ஜோதிடம் என்பது 9 கிரஹங்களையும் 27 நக்ஷத்திரங்களையும் ஆதாரமாகக் கொண்டுள்ளது. கிரஹங்கள், இராசிகள் மற்றும் பாவங்கள் இவையே ஜோதிடத்தின் அடிப்படை ஆகும்.
இராசிகள்:
வானமண்டலத்தில் மேஷம். ரிஷபம். மிதுனம், கடகம், சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம், மீனம் என்ற 12 பிரிவுகளாகும். இதன் ஒவ்வொரு பிரிவும் 30 பாகைகள் கொண்ட அமைப்பாகும்.
கிரகங்கள்:
சூரியன், சந்திரன், செவ்வாய், புதன், குரு, சுக்கின், சனி, ராகு. மற்றும் கேது என 9 கிரஹங்கள் வேதாங்க ஜோதிடத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இவற்றின அலைவரிசை பூமியில் வசிக்கும் மனிதனுக்கு மாற்றங்களை ஏற்படுத்துகிறது. எனவே கிரஹங்களின் மாற்றத்தினை கூர்ந்து கவனிக்கும் போது மனிதனுக்கு ஏற்படும் மாற்றங்களையும் முன்னரே அறீய முடிகிறது.
நட்சத்திரங்கள்:
அசுவினி, பரணி, கிருத்திகை, ரோகினி, மிருகசீரிடம், திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், பூரம், உத்திரம், அஸ்தம், சித்திரை, சுவாதி, விசாகம், அனுஷம், கேட்டை, மூலம், பூராடம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என 27 ஆகும்.
.