சூரியன் 1 முதல் 3 பாவம் வரை உள்ளபலன்
1
ஆரோக்யம் பவதி- பித்த பிரக்ருதி-நேத்ரேரோகி-மேதாவி-ஸதாசாரி வா-உஷ்னோதரவான் மூர்க: – புத்ரஹீன: -தீஷ்னபுத்தி:-அல்பபாஷி பிரவாஸசீல:-சுகி- ஸ்வச்சே கீர்த்திமான்- பலிநிரிக்ஷிதே வித்வான்- நீசே பிரதாபவான்-ஞானத்வேஷி- தரித்ர: அந்தக:-சுபத்ருஷ்டே ந தோஷ: -சிம்கி ஸ்வாம்ஸோ நாத:-குலிரே ஞானவான் ரோகி புதபுதாக்ஷ-மகரே ஹ்ருத்ரோகி- மீனே ஸ்திரிஜன ஸேவி-கண்யாயாம் ரவோ கண்யாப்ரஜ:- தாரஹீன: க்ருதக்ன: க்ஷேத்ரி-சுபயுக்தக: ஆரோக்யவான் பாபயுதே சத்ரு நீச க்ஷேத்ரே த்ருதீய வருஷே ஜ்வரபீட:-சுப த்ருஷ்டே ந தோஷ:
ஆரோக்கியம் உண்டு, பித்த தேகம், கண் நோய் பாதிப்பு, விவேகம், அனுபவ அறிவு உள்ளவர், நன்னடத்தை, உஷ்ண தேகி, யோசிக்காமல் செயல்படுபவர், குழந்தை பெறுவதில் தடை, புத்திசாலி, குறைவாக பேசுபவர், தன் இடத்தை விட்ட நீங்கி வெளியிடத்தில் அலையும் தனமையுள்ளவர், மகிழ்ச்சியானவர்.
மேஷராசி லக்கினமாகி அதில் உச்சம் பெற்று அமரும் சூரியன்-பெயரும், புகழும் தருவார். மேலும் சுபர் பார்வை பெற்றால் மிகுந்த கல்வி அறிவு உள்ளவராக இருப்பார். துலாராசி லக்கினமாகி அதில் நீச்சம் பெற்று அமரும் சூரியன் மரியாதை தருவார்.ஆனால் கல்வியறிவற்றவர், ஏழ்மைநிலை, குருடர். நீச்ச மடைந்த சூரியனை சுபர் பார்த்தால் தீய பலன் ஏற்படாது
சூரியன் ராசி அல்லது நவாம்சத்தில் சிம்மத்தில் அமர்ந்தால், ஒரு நிலப்பகுதியின் அதிபராவார். .
கடக லக்னத்தில் சூரியன் மதிநுட்பம் மிக்கவர் ஆனால் உடலில் கொப்புளம், கட்டிகளால் துன்புறுவர். மகர லக்னத்தில் சூரியன் இதய நோய் தரும். மீன லக்னத்தில் சூரியன் பெண்களிடம் கீழ்படிந்தவர். கன்னி லக்னத்தில் சூரியன் ஜாதகருக்கு பெண் குழந்தைகளே பிறக்கும். மனைவி இறப்பர், நன்றி மறந்தவர்.சுபர் சேர்ந்தால் நல்ல உடல் நலம் உண்டு
சூரியன் தீய கோள்கள் தொடர்பு பெற்றாலும், நீச்சம் அடைந்தாலும், பகை வீட்டில் அமர்ந்தாலும் தன் மூன்றாவது வயதில்ஜாதகர் உஷ்ண நோயால் பாதிக்கப்படுவர். நற்கோள்கள் பார்வை இருந்தால் தீய விளைவுகள் இல்லை.
2
முக ரோகி- பஞ்ச விம்சாதி வருசே ராஜதன்டேந த்ரவ்யச்சேத:- உச்சோ ஸ்வக்ஷேத்ரே வா ந தோஷ:- பாபயுதே நேத்ர ரோகி- ஸ்வல்பவித்வான்-ரோகி- சுபவீக்ஷிதே தனவான்- தோஷாதீன் வ்யபஹரதி- நேத்ரேசௌக்யம்- ஸ்வோச்சே ஸ்வ க்ஷேத்ரே வா பகுதனவான்-புத்யுதே பவனவாக் தனாதிப:-ஸ்வாச்சே வாக்மி சாஸ்த்ரஞ்ச ஞானவான்- நேத்ரசௌக்யம் ராஜயோகஸ்ச
ஜாதகர் முகத்தில் காயங்கள் ஏற்படும்,வாய் புண்ணால் துன்பறுவர். 25ம் வயதில் அரச கோபத்திற்கு ஆளாகி தனது செல்வத்தை இழப்பர். மேஷம். சிம்மம் 2ம் மிடமாக இருந்தால் தோஷமில்லை,
தீய கோள் தொடர்பு பெற்றால் ஜாதகர் கண் நோய் அடைவர். சாஸ்திரங்களில் குறைந்த அறிவு உடையவர், உடல் நலமாக இராது,. நற்கோள் பார்த்தால் செல்வம் உண்டு, தோஷம் இல்லை, உடல் நலமும், கண்பார்வையும் தெளிவுறும். 2ல் சூரியன் உச்சம், ஆட்சி பெற்றால் நிறையசெல்வமுண்டு. 2-மிடத்தில் புதன், சூரியன் சேர்ந்தால் திக்குவாய் வரும். 2ல் சூரியன் உச்சம் பெற்றால் ஜாதகர் சுருக்கமாக தெளிவாகப் பேசுவார். சாஸ்த்மிர அறிவு நிரம்பியிருக்கும். கற்றவர், நல்ல கண் பார்வை உடையவர். இது ராஜயோக அமைப்பு. பெயர், பகழ், வெல்வம் தரும் அமைப்பு.
3
புத்திமான்-அநுஜரஹித: ஜ்யேஷ்ட நாசா:- பஞ்சமே வர்சே சதுரஷ்டத்வாதசவர்சே வா கிம்சித்பீடா பாபயுதே க்ரூரகர்தா த்விப்ராத்ருமான் பராக்ரமி யுத்தே சூரஸ்ச கீர்திமான் நிஜதனபோகி-சுபயுதே சோதரவ்ருத்தி:-பாவாதிபே .பலயுதே ப்ராத்ருதீர்காயு பாபயுதே பாபேக்ஷனவம்சாந்நாச: சுபவீக்ஷின வசாத்தநவான் போகி சுகி ச
3-ம் பாவத்தில் சூரியன் இருந்தால் புத்திசாலி, சகோதரர் சண்டை, மூத்த சகோதரர் நீண்ட நாள் உயிர் வாழமாட்டார், 4 , 5 , 8, 12ம் வயதுகளில் நோய்வாய்ப படுவார். சூரியன் தீய கோள்களுடன் சேர்க்கைப் பெற்றால் ஜாதகர் கொடுஞ்செயல்களைச் செய்வார்.
இரண்டு சகோதரர்கள் உண்டு, வலிமையானவர், தைரியமானவர், சண்டையிடுபவர், புகழ், செல்வம் உள்ளவர். நற்கோள்கள் பார்வைப் பெற்ற சூரியன் சகோதரர்களுக்கு நல்ல ஆயுளை தருவார். 3-ம் அதிபதி வலிமையாக இருந்தால் சகோதரர்களுக்கு நீண்ட ஆயுள். -ம் அதிபதி பாபர்களுடன் வம்சம் அழியும். நற்கோள்கள் பார்வைசெய்தால் செழுமை, வலிமை, மகிழ்ச்சி, செல்வம், உடல்நலம் உண்டாகும்.
Leave a reply