க்கும் திசை மற்றும் பொருள்
12 கேள்வியாளரின் ஆடை நிறம்
13 கேள்விகேட்கும் நேரத்தில் உண்டாகும் சப்தங்கள் முதலியன
இவைகளை மேற்கண்ட பிரஸ்ன முறைகளுக்கு கவனித்து பலன் கூறுவோமாயின் அவை மிக சரியாக இருக்குமென்பது ஆன்றோர்களின் கருத்தாகும்.
The method of prasanam is explained crystal clearly . Thank you sir.