நான்காமாதிபன் லக்கினத்தில் தசை நடத்தினால் உயர்ந்த கல்வியை அடைவதும் தாயால் சுகமும் எப்பொழுதும் சொந்த வீடு வாகனம் முதலான வசதிகள் உடைய வாழ்க்கை உண்டாவது, தன்னுடைய கல்வி செல்வம் முதலானவற்றை விளம்பரப்படுத்தி கொள்ளாமல் அடக்கமாகப் போகும் சுபாவமும் உண்டாகும்.
நான்காமாதிபன் இரண்டாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் நிலம் வீடு வாகனங்கள் முதலானவற்றிலிருந்து வருமானங்களும் தான் கற்ற வித்தையால் நல்ல சம்பாத்தியமும் உண்டாகும். ஆசை நாயகிகள் ஏற்படுவர் கெட்ட சகவாசங்களும் உண்டாகும். சகல வசதிகளும் உடைய வாழ்க்கை அமையும்.
நான்காமாதிபன் மூன்றாம் இடத்திலிருந்து தசை நடத்தினால் தன் சகோதரர்களுக்கு சுகபாக்கியங்கள் விருத்தியாகும். செல்வமும் வசதிகளும் இல்லாத வாழ்க்கையை அனுபவிக்க நேரிடும்.
நான்காமாதிபன் நான்காம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் மேலான கல்வியும் ஞானமும் புத்தியும் உண்டாகும். மந்திரி பதவி போன்ற பெரிய பதவிகள் உண்டாகும். பலவிதமான சுகங்களும் சௌக்கியங்களும் உண்டாகும் உற்றார் உறவினர், சகோகரர்கள் பந்துக்கள் புடை சூழ எல்லோருக்கும் இனியவனாக வாழ்க்கை நடத்துவான்.
நான்காமாதிபன் ஐந்தாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் மிகவும் மேலான வாழ்க்கையே உண்டாகும் பக்தியும் மேலான விஷயங்களில் ஈடுபாடும் சொந்த சம்பாத்தியங்களால் மேன்மையும் உண்டாகும்.
நான்காமாதிபன் ஆறாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் பகைவர்களால் சுபக்குறைவும் தன் வீடு முதலான சொத்துக்கள் அன்னியர்களால் அபகரிக்கப்படுதலும் தன் தாயே தன் விரோதமாதலும் திருட்டுத்தனம் போன்ற கெட்ட காரியங்களில் பிரவேசமும் பில்லி சூனியம் போன்றவைகளால் கஷ்டங்களும் உபாதைகளும் உண்டாவதுமாகும்.
நான்காமாதிபன் ஏழாம் இடத்தில் இருந்து தசை நடத்தினால் தன் மனைவியால் சுகபாக்கியங்கள் அடைய நேரிடும். மாமனார் வீட்டு மாப்பிள்ளையாக ஆகிவிடுவதும் உண்டு. மற்றவர் முன்னிலையில் ஊமைப்போல் இருக்கும்படியான நடத்தையும் ஏற்படும். வித்தை வாகனம், புகழ் எல்லா வசதிகளம் உண்டாகும்.
நான்காமாதிபன் எட்டாமிடத்தில் இருந்து தசை நடத்தினால் ஏதாவத ஒரு முயற்சியில் சுகங்களைத் தியாகம் செய்து வாழ நேரிடும். பெரிய விஞ்ஞானிகள், புதுமைகளைக் கண்டு பிடிப்பவர்கள் யாத்ரீகர்கள் மலை ஏறிகள் ஞானிகள் முதலியவர்களின் ஜாதகங்களில் இப்படிப்பட்ட கிரக அமைப்பு ஏற்படுவதுண்டு.
நான்காமாதிபன் ஒன்பதாமிடத்திலிருந்து தசை நடத்தினால் பித்ரு பாக்கியத்தினால் சுகபாக்கியங்களை அடைவதும் கல்வி மேன்மையும் வாகனசுகமும், தந்தையின் தொழில் அல்லது அவரால் ஸ்தாபிக்கப்பட்ட வியாபார ஸ்தாபனத்தால் மேன்மையும் சகல சுகங்களும் உண்டாகும். டாக்ஸி, பஸ் தொழில்கள் மேன்மையடையும்.
நான்காமாதிபன் பத்தாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தொழில் மேன்மையால் சுகபாக்கியங்களை அடைவான். தன் சொந்த முயற்சியால் ஒரு தொழிலை ஸ்தாபித்து பிரபலமாக மேன்மைக்கு கொண்டு வர முடியும் தீர்த்த யாத்திரை ஸ்தலதரிசனம் போன்ற புண்ணிய லாபங்களும் ஏற்படும்.
நான்காமாதிபன் பதினொன்றாமிடத்திலிருந்து தசை நடத்தினால் தன் முயற்சி இன்றியே சகல சுகபோகங்களும் வந்தடைவதும் பொழுது போக்காக செய்யும் தொழில்களாலும் நல்ல லாபங்களும் ஆயினும் மனதில் ஏதாவது ஒரு குறை இருந்து கொண்டே இருப்பினும் இளமையிலேயே தாயை இழந்து விட நேர்வதும் உண்டு.
நான்காமாதிபன் பனிரெண்டாமிடத்திலிருந்து தசை நடத்தினால் எப்போதும் நோயாளியாக இருப்பான். தன் சொந்த முயற்சியில் சுயராஜ்ஜித சொத்துக்களைச் சம்பாத்திப்பான் பலவித தான தர்மங்களைச் செய்து புகழடைவான். எவ்வளவு சம்பாதித்த போதிலும் தான் ஒரு சுகத்தையும் அனுபவிக்க முடியாமல் மனக்குறையுடன் இருக்கும்படி நேரிடும்.
Leave a reply