விம்சோத்தரி தசை- வானியல் விளக்கம்
தசைகளிலே விம்சோத்தரி தசை முறை மட்டுமே மிகுந்த பலன் அளிக்ககூடியது என பராசரரிஷி கூறுகிறார். இத்தசைக்கான வரிசைகிரமம் பல்வேறு கருத்துகளால் பலவாறாக கூறப்படுகிறது. எனினும் இத்த்சைக்கான வரிசைகிரமத்தினை வானியலோடு தொடர்புபடுத்தி பார்க்கலாம் சூரியக்குடும்பத்தில் சூரியனை மையமாகக் கொண்டு புதன், சுக்கிரன், பூமி, செவ்வாய், குரு, சனி முதலிய கிரகங்கள் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியின் துணைக்கோள் சந்திரன் ஆகும். எனவே கிரக அமைப்பு கீழ்க்கண்டவாறு அமையும்.
சூரியன், புதன், சுக்கிரன், பூமி, சந்திரன், செவ்வாய், குரு, சனி
சூரியன் மற்றும் பூமிக்கு இடையில் உள்ள உள் வட்டத்தில் புதன் சுக்கிரன் உள்ளன. எனவே இவற்றை உள் வட்ட கிரகம் என்கிறோம். பூமிக்கு வெளி வட்டத்தில் செவ்வாய், குரு, சனி உள்ளன. எனவே இவற்றை வெளிவட்ட கிரகங்கள் என்கிறோம். இவற்றுள் புதன், சுக்கிரனுக்கு இடையில் கேதுவையும் செவ்வாய் குருவிற்கு இடையில் ராகுவையும் வைக்கவும். அது கீழ்க்கண்டவாறு அமையும்.
சூரியன், புதன், கேது, சுக்கிரன், பூமி, சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி
ஜோதிடத்தில் பூமியை மையமாக கொண்டு கணிதம் செய்யப்படுகிறது. எனவே சூரியன் இருக்கும் இடத்தில் பூமியையும் பூமி இருக்கும் இடத்தில் சூரியனையும் வைக்கவம். அது கீழ்கண்டவாறு அமையும்.
பூமி, புதன், கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி
தற்போது பூமியில் இருந்தே கிரகங்களைக் காண்கிறோம். எனவே பூமியைத் தவிர்த்து பிற கிரகங்களை வாசிக்கவும். இதுவே தசை வரிசையின அமைப்பாகும். புதன் முதல் சந்திரன் வரையிலுள்ள தசை வருடங’களைக் கூட்ட அறுபது வருடங்கள் கிடைக்கும். செவ்வாய் முதல் சனி வரையுள்ள தசை வருடங்களைக்கூட்ட அறுபது வருடங்கள் கிடைக்கும்.
Leave a reply