Please return following links to the footer:
Designed by WordPress Themes for Free, thanks to: CrocoThemes.com, JDis.co and SJThemes.com
பத்தாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பாதால் ஏற்படும் பலன்கள் |

பத்தாம் பாவத்தில் கிரகங்கள் இருப்பாதால் ஏற்படும் பலன்கள்

பத்தாம் பாவத்தில் சூரியன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மிகுதியான திறமை, வீரம், செல்வம், வாகனம், உறவினர், மக்கட்பேறு உள்ளவர், தொடங்குகின்ற தொழில்களில் வல்லமையும், புகழும் பெயரும் உண்டு.

பத்தாம் பாவத்தில் சந்திரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

எப்போதும் துன்பமின்மை, ஒரே செயலில் முழுக்கவனமும் செலுத்துதல், உடனுக்குடன் செயல்களை செய்து முடித்தல், செல்வ பெருக்கம், கூடுதல் வலிமையும், வீரராகவும், இரக்க குணமுள்ளவராகவும் இருப்பவர்.

பத்தாம் பாவத்தில் செவ்வாய் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அனைத்து செயல்களிலும் மகிழ்ச்சியுடன் காணப்படுதல், வீரம், மற்றவரால் எதிர்க்கப்படாதவர், முக்கியமான மனிதர்களால் சகவாசம் செய்பவர், மக்கட்பேறு, இன்பம், பெரும்புகழ் உடையவர்.

பத்தாம் பாவத்தில் புதன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

மேன்மையான அறிவுடையவர், செயல்களில் முழு ஈடுபாடு தொடங்குகின்ற செயலை பூர்த்தி செய்தல், வீரர், உண்மையுடையவர், அலங்கரித்து கொள்வதில் விருப்பமுள்ளவர், இன்பமுடையவர்.

பத்தாம் பாவத்தில் குரு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

தொடங்கிய செயலை விருப்பம் போல் பூர்த்தி செய்தல், அனைத்து வசதிகளுடன் கூடுதல் நன்மையும், இன்பமும், செல்வமும், மக்களும், சுகபோகமும், வாகனங்களும், புகழும் உடையவர்.

பத்தாம் பாவத்தில் சுக்கிரன் இருந்தால் ஏற்படும் பலன்கள்:

அறிவாளி, புகழுடையவர், கௌரவம் மற்றும் பற்பல தொழில்கள் மூலம் ஈட்டப்பட்ட பொருளும் இன்பமும், மனைவியும் மக்கட்பேறும் உள்ளவர், கவரக்கூடியவர், கலைத்துறையில் பிரகாசிப்பவர்.

பத்தாம் பாவத்தில் சனி இருந்தால் ஏற்படும் பலன்கள்:

செல்வந்தர், புலவர், வலிமையுள்ளவர், அமைச்சர் அல்லது ஒரு நிர்வாக தலைவராக இருப்பார், சங்கம், கிராமம், நகரம், மற்றும் நாட்டிற்க தலைமை தாங்குபவர், சிறந்த நிர்வாகி

பத்தாம் பாவத்தில் ராகு இருந்தால் ஏற்படும் பலன்கள்:

புகழ் உடையவர், அச்சம் இல்லாதவர். குழந்தைகள் அதிகமாக இராது, பிறர் செயல்களில் ஈடுபடுபவர். நற்செயல் ஏதும் செய்யாதவர்.

பத்தாம் பாவத்தில் கேது இருந்தால் ஏற்படும் பலன்கள்:

நற்செயல்களில் தடை உள்ளவர். தூய்மை இல்லாதவர். தீய செயல் புரிபவர். தைரியம், புகழ், ஆற்றல் உடையவர்.

Leave a reply

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <s> <strike> <strong>

Enable Google Transliteration.(To type in English, press Ctrl+g)