வானசாஸ்திரத்தில் நவகிரஹம்
வானசாஸ்திரம் என்பது சூரியன், சந்திரன், கோள்கள், ராகு, கேது, விண்மீன்கள், எரிநக்ஷத்திரங்கள் போன்றவற்றின் நிலை மற்றும் சுழற்சியை அடிப்படையாக வைத்துக் கொண்டு புயல்,கடல் சீற்றம், தட்பவெட்பநிலை, காற்றழுத்தம்,மழை,மேகம் மூட்டம் கண்டறிதல், அடைமழை ஆகிய வெறும் இயற்கை நிகழ்ச்சியை மட்டும் கண்டறிவதாகும். ஜோதிஷம் என்பது மனித வாழ்வில் ஏற்படக்கூடிய இன்பம், துன்பம், செல்வச்செழிப்பு, வறுமை மற்றும் ஆயுள் ஆகிய நிகழ்வுகளை கோள்கனின் சஞ்சாரத்தை வைத்து கூறப்படுகின்றன.வானசாஸ்திரத்திற்கும் ஜோதிஷத்திற்கும் முழுவதுமாக தொடர்பு இல்லையென்றலும் சில தொடர்புகள் உள்ளன. உதாரணமாக அமாவாசை, பௌர்ணமியின் போது கடல் சீற்றம் அதிகரிப்பதை பார்க்கலாம். அது போன்று நோயாளிகளுக்கும் அந்நேரத்தில் நோயின் தன்மை அதிகரிக்கும். இதனைத்தான் முன்னோர்கள் வழக்கத்தில் “அமாவாசை கழிந்தால் உயிருக்கு வந்த கண்டம் கழிந்ததென்று” சொல்வார்கள். மேலும் மனநோயாளியானவர்களுக்கு அதன் தாக்கம் அதிகரிக்கும். இதனை அனுபவத்தில் உணர்கின்றோம்.
சூரியன்
வேதங்களில் சூரியனை அரசன், நோய்களை போக்குபவன், ஒளிகளை உண்டாக்கினவன் என்று ரிக், யஜுர், சாம, அதர்வன வேதங்கள் கூறுகின்றது. பூமியிலிருந்து சுமார் 9,28,30,000 மைல்கள் தூரத்தில் உள்ளது. இதன் குறுக்களவு சுமார் 8,70,000 மைல்கள். கன அளவு பூமியைப் போல 18,00,000 மடங்காகும். சூரியன் தன்னைத் தானே சுற்றி வருவதற்குச் சுமார் ஒரு மாத காலமாகிறது. 12 ராசிகளையும் 365 நாள், 15 நாழிகை, 32 வினாடிகளில் சுற்றி வருகிறது.
சந்திரன்
வேதங்களில் சந்திரனை அரசி என்று அழைக்கிறார்கள். மூலிகைகளுக்கு தலைவி, செல்வத்தை அளிப்பவள் என்றும் கூறுகின்றது. சந்திரன் பூமியிலிருந்து சுமார் 27,38,000 மைல்கள் தூரத்தில் இருந்து சுற்றி வருகிறது. இதன் சுற்றளவு சுமார் 6,800 மைல்கள். குறுக்களவு சுமார் 2,162 மைல்களாகும். சந்திரன் பூமியை சுற்றி வருவதற்குச் 27 நாட்கள் 8 மணியளவில் எடுத்துக் கொள்கிறது.
செவ்வாய்
வேதங்களில் செவ்வாய் இரத்த மாவீரன், சிவந்த மேனியை உடையவன் என்று கூறுகின்றது.
சூரியனுக்கு நான்காவது வட்டத்தில் சுமார் 14,10,00,000 மைல்களுக்கு அப்பால் இருந்து கொண்டு சூரியனை சுற்றி வருகிறது. 24 மணி, 23 விநாடிகளை எடுத்துக் கொள்கிறது.
புதன்
வேதங்களில் புதன், ராகுவால் ஏற்பட்ட நோய்களை தீர்ப்பான் என்றும் பச்சை மேனியை உடையவன் என்றும் கூறுகின்றது. புதன் சூரியனுக்கு 60,00,000 மைல்களுக்கு அப்பால் இருந்து 24 மணி நேரத்தில் தன்னைத் தானே சுற்றி வரும். 88 நாட்களில் சூரியனை சுற்றி வரும். இதன் சுற்றளவு 9,500 மைல்கள் குறுக்களவு சுமார் 3,000 மைல்கள் பூமியிலிருந்து 5,70,00,000 மைல்கள் தூரத்தில் உள்ளது.
வியாழன்
வேதங்களில் வியாழன் மஞ்சள் வண்ண ஆடையை அணிந்தவன், பொன்னிற மேனியை உடையவன் என்று கூறுகின்றது. வியாழன் சூரியனுக்கு 5 வது வட்டத்தில் உள்ளது. சூரியனிலிருந்து சுமார் 68,00,00,000 மைல் தூரத்திற்க்கப்பால் இருந்து கொண்டு 12 ஆண்டுகளில் சூரியனை சுற்றி வருகிறது. இது தன்னைத் தானே சுற்றி வர 9 மணி 55 நிமிடங்கள் எடுத்துக்கொள்கிறது.
சுக்கிரன்
வேதங்களில் சுக்கிரன் அசுர குரு இறந்தவர்களை உயிர்பிக்கும் மிருத சஞ்சீவி மந்திரம் அறிந்தவர் என்றும், வெள்ளை ஆடையை அணிந்தவன் என்றும் கூறுகின்றது. சுக்கிரன் சூரியனுக்கு இரண்டாவது வட்டத்தில் சுற்றி வருகிறது. சூரியனுக்கு சுமார் 6,70,00,000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. இக்கோள் 225 நாட்களில் சூரியனை சுற்றி வருகிறது.
சனி
வேதங்களில் சனி பத்ம பீடத்தை உடையவர், நீதியரசர், கரிய நிறத்தை உடையவன், நீல மலர் மாலை அணிந்தவன் என்று கூறுகின்றது. சனி சூரியனுக்கு ஆறாவது வட்டத்தில் சுற்றி வருகிறது. சூரியனுக்கு சுமார் 88,60,00,000 மைல்களுக்கு அப்பால் உள்ளது. இது தன்னைத்தானே 10 மணி 14 நிமிடம் 24 வினாடிகளில் சுற்றி வரும். இதன் குறுக்களவு சுமார் 75,000 மைல்கள் கொண்டது.இது சூரியனை சுற்றீவர ஸ்மார் 29 1/2 வருடங்கள் எடுத்துக்கொள்கிறது.
ராகு
வேதங்களில் ராகு பாம்பு, நஞ்சு அச்சத்தை போக்குபவன், ரத்த நேத்திரன், காலரூபன், ஜால வித்தைகாரன் என்றும் கூறுகின்றது.
கேது
வேதங்களில் கேது பத்ம பீடத்தை உடையவர், நீதியரசர், கரிய நிறத்தை உடையவன் என்று கூறுகின்றது.
ராகு, கேது சூரியனை சுற்றிவர பதினெட்டரை ஆண்டுகளாகும்.
ராகு, கேது என்பன உண்மையில் கோள்கள் அல்ல. சூரியனை சுற்றி அமைந்துள்ள பூமியின் சுழற்சி வட்டபாதையில் சந்திரனுடைய பாதை குறுக்கிடும் புள்ளிகள் கோள் சந்தி எனப்படுகின்றன. இதுவே ராகு ஆகும். இவற்றுள் இறங்குகோள் சந்தியை கேது என்றும் ஜோதிடவியல் கூறுகிறது.
Leave a reply