ஆறாமாதிபன் லக்கினத்தில் இருந்து தசை நடத்தினால் எப்பொழுதும் நோயளியாக அல்லது கடனாளியாக இருப்பதும் விபத்துக்குள்ளாக நேர்தலும் வழக்கு வியாஜ்ஜியங்களில் மனோ துக்கம் அடைதலும் மரணத்திற்குச் சமமானகண்டங்களும் ஏற்படும்.
ஆறாமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் நிலையான தனமில்லாது அவதிபடுதல் தன் சொத்துக்கள் அன்னியரால் கவரப்படல் வாக்கினால் விரோதங்கள் ஏற்படுதல் குடும்ப சுகமின்மை முதலான தீயபலன்கள் நடைபெறும் பகைவர் அல்லது கள்வராலும் நோய்களாலும் பொருள் நஷ்டங்கள் உண்டாகும்.
ஆறாமாதிபன் மூன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பொருள் லாபங்களும் அன்னியர் பொருள்களை தான் அபகரித்தலும் நண்பர்கள் சகோதரர்களுடன் விரோதங்களும் பொய் வஞ்சகம் கோள் சொல்லுதல் போன்ற கெட்ட குணங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் நான்காம் இடத்திலிருந்து தசை நடத்தினால் தரித்திரம் எவ்விதத்திலும் சுகம் இல்லாமை சரியான கல்வி இல்லாததால் கீழான வேலைகளைச் செய்து பிழைத்தல் கஷ்ட ஜீவனம் முதலானவை உண்டாகும்.
ஆறாமாதிபன் ஐந்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் புத்திர நஷ்டங்களும் புத்திர விரோதங்களும் உண்டாகும் அதிகமான கல்வி வசதியோ சூட்சும அறிவோ ஏற்படாத போதிலும் குறுக்கு வழிகளில் பணம் சம்பாதித்தலும் திருட்டு புத்தியும் தீயவர் நேசமும் கெட்ட காரியங்களில் மனம் செல்வதும் பெண்களிடம் விரோதமும் உண்டாகும்.
ஆறாமாதிபன் ஆறாமிடத்திலிருந்து தசை நடத்தினால், முரட்டுத் தைரியமும் வீரசாகச செயல்களில் விருப்பமும் அவ்வழியே பணம் சம்பாதித்தலும் தன்னுடைய சொந்த பந்துக்களை விரோதம் செய்து கொண்டு அந்நிய பந்துக்களை அடைவதும் சத்துரு ஜெயமும் அதனால் பணவசதிகளும் உண்டாகும் திடீரென்று கண்டங்களும் ஏற்படலாம்.
ஆறாமாதிபன் ஏழாமிடத்திலிருந்து தசை நடத்தினால் மனைவிக்கு தனக்கு விரோதமாகவும் அல்லது பயத்தால் அடங்கி ஒடுங்கி நடப்பதும் பகை இல்லாமையும் கல்வி செல்வம் இருந்தபோதிலும் தொழில் முதலானவற்றிலும் ஈடுபாடு கொள்ளாமலும் யார்மேலும் நம்பிக்கை இல்லாமல் இருப்பதும், அற்ப லாபங்களும் அற்ப சுகங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் அஷ்மத்தில் இருந்து தசை நடத்தினால் திடீரென்று மரணபயம் உண்டாகும் அல்லது சதா ரோகத்துடன் அழுந்திக்கொண்டு கிடக்க நேரிடும். பெண்ணாக இருந்தால் கணவன் மரணமடைவான் தரித்திரமும் கஷ்டங்களும் பலவிதமான துக்கங்களும் உண்டாகும்.
ஆறாமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தந்தை, தந்தையின் சொத்துக்கள் முதலானவற்றை இழக்க நேரிடுவதும் சுகபாக்கியங்கள் குறைவும் மரம் வெட்டுதல், கல் உடைத்தல் போன்ற தொழில்களைச் செய்து ஜீவிக்க நேர்வதும் உண்டாகும்.
ஆறாமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தொழில் முடக்கமும், அன்னியர் தயவால் பிழைக்க நேர்வதும் புகழ்கீர்த்தி நஷ்டமும் உண்டாகும் தொழில் அல்லது வியாபாரத்தில் கடன்காரர் அபகரித்துக் கொள்வார்கள் நோயால் பொருள் நாசம் உண்டாகும்.
ஆறாமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் கஷ்ட ஜீவனமும் மூத்த சகோதரனுக்கு கண்டமும் அன்னிய பெண்களின் சேர்க்கையும் அதனால் பொருள் நஷ்டங்களும் உண்டாகும். அன்னியருடைய சொத்துக்கள், பெண்கள் மேல் நாட்டமும் அவற்றைத் தனக்கு உடைமை ஆக்கிக்கொள்வதும் உண்டாகும்.
ஆறாமாதிபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால், கல்நெஞ்சமும் ஜீவஹிம்சையும், பாவகாரிய சிந்தனையும் கொலை களவு காமம் போன்ற தீய வழிகளிலேயே நடப்பதும் அவ்வழியிலேயே பணத்தைச் சேர்த்துக் தானும் அனுபவிக்காமல் புதைத்து வைப்பதும் தலைமறைவாக வசிக்க நேர்வதும் உண்டாகும்.
Leave a reply