ஜாதக பலன்கள் நடை பெறும் காலங்களை அறிய தசா புக்தி முறை பயன்படுத்தப்படுகிறது. ஒரு வீட்டின் பலனை, அவ்வீட்டின் அதிபதி. அவ்வீட்டில் நின்ற கிரகங்கள். ஆவ்வீட்டைப் பார்க்கும் கிரகங்கள். அவ்வீட்டு அதிபதியுடன் சேரந்திருக்கும் கிரகங்கள் மற்றும் பார்க்கும் கிரகங்கள் என பல கிரகங்களால் நிர்ணயிக்கப்படுகின்றன.
அவ்வாறே ஒவ்வொரு கிரகமும் தருகிற பலன் கணிக்கப்பட்டு இறுதியாக அனைத்து கிரகங்களும் அவ்வீட்டிற்குத் தரும் பலன் முடிவு செய்யப்படுகிறது. அதன்படியே அவ்வீட்டின் பலன் நடைபெறும்.
இருந்தாலும் ஒரு வீட்டின் தொடர்பு பெறும் கிரகங்கள் குறிப்பிட்ட காலத்தில் தாம் மட்டுமே வழங்க வேண்டிய சுப அசுப பலன்களை வழங்குகின்றன. அந்த குறிப்பிட்ட காலத்தையே தசை. புத்தி, அந்தரம் என்கிறோம்.
360 பாகைகள் கொண்ட ராசி மணடலம் 120 பாகைகள் கொண்ட 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதல் பகுதி மேஷத்திலும், இரண்டாம்பகுதி சிம்மத்திலும், 3ம் பகுதி தனுசிலும் தொடங்கும். ஒவ்வொரு பகுதியில் உள்ள 120 பாகையே 13.20 பாகை கொண்ட 9 பிரிவுகளாக பிரிக்கப்படுகின்றன. எனவே 3 பகுதிகளிலும் 27 பிரிவுகள் இருக்கும். இவையே நக்ஷத்திரங்கள் எனப்படும். ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் குறிப்பிட்ட கிரகமே அதிபதியாக வரும். உதாரணமாக அஸ்வினிக்கு கேது, பரனிக்கு சுக்கிரன் என வரிசைகிரமமாக அதிபதிகள் அமைவர். இந்த அதிபதிகளையே தசைநாதன் என்று கூறுகிறோம்.
சந்திரன் பாகை 13.20க்கள் இருந்தால்; அவர் அசுவணி நட்சத்திரத்தில் உள்ளார் என்றும் அசுவணி நட்சத்திரத்திற்கு உரியது கேது தசை என்றும் கேது தசையின கால அளவு 7 வருடங்கள் என்றும் அறியப்படுகிறது. சந்திரன் பாகை 26.40 க்குள் இருந்தால் அவர் பரணி நட்சத்திரத்தில் இருக்கிறார் என்றும் அதற்குரிய தசை சுக்கிரன் எனவும் அட்;டவணையின் மூலம் அறியப்படுகிறது
கேது, சுக்கிரன், சூரியன், சந்திரன், செவ்வாய், ராகு, குரு, சனி, புதன் என தசை அதிபதிகள் நிலையான வரிசை முறையில் அமைகிறார்கள். இதன்படி ஒருவர் கேது திசையில் பிறந்தால் கேது தசை முடிந்தபின் சுக்கிரதசை, சூரிய தசை, சந்திர தசை என தசைகள் வரிசைமுறையில் அடுதடுத்து வரும். ஒருவர் சந்திரன் தசையில் பிறந்தால் சந்திரன் தசை முடிந்தபின் செவ்வாய், ராகு என தசைகள் அடுதடுத்துவரும்.
புத்திகள்
தசைகள் கால அளவு அதிகமாகும். இதனை தசை வரிசை அடிப்படையிலேயே 9 பிரிவுகளாகப் பிரித்து புத்தி என்கிறோம். oஒவ்வொரு தசையின் கால அளவு மாறுவதுபோல் ஒவ்வொரு புத்தியின பாகை அளவு மாறுபடும். இதனை கணிக்கும் முறையைக் காண்போம்.
120 வருடங்கள் அல்லது பாகைகள் கொண்ட தசைக்காலத்தில் கேதுவின் கால அளவு 7 வருடங்கள் ஆகும். ஒரு நட்சத்திரத்தின் அளவு பாகை 13.20 ஆகும். எனவே கேது புக்தியின் பாகை அளவைக் காண்போம்.
பாகை 13.20ல் மொத்தம் 800 கலைகள் உள்ளது. விம்சோத்தரி தசையின் மொத்த வருடம் 120 ஆகும். எனவே
7 x 800=5600/120=46.66. அதாவது 46 கலையும் உதிரி எண் 66 என்பது தசமத்தில் உள்ளது. இதை கலைகளாக மாற்ற 66×60/100=40 விகலைகள் வரும். எனவே கேது புத்தியின் அளவ பாகை 0, கலை 46, விகலை 40 ஆகும். இதேபோல் பாகை அளவை கணிக்கவும். அது கீழ்க்கண்டவாறு அமையும்.
புத்திகள் நட்சத்திரங்கள் அமையும் அளவு:-
புத்தியின் கால அளவை கணித்தல்:-
குறிப்பிட்ட திசை மற்றும் புத்தியின் காலத்தை பெருக்கி கிடைக்கும் மதிப்பின் கடைசி இலக்கத்திற்கு முன் புள்ளி வைக்கவும்.
புள்ளிக்கு இடதுபுறம் உள்ள எண் முழு எண்ணாகவும், வலது புறம் உள்ள எண் உதிரி எண்ணாகவும் கருதப்படும். முழு எண் குறிப்பிட்ட தசை புத்தியில் உள்ள மாதங்களைக் குறிக்கும். விரும்பினால் வருடங்களாக மாற்றிக் கொள்ளலாம். உதிரியை 3 ல் பெருக்க நாட்கள் கிடைக்கும். ராகு திசையில் குரு புத்தியின் கால அளவைக் காண்போம்.
ராகு தசை- 18 வருடம்
குரு தசை- 16 வருடம்
18 x 16= 288 இதில் 28 என்பது முழு எண்னாகவும் 8 என்பது உதிரி எண்ணாகவும் உள்ளது. 8 என்பதனை 3 ல் பெருக்க 24 கிடைக்கும். 28 மாதங்கள் மற்றும் 24 நாட்கள். இதனை வருடம் 2 மாதம் 4 நாள் 24 எனவும் அறியலாம்
அந்தரம்
அந்தர காலம் அறிதல் :
குறிப்பிட்ட தசை, புத்தி, மற்றும் அந்தர வருடங்களைப் பெருக்கி 40ல்வகுத்தால் கிடைக்கும் மதிப்பு அந்தர நாட்களைக்குறிக்கும். தேவைப்பட்டால் 30 ல் வகுத்து மாதங்களாக மாற்றிக் கொள்ளலாம்.
ராகு தசை குரு புத்தி சனி அந்தர கால அளவு :
18 x16 x 19=5472 இதனை 40 ல் வகுகக 136.8 இதுவே நாட்கள் ஆகும். 30 ல் வகுக்க
4 மாதம். 16 நாட்கள் 19மணி 12 நிமிடம ஆகும்.
Leave a reply